Published:Updated:

அட்வைஸ் செய்த சிம்பு: ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பகிர்ந்த த்ரிஷா! - சோஷியல் மீடியா ரவுண்ட் அப்

simbu சோஷியல் மீடியா ரவுண்டப்!
simbu சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #SocialMediaRoundup

கொரோனா சூழலால் பல படங்கள் நேரடி OTT ரிலீஸுக்கு பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருந்த இயக்குநர் சுர்ஜீத் சிர்கார் இயக்கிய ’குலோபா சீதோபோ’ பாலிவுட் திரைப்படம், வரும் ஜூன் மாதம் அமேசான் ப்ரைமில் நேரடி டிஜிட்டல் ரிலீஸ் ஆகிறது.

இதில் பாலிவுட் அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குர்ரானா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் ட்வீட் செய்துள்ளார். அதில், ’சினிமாத்துறைக்குள் 1969ல் நுழைந்தேன். தற்போது 2020. கிட்டத்தட்ட 51 வருடங்கள் ஆகிவிட்டன. நிறைய சவால்களைப் பார்த்துவிட்டேன். தற்போது மற்றுமொரு சவால். ’குலோபா சீதோபோ’ டிஜிட்டல் ரிலீஸ் ஆகிறது. மற்றுமொரு சவாலில் நானும் ஒரு அங்கமாக இருந்து சமாளிப்பது மகிழ்ச்சி’ என ட்வீட்டியுள்ளார்.

‘இறுதிச்சுற்று’, படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், ரித்திகா. சமீபத்தில் தமிழில் இவர் நடித்து வெளியான ‘ஓ மை கடவுளே’ விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. லாக்டெளனால், வீட்டில் தனது அம்மாவிற்கு உதவி செய்வது போன்ற வீடியோவைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது #நான்தான்வீட்டில்வாஷிங்மெஷின் என்ற ஹேஷ்டேக்கில் ரகளையான இரண்டு வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார், ரித்திகா. ‘அம்மா என்னிடம் எதிர்ப்பார்ப்பதும், நான் செய்வதும்’ என்ற கேப்ஷனோடு தனது கிக்பாக்ஸிங்கை துணிதுவைப்பதில் காட்ட, ரித்திகாவின் குறும்புக்கு கமென்ட்டில் ஹார்ட்டின்களைப் பதிவிடுகின்றனர் ரசிகர்கள்.

குவாரன்டீன் நாள்களில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். நேற்று, இன்ஸ்டாவில் கேள்வி-பதில் செஷனில் ரசிகர்களுடன் உரையாடினார். ‘உங்களுக்குப் பிடித்த சீரிஸ் எது?, பொன்னியின் செல்வன் அப்டேட்?, கார்த்திக் டயல் செய்த எண் எப்போது ரிலீஸ்?, ஃபிட்னெஸ் சீக்ரெட் என்ன?’ என ரசிகர்கள் த்ரிஷாவிடம் நிறைய கேள்விகளைக் கேட்டனர்.

Trisha
Trisha

சுவாரஸ்யமான கேள்விகளுக்கு தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதில் அளித்தார் த்ரிஷா. அதில் ஒரு ரசிகர், ‘உங்கள் வாழ்வின் காதலைக் கண்டறிந்துவிட்டீர்களா?’ எனக் கேட்க, அதற்கு த்ரிஷா, ‘அப்படி ஒருவரை இன்னும் என் வாழ்வில் சந்திக்கவேயில்லை’ எனப் பதில் அளித்துள்ளார்.

Allu Arjun
Allu Arjun

ஹரிஷ்கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ‘கண்ணம்மா’ பாடல் என்றென்றும் ஃபேவரைட்டாக இளைஞர்களிடையே தாறுமாறு ஹிட்.

இப்போது அந்தப் படத்தின் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸும், ஹரிஷ் கல்யாணும் ‘கண்ணம்மா’வை ரீகிரியேட் செய்திருக்கிறார்கள். ஒரிஜினல் பாடலை அனிருத் பாட, இந்த ரீகிரியேஷன் வெர்சனை ஹரிஷ் கல்யாணே பாடியிருக்கிறார். யூடியூபில் வெளியிட்டுள்ள இந்தப் பாடலை மீண்டும் ரிப்பீட் மோடில் கேட்டுவருகின்றனர் நெட்டிசன்கள்.

லாக்டெளனுக்கு முன்னதாக வி.டிவி கணேஷும், சிம்புவும் சேர்ந்து சமையல் செய்வது போன்ற வீடியோ, தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

அதில், ‘வரப்போற பொண்ணுக்கு வேலையே இல்லை’ என கணேஷ் கலாய்க்க, அதற்கு சமையல் செய்யும் சிம்பு, ‘வர்றவங்க என்ன எனக்கு வேலை செய்யவா வர்றாங்க? வாழ்க்கைக்கு துணையா இருக்கத்தானே வர்றாங்க. அவங்களை எப்படி ட்ரீட் பண்ணணும்னு தெரிஞ்சுக்கங்க’ என சிம்பு பேசியுள்ள வீடியோதான் இப்போது டாக் ஆஃப்தி டவுன். இதை சிம்புவின் ரசிகர்கள் பலவிதமான கேப்ஷன்களோடு மகிழ்ச்சியாகப் பகிர்ந்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு