Published:Updated:

கமலின் `விக்ரம்' டீஸர் ஷூட் எங்கே நடந்தது, அங்கே என்ன நடந்தது?! #Vikram #KamalHaasan232

#Vikram #KamalHaasan232

சமீபத்தில் எந்த இயக்குநருடனும் கமல் இந்த அளவுக்கு கம்ஃபர்ட்டபிளாக இருந்ததில்லை. லோகேஷுடன் நல்லப்புரிதல் இருக்கிறது. ஸ்கிரிப்ட்டில் கமல் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில்வைத்திருந்தார் லோகேஷ்.

கமலின் `விக்ரம்' டீஸர் ஷூட் எங்கே நடந்தது, அங்கே என்ன நடந்தது?! #Vikram #KamalHaasan232

சமீபத்தில் எந்த இயக்குநருடனும் கமல் இந்த அளவுக்கு கம்ஃபர்ட்டபிளாக இருந்ததில்லை. லோகேஷுடன் நல்லப்புரிதல் இருக்கிறது. ஸ்கிரிப்ட்டில் கமல் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில்வைத்திருந்தார் லோகேஷ்.

Published:Updated:
#Vikram #KamalHaasan232
கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நவம்பர் 7-ம் தேதி வெளியான 'விக்ரம்' படத்தின் டீஸர்தான் இப்போதும் ட்ரெண்டிங். 'Once upon a time... There lived a Ghost' என்கிற கேப்ஷனும், கமல்ஹாசனின் 'ஆரம்பிக்கலாங்களா' என்கிற வசனமும், அந்த கெத்துப்பார்வையும் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. கமல்ஹாசனுடன் ஃபேன்பாய் லோகேஷும் சேர்ந்திருப்பதால் 'செம விருந்து காத்திருக்கிறது' என கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களும் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். #KamalHaasan232
கமல், லோகேஷ்
கமல், லோகேஷ்

'எவனென்று நினைத்தாய்' என்கிற ஹேஷ்டேகுடன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கமலின் 232-வது படத்தின் பெயர் 'விக்ரம்' என இந்த டீஸரில் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே ராஜசேகரன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில், 1986-ல் 'விக்ரம்' என்கிற ஸ்பை திரில்லர் படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் படமும் ராஜ்கமல் ஃபிலிம்ஸின் தயாரிப்புதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'கைதி' ரிலீஸுக்கு முன்பாகவே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசனை இயக்குவதற்கான ஒப்பந்தம் போட்டுவிட்டார். ஆனால், 'கைதி' பட ரிலீஸுக்குப்பிறகு ரஜினி, லோகேஷை அழைத்துப்பாராட்ட, அப்போது "கமல்ஹாசனுடன் ஒரு படம் செய்யப்போகிறேன்" என லோகேஷ் சொல்ல, அந்தக் கதையைக் கேட்டிருக்கிறார் ரஜினி. உடனே "இந்தப் படத்தை நானே ராஜ்கமல் ஃபிலிம்ஸுக்கு செய்து தருகிறேன்" என உற்சாகமாகி நாக்பூரில் 'இந்தியன் -2' ஷூட்டிங்கில் இருந்த கமல்ஹாசனுக்கு போன் அடித்திருக்கிறார் ரஜினி. உடனடியாக கமல்ஹாசனும் ஓகே சொல்ல, ரஜினிக்கு ஏற்றபடி கதையில் சில மாற்றங்களை செய்தார் லோகேஷ். இந்த நேரத்தில்தான் கொரோனா காரணமாக திரையுலக சூழல் மொத்தமும் தலைகீழாக மாற, ரஜினி தயங்க, மீண்டும் கமல்ஹாசனிடமே லோகேஷின் கதை போனது.

#Vikram #KamalHaasan232
#Vikram #KamalHaasan232

பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டிலை வெறும் போஸ்டராக அறிவிக்கலாம் என்கிற பேச்சுவந்தபோது, லோகேஷ் கனகராஜ்தான் இப்படி ஒரு வீடியோ டீஸர் ஐடியா இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார். உடனடியாக ஐடியாவில் இம்ப்ரஸ் ஆன கமல், அதற்கான வேலைகளைத் தொடங்கச் சொல்லியிருக்கிறார். ஏவிஎம் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டிருக்கிறது. இந்த டீசருக்குத் தேவையான புத்தகங்களை எல்லாம் லோகேஷ் எடுத்துவர, தன்னுடைய கலெக்‌ஷனில் இருந்து சில துப்பாக்கிகளைக் கொடுத்திருக்கிறார் கமல்.

"சமீபத்தில் எந்த இயக்குநருடனும் கமல் இந்த அளவுக்கு கம்ஃபர்ட்டபிளாக இருந்ததில்லை. லோகேஷுடன் நல்லப்புரிதல் இருக்கிறது. ஸ்கிரிப்ட்டில் கமல் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சரியான பதில் வைத்திருந்தார் லோகேஷ். கமல் ரொம்பவே இம்ப்ரஸ்ட்" என்கிறார்கள்.

#Vikram #KamalHaasan232
#Vikram #KamalHaasan232

படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் தொடங்குகிறது. சென்னையில்தான் படப்பிடிப்புகள் முழுமையாக நடக்க இருக்கிறது. மார்ச் வரை ஷூட்டிங் போகலாம். 2021 தேர்தலுக்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்யும் திட்டம்தான் முதலில் இருந்தது. ஆனால், பிப்ரவரிக்கு மேல் தேர்தல் பிரசாரம் தீவிரமாகிவிடும் என்பதால் ஷூட்டிங்கில் சில இடைவெளிகள் இருக்கலாம். அதனால், தேர்தலை மனதில்கொண்டு ஷூட்டிங்கிலும், படத்தை ரிலீஸ் செய்வதிலும் அவசரம் காட்டவேண்டாம் எனச்சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். படத்தின் ரிலீஸ் ஏப்ரல் டு ஜூனில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்.

தற்போது லோகேஷ் கனகராஜ் 'மாஸ்டர்' பட ட்ரெய்லர் வேலைகளில் பிஸியாக இருப்பதால், அதுமுடிந்ததும் கமல்ஹாசனுடன் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்களின் பட்டியல் இறுதிசெய்யப்படும் என்கிறார்கள்.