Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்த நவம்பர் முதல் வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா?!

படங்களின் பட்டியல்

இந்த மாதம் நவம்பர் முதல் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகும் படங்களின் பட்டியல்.

What to watch on Theatre & OTT: இந்த நவம்பர் முதல் வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா?!

இந்த மாதம் நவம்பர் முதல் வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகும் படங்களின் பட்டியல்.

Published:Updated:
படங்களின் பட்டியல்

லவ் டுடே (தமிழ்)

லவ் டுடே
லவ் டுடே

'கோமாளி' படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், இயக்கி நடித்துள்ள சமகால காதல் திரைப்படம் இது. சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, இவானா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 4ம்தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நித்தம் ஒரு வானம் (தமிழ்)

நித்தம் ஒரு வானம்
நித்தம் ஒரு வானம்

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், ஷிவாத்மிகா, அபர்ணா பாலமுரளி, ரிதுவர்மா ஆகியோர் நடித்துள்ளத் திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'. இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

காபி வித் காதல் (தமிழ்)

காபி வித் காதல்
காபி வித் காதல்

பிரபல இயக்குநர் சுந்தர் சி-யின் இயக்கத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், திவ்யதர்ஷினி (டிடி) ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'காபி வித் காதல்'. இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஒன் வே (தமிழ்)

ஒன் வே
ஒன் வே

நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளத் திரைப்படம் 'ஒன் வே'. எம். சக்திவேல் இயக்கத்தில் கோவை சரளா, ஆரா, ராஜாத்தி பாண்டியன், அப்துல்லா, சார்லஸ் வினோத் உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

4554 (தமிழ்)

4554
4554

கரண் மாரியப்பன் இயக்கத்தில் அசோக், ஷீலா நாயர் நடித்துள்ள திரைப்படம் '4554'. இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கண்டேன் உன்னை தந்தேன் என்னை (தமிழ்)

கண்டேன் உன்னை தந்தேன் என்னை
கண்டேன் உன்னை தந்தேன் என்னை

நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'கண்டேன் உன்னை தந்தேன் என்னை'. தங்கவேலு கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Saturday Night (மலையாளம்)

Saturday Night
Saturday Night

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள மலையாள மொழித் திரைப்படம் 'Saturday Night'. நிவின் பாலி, அஜு வர்கீஸ், சிஜு வில்சன் மற்றும் சைஜு குருப் ஆகியோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kumari (மலையாளம்)

Kumari
Kumari

நிர்மல் சஹாதேவ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'Kumari'. ஐஸ்வர்யா லட்சுமி, ஷைன் டாம் சாக்கோ, சுரபி லட்சுமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 4ம்தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Urvasivo Rakshasivo (தெலுங்கு)

Urvasivo Rakshasivo
Urvasivo Rakshasivo

இயக்குநர் ராகேஷ் சஷி இயக்கத்தில் அல்லு சிரிஷ், அனு இம்மானுவேல், சுனில், வெண்ணெலா கிஷோர், ஆமணி, கேதார் சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Urvasivo Rakshasivo'. இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Banaras (கன்னடம்)

Banaras
Banaras

ஜெயதீர்த்த இயக்கத்தில் ஜெய்த் கான் மற்றும் சோனல் மான்டீரோ ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னடத் திரைப்படம் 'Banaras'. இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Phone Bhoot (இந்தி)

Phone Bhoot
Phone Bhoot

நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளத் திரைப்படம்'Phone Booth'. கத்ரீனா கைஃப், இஷான் கட்டர், சித்தாந்த் சதுர்வேதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் காமெடி படம் இது.

Double XL (இந்தி)

Double XL
Double XL

சத்திரம் ரமணி இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா, சாய்ரா கண்ணா, ஹுமா குரேஷி, ராஜ்ஸ்ரீ திரிவேதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Double XL'. இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் ஓடிடி-யில் என்ன பார்க்கலாம்?

கையும் களவும் (Sony LIV - தமிழ்)

கையும் களவும்
கையும் களவும்

ரோஜூ இயக்கத்தில் சஞ்சனா நடராஜன், ரோஹித், மடோனா செபாஸ்டியன், ரம்யா நம்பீசன், செந்தில், கரு.பழனியப்பன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் 'கையும் களவும்'. இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Tadka (Zee5 - இந்தி)

Tadka
Tadka

பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளத் இந்தி மொழித் திரைப்படம் 'Tadka'. நானா படேகர், அலி ஃபசல், ஷ்ரேயா சரண் மற்றும் டாப்ஸி பன்னு உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) 'Zee5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Enola Holmes 2 (Netflix-ஆங்கிலம்)

Enola Holmes 2
Enola Holmes 2

Netflix ஓடிடி தளத்தில் நவம்பர் 4ம் தேதி (நேற்று) வெளியாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'Enola Holmes 2'. இயக்குநர் ஹாரி பிராட்பீர் இயக்கத்தில் மில்லி பாபி பிரவுன், ஹென்றி கேவில், டேவிட் தெவ்லிஸ், கிரெயில், டெவ்க்ஸ்பரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் முதல் பாகம் 2020-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

My Policeman (Prime - ஆங்கிலம்)

My Policeman
My Policeman

மைக்கேல் கிராண்டேஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஹாரி ஸ்டைல்ஸ், எம்மா கொரின், ஜினா மெக்கீ, லினஸ் ரோச், ரூபர்ட் எவரெட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) 'Amazon Prime' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Elesin Oba: The King Horseman (Netflix - ஆங்கிலம்)

Elesin Oba: The King Horseman
Elesin Oba: The King Horseman

பியி பந்தேலே இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஒடுன்லேட் அடெகோலா, ஷாஃபி பெல்லோ, ஒலாவலே, டெய்மி ஒகன்லாவோன், ஓமோவுன்மி தாதா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 4ம் தேதி (நேற்று) 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இவை தவிர...

'பொன்னியின் செல்வன் - பாகம் ஒன்று' (Amazon Prime - தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் )

Ponniyin Selvan
Ponniyin Selvan

மணிரத்னம் இயக்கித்தில் வெளியாகியிருந்த 'பொன்னியின் செல்வன் -பாகம் ஒன்று' திரைப்படம் 'Amazon Prime ' ஓடிடி தளத்தில் நேற்று நவம்பர் 4ம் தேதி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கூடுதல் கட்டணம் செலுத்தி 'Rental' முறையில் பார்க்கலாம் என்று இருந்த நிலையில், தற்போது இதை அமேசான் சந்தாதாரர்கள் இலவசமாகவே பார்த்துக்கொள்ளலாம்.

பிரம்மாஸ்திரா (Hotstar- தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம்)

Brahmastra
Brahmastra

அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பிரம்மாஸ்திரா'. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாகியிருந்த இத்திரைப்படம் 'Hotstar' ஓடிடி தளத்தில் நேற்று நவம்பர் 4ம் தேதி வெளியாகியுள்ளது.

The Ghost: (Netflix - தெலுங்கு)

The Ghost
The Ghost

பிரவீன் சத்தாரு இயக்கத்தில் நாகார்ஜுனா, சோனல் சவுகான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியாகி இருந்த இப்படம் தற்போது 'Netflix' ஓடிடி தளத்தில் நவம்பர் 4ம் தேதி (நேற்று) வெளியாகியுள்ளது.

Bullet Train (Netflix - English)

Bullet Train
Bullet Train

பிராட் பிட் நடிப்பில் டேவிட் லீட்ச் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி இருந்த இத்திரைப்படம் தற்போது 'Netflix' ஓடிடி தளத்தில் நவம்பர் 5ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.