Published:Updated:

ஜெயலலிதாவா கங்கனா சரியானு கேட்டோம்... ரிசல்ட் ப்ளஸ் கமெண்ட்ஸ் பாருங்க!

`தலைவி' படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் ஆகியவைதான் சோஷியல் மீடியாவின் இப்போதைய ட்ரெண்ட். இதில் கங்கானாவின் தோற்றம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் விகடன் வாசகர்களின் கருத்து என்ன?

தலைவி படத்திலிருந்து...
தலைவி படத்திலிருந்து...

A.L.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் தயாராகி வருகிறது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக். கங்கனா ஜெயலலிதாவாகத் தோன்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஒரு டீசரும் சமீபத்தில் வெளியாகின. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த நிலையில் விகடன் தளத்திலும், ட்விட்டரிலும் ஒரு கேள்வியை சர்வேயாக கேட்டிருந்தோம்.

`தலைவி'யில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத்... உங்கள் கருத்து என்ன? #VikatanPoll

1) சூப்பர் சாய்ஸ்...!

2) ஜெயலலிதா போல இல்லை

3) வேற யாராவது நடிச்சிருக்கலாம்

4) படத்த பார்ப்போம். பொறுங்க!

இதற்கு வாசகர்கள் எப்படிப் பதிலளித்துள்ளனர்?

- `தலைவி'யில் ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா ரனாவத்... உங்கள் கருத்து என்ன? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில், வாசகர்கள் 72 % பேர் 'ஜெயலலிதா போல இல்லை' என்ற ஆப்ஷனையே தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அந்த சர்வேயில் ஒவ்வொரு விடைகளும் பெற்ற சதவிகிதம்...

#VikatanPoll
#VikatanPoll

- இதே கேள்வி, இதே ஆப்ஷன்களுடன் ட்விட்டரில் கேட்கப்பட்டது. அதில் அதிகபட்சமாக 33.4 % பேர் 'படத்த பார்ப்போம். பொறுங்க!' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து உள்ளனர். இதில் ஒவ்வொரு ஆப்ஷன்களும் பெற்ற சதவிகிதம்...

#VikatanPoll
#VikatanPoll

- இது மட்டுமன்றி, விகடன் தளத்திலும் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது. அதற்குப் பதிலளித்த வாசகர்களில் அதிகபட்சமாக 43.6 % பேர் 'படத்த பார்ப்போம். பொறுங்க!' என்ற ஆப்ஷனையே தேர்வு செய்துள்ளனர். இதில் ஒவ்வொரு ஆப்ஷன்களும் பெற்ற சதவிகிதம்...

#VikatanPoll
#VikatanPoll

மொத்தத்தில் விகடனின் ட்விட்டர் மற்றும் வெப்சைட் மூலமாக ஒவ்வொரு ஆப்ஷனுக்கும் கிடைத்த சதவிகிதம் இதுதான். இதில் 41.56 % பேர் 'ஜெயலலிதா போல இல்லை' என்றும் 30.33 % பேர் 'படத்த பார்ப்போம். பொறுங்க!' என்று தெரிவித்துள்ளனர்.

#VikatanPoll
#VikatanPoll

வாசகர்கள் பகிர்ந்த சில சுவாரஸ்ய கமென்டுகள்

`கங்கனாவுக்கு பதிலா இவங்க நடிச்சிருந்தா நல்லார்க்கும்'னு நீங்க யாரையாவது நினைக்கிறீங்களா? யார் அவங்க? கமென்ட்ல சொல்லுங்களேன்..!

என்றும் கேட்டிருந்தோம். அதற்கு வாசகர்களின் ஜாலி கமென்ட்ஸ் சில...

இதுபோல பல சுவாரஸ்யமான சர்வேக்களுக்கு விகடனுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

ஜெயலலிதா லெஜென்ட்; படம் எடுக்கும் முன் எங்களிடம் கேட்க வேண்டாமா?'- கொதிக்கும் தீபா உறவுகள்