Published:Updated:

"பஞ்சமி நிலம்... காலப்பிழையைத் தெரிந்தேதான் செய்தோம்!" - வெற்றிமாறன் நேர்காணல்

முக்கியமான ஒரு பிரச்னையான பஞ்சமி நிலம் குறித்துப் பேசுவதற்கு எனக்கு இன்னொரு களம் அமையுமா என்று தெரியாது. வெகுமக்கள் மத்தியில் இதுதொடர்பான விவாதத்தைத் தொடங்க முடியும் என்கிற நம்பிக்கை

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

'அசுரன்' அரசியல் முதல் தமிழக அரசியல்வரை வெற்றிமாறனிடம் பேசப் பல விஷயங்கள் இருக்கின்றன. பேசினோம்! விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2KmkAsp

"ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறக்காதவர் அந்தச் சமூகம் குறித்தும், அந்த மக்களின் வாழ்க்கையைக் குறித்தும் படங்கள் எடுப்பது மிகவும் சவாலானது... இதை எப்படி 'அசுரன்' படத்தில் சாத்தியமாக்கினீர்கள்?"

"ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் இயக்குநர் அவர் வாழ்க்கையை, அரசியல் நிலைப்பாட்டைப் படைப்பாக மாற்றும்போது அது நிதர்சனமாகவும், உண்மையான வலியோடும் இருக்கும். அவர்கள் வாழ்க்கையைப் பதிவுசெய்யும் முறையில் பல சுதந்திரங்களும் அவர்களுக்கு இருக்கிறது. மற்ற சமூகத்தினர் இதுபோன்ற படங்களைச் செய்யும்போது பொறுப்பு இன்னும் கூடுகிறது. எந்த அரசியல் நிலைப்பாட்டுக்காக அதைச் சொல்கிறோமோ, எந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறோமோ, அதற்கு எதிராகவே நம்மையும் அறியாமல் போய்விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனால் மிகவும் கவனத்துடன்தான் இதைச் செய்ய வேண்டும். இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதும்போது எந்த ஒரு தனிநபரையோ, குறிப்பிட்ட சமூகத்தையோ நேரடியாக விமர்சனத்துக்கு ஆட்படுத்தாமல் உணர்த்த முயல்வதுதான் எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேலும், படைப்புகளுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் என்னால் இருக்க முடியும் என்கிற நம்பிக்கைதான் 'அசுரன்' போன்ற படத்தை எடுப்பதற்கான தைரியத்தைக் கொடுத்தது."

இந்தப் படத்தில் வரும் வசனத்தை நீக்காமல் இருப்பதன் மூலமாக மக்களுக்குள் ஒரு மோதல் வரும் என்றால் இந்தப் படத்தை எடுத்ததற்கான நோக்கமே தவறாகிவிடும்.

"கோவில்பட்டியில் நடக்கும் கதைதான் 'அசுரன்.' ஆனால், அந்தக் கதைக்களத்துக்கும் பஞ்சமி நிலப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாதே?''

"உண்மைதான். 1960-களில் பஞ்சமி நிலம் பற்றிப் பேசப்படுவதாகப் படத்தில் காட்டியிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. 60-களில் அப்படிப்பட்ட போராட்டங்கள் நடக்கவேயில்லை. புனைவுக்கான சுதந்திரத்தை எடுத்துக்கொண்டு அதை நாங்கள் இந்தக் கதைக்குள் புகுத்தினோம். ஏனென்றால், முக்கியமான ஒரு பிரச்னையான பஞ்சமி நிலம் குறித்துப் பேசுவதற்கு எனக்கு இன்னொரு களம் அமையுமா என்று தெரியாது. வெகுமக்கள் மத்தியில் இதுதொடர்பான விவாதத்தைத் தொடங்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்ததால் அதை இந்தப் படத்தில் வைத்தோம். இது ஒரு 'காலப்பிழை (Chronological Error)' ஆனால், இந்தக் காலப்பிழையைத் தெரிந்தேதான் செய்தோம்.''

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo

" 'எவ்வளவு ஆண்டுகளுக்குத்தான் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்கொண்டேயிருப்பீர்கள்?' - அசுரன் படத்தின் மிக முக்கிய வசனம் இது. ஆனால், சில சாதி அமைப்புகளிடமிருந்து இந்த வசனத்துக்கு எதிர்ப்பு வந்ததும் படத்திலிருந்து நீக்கிவிட்டீர்களே... ஏன்?''

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

"குறிப்பிட்ட ஒரு சமூகத்தையோ, தனி நபர்களையோ நோக்கிச் சொல்லப்பட்ட கதை அல்ல 'அசுரன்.' வெகுமக்களுக்கான ஒரு கண்ணாடியாகவும், இன்றைய தமிழ் மக்களுடைய அழுத்தத்தை வெளிக்காட்டும் முயற்சியாகவும்தான் நான் 'அசுரன்' எடுத்தேன். இதில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் படத்தில் வரும் ஒரு வார்த்தை காயப்படுத்துகிறது என்று சொல்லும்போது அதை நீக்குவதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எல்லாச் சமூகமும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும், சாதி வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த மாதிரியான படத்தின் நோக்கம். ஆனால், இந்தப் படத்தில் வரும் வசனத்தை நீக்காமல் இருப்பதன் மூலமாக மக்களுக்குள் ஒரு மோதல் வரும் என்றால் இந்தப் படத்தை எடுத்ததற்கான நோக்கமே தவறாகிவிடும். அதனால்தான் குறிப்பிட்ட வார்த்தை அந்தச் சமூகத்தைக் காயப்படுத்துகிறது என்று சொன்னவுடனேயே அதை நீக்குவதற்கு நான் ஒப்புக்கொண்டேன்.''

"அரசியலை மிகவும் கூர்மையாக கவனிப்பவர் நீங்கள். தற்போதைய அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

" 'சரியான தலைவர்கள் இல்லை... வெற்றிடம் இருக்கிறது' என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. தலைவர்கள் இங்கு பிரச்னை இல்லை. அரசியலுக்குக் கொள்கையும், கோட்பாடும்தான் தேவை. தலைவர்கள் இரண்டாவதுதான். ஆனால்..."

- "நீங்கள் இயக்கிய படங்களில் 'அசுரன்'தான் நேரடி அரசியல் படம். இந்தக் கதையைப் படமாக்க வேண்டும் என முடிவெடுக்கக் காரணம் என்ன?" | " 'அசுரன்' இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கப்போவதாகச் செய்திகள் வருகின்றன. நீங்களும் ஷாருக்கானும் சந்தித்துக்கொண்ட படம்கூட வெளியானதே?'' | "வசூலில் 100 கோடி ரூபாய் ஹிட் அடித்த ஒரு சினிமாவைக் கொடுத்துவிட்டு, அடுத்து ஒரு சிறிய படம் இயக்கப் போகிறீர்களே... தொடர்ந்து பெரிய படங்கள் இயக்கும் ஆர்வம் இல்லையா?'' | "சூரியை வைத்து அடுத்த படம் இயக்கப்போகிறீர்கள். இந்தப் படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?'' | "ரஜினி, விஜய், அஜித்... இவர்களை இயக்கும் இயக்குநராக வெற்றிமாறனை எப்போது பார்க்கலாம்?'' | "நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைம் உள்ளிட்ட இந்த OTT பிளாட்பாரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்... சினிமாவுக்கு இது சவாலானதாக இருக்குமா?''

- இந்தக் கேள்விகளுக்கு வெற்றிமாறன் அளித்த விரிவான பதில்களை ஆனந்த விகடன் நேர்காணலில் முழுமையாக வாசிக்க > "தமிழ் அடையாளங்களைக் கைப்பற்றுவதுதான் அவர்கள் அரசியல்!" - வெற்றிமாறன் ஓப்பன் டாக் https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-director-vetrimaaran

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo