Published:Updated:

What to watch on Theatre & OTT: கனெக்ட், லத்தி, Cirkus - இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

What to watch on Theatre & OTT: December

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம்.

What to watch on Theatre & OTT: கனெக்ட், லத்தி, Cirkus - இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம்.

Published:Updated:
What to watch on Theatre & OTT: December

கனெக்ட் (தமிழ்)

கனெக்ட் படத்தில்...
கனெக்ட் படத்தில்...

'கேம் ஓவர்' வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் படம், ‘கனெக்ட்.' ‘மாயா' படத்திற்குப் பிறகு, மீண்டும் நயன்தாரா - அஸ்வின் சரவணன் கூட்டணியில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 22ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாராவுடன் வினய் ராய், அனுபம் கேர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லத்தி (தமிழ்)

லத்தி
லத்தி

அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 22ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வழக்கமான போலீஸ் படங்களைப்போல் இல்லாமல் லத்தி ஸ்பெஷலிஸ்டான ஒரு கான்ஸ்டபிளின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களமாக உருவாகியுள்ளது இத்திரைப்படம்.

Kaapa (மலையாளம்)

Kaapa
Kaapa

ஜி.ஆர். இந்துகோபன் எழுத்தில், ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிருத்விராஜ், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'Kaapa'. மலையாளத் திரைப்படமான இது நேற்று (டிசம்பர் 22ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

18 Pages (தெலுங்கு)

18 Pages
18 Pages

பல்நதி சூர்ய பிரதாப் இயக்கத்தில் நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் '18 Pages'. இத்திரைப்படம் நேற்று (டிசம்பர் 22ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Dhamaka (தெலுங்கு)

Dhamaka
Dhamaka

திரிநாத ராவ் நக்கினா இயக்கத்தில் ரவி தேஜா, ஸ்ரீலீலா, ஜெயராம், பவித்ரா லோகேஷ், ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படம் 'Dhamaka'. இத்திரைப்படம் இன்று (டிசம்பர் 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Vedha (கன்னடம்)

Vedha
Vedha

ஹர்ஷா இயக்கத்தில் சிவராஜ்குமார், ஞானவி லக்ஷ்மன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Vedha'. உமாஸ்ரீ, அதிதி சாகர், ரகு ஷிவமொக்கா, ஜக்கப்பா, செலுவராஜ், பரத் சாகர், பிரசன்னா, வினய், சஞ்சீவ், குரி பிரதாப் ஆகியோர் முக்கியக் கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை (டிசம்பர் 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

Cirkus (இந்தி)

Cirkus
Cirkus

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங், பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஜானி லீவர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Cirkus'. இந்தி மொழித் திரைப்படமான இது நாளை (டிசம்பர் 23ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Shadyantra (இந்தி) - Zee5

Shadyantra
Shadyantra

ராஜன் ஜோஹ்ரி இயக்கத்தில் ஹினா கான், சந்தன் ராய், குணால் ராய் கபூர், ஸ்ருதி பாப்னா, முனிஷ் ஷர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Shadyantra'. இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 18ம் தேதி 'Zee5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Glass Onion: A Knives Out Mystery (ஆங்கிலம்) - Netflix

Glass Onion: A Knives Out Mystery
Glass Onion: A Knives Out Mystery

ரியான் ஜான்சன் இயக்கத்தில் டேனியல் கிரெய்க், மேடலின் க்லைன், ஈதன் ஹாக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Glass Onion: A Knives Out Mystery'. இது சூப்பர்ஹிட்டான 'Knives Out' படத்தின் இரண்டாம் பாகம். இத்திரைப்படம் நாளை டிசம்பர் 23ம் தேதி 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Strange World (ஆங்கிலம்) - Disney Plus Hotstar

Strange World
Strange World

டான் ஹால் இயக்கத்தில் ஜபோக்கி யங்-வைட், ஜேக் கில்லென்ஹால், கேப்ரியல் யூனியன், டென்னிஸ் குவைட் உள்ளிட்டோர் அனிமேஷன் கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் 'Strange World'. இத்திரைப்படம் நாளை டிசம்பர் 23ம் தேதி 'Disney Plus Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

A Not So Merry Christmas (ஸ்பானிஷ்)- Netflix

A Not So Merry Christmas
A Not So Merry Christmas

மார்க் அலஸ்ராகி இயக்கத்தில் மொரிசியோ ஓச்மான், அனா பிரெண்டா கான்ட்ரேராஸ், மனு நா, மரியா ரோஜோ நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பானிஷ் மொழித் திரைப்படம் 'A Not So Merry Christmas'. இத்திரைப்படம் நாளை டிசம்பர் 23ம் தேதி 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

திரையரங்கு டு ஓடிடி

காரி (தமிழ்)- Zee5

காரி
காரி

புதுமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'காரி'. அறிமுக நடிகை பார்வதி, ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Zee5' ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

பரோல் (தமிழ்)- Amazon Prime

பரோல்
பரோல்

இயக்குநர் துவாரக் ராஜா இயக்கத்தில் அண்ணன் - தம்பி உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் ஆர்.எஸ். கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Amazon Prime' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ராம் சேது (இந்தி, தமிழ்) - Amazon Prime

ராம் சேது
ராம் சேது

அபிஷேக் சர்மா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நுஷ்ரத் பருச்சா போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் நாளை (டிசம்பர் 23ம் தேதி) 'Amazon Prime' ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Thank God (இந்தி) - Amazon Prime

Thank God
Thank God

கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த இந்தி மொழித் திரைப்படமான 'Thank God' தற்போது 'Amazon Prime' ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்திரக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கன், சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது 'Sorte kugler' என்ற டேனிஷ் திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காகும்.

Jaya Jaya Jaya Jaya Hey (மலையாளம்) - Disney Plus Hotstar

Jaya Jaya Jaya Jaya Hey
Jaya Jaya Jaya Jaya Hey

பசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் விபின் தாஸ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Disney Plus Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

NOPE (ஆங்கிலம், தமிழ்) -Amazon Prime

NOPE
NOPE

ஜோர்டான் பீலே இயக்கத்தில் டேனியல் கலுயா, கேகே பால்மர், ஸ்டீவன் யூன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Amazon Prime' ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.