Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்த நவம்பர் கடைசி வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

What to watch on Theatre & OTT:

இந்த நவம்பர் கடைசி வாரமான நேற்று தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெயாகியுள்ள திரைப்படங்கள் இவைதாம்.

What to watch on Theatre & OTT: இந்த நவம்பர் கடைசி வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?

இந்த நவம்பர் கடைசி வாரமான நேற்று தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெயாகியுள்ள திரைப்படங்கள் இவைதாம்.

Published:Updated:
What to watch on Theatre & OTT:

ஏஜென்ட் கண்ணாயிரம் (தமிழ்)

ஏஜென்ட் கண்ணாயிரம்
ஏஜென்ட் கண்ணாயிரம்

மனோஜ் பீதா இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. கன்னடத்தில் வெளிவந்த 'ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா' திரைப்படத்தின் தமிழ் ரீமேக். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், சுருதி ஹரிஹரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

காரி (தமிழ்)

காரி
காரி

புதுமுக இயக்குநர் ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'காரி'. அறிமுக நடிகை பார்வதி, ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

பட்டத்து அரசன் (தமிழ்)

பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்

நடிகர் அதர்வா நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 25ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. பிரபல நடிகர் ராஜ்கிரன், ராதிகா சரத்குமார், சிங்கம் புலி, பால சரவணன் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கபடி விளையாட்டைகதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

பவுடர் (தமிழ்)

பவுடர்
பவுடர்

இயக்குநர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் வித்யா பிரதீப், மனோபாலா, வையாபுரி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, நிகில் முருகன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'பவுடர்'. இத்திரைப்படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Masooda (தெலுங்கு)

Masooda
Masooda

இயக்குநர் சாய் கிரண் இயக்கத்தில் திருவீர், காவ்யா கல்யாண்ராம், சங்கீதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழித் திரைப்படமான 'Masooda' நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Shefeekkinte Santhosham (மலையாளம்)

Shefeekkinte Santhosham
Shefeekkinte Santhosham

இந்த வாரம் நவம்பர் 25 தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம் 'Shefeekkinte Santhosham'. இத்திரைப்படத்தை இயக்குநர் அனுப் பந்தலம் இயக்கியுள்ளார், உன்னி மனோஜ் கே, முகுந்தன், ஆத்மீய ராஜன், பால குமார் மற்றும் திவ்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Bhediya (இந்தி)

Bhediya
Bhediya

இயக்குநர் அமர் கௌசிக் இயக்கத்தில் வருண் தவான், கிருதி சனோன், தீபக் டோப்ரியால், அபிஷேக் பானர்ஜி, சவுரப் சுக்லா, பாலின் கபக் தோசம் பியாங், மடங் பாய் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று (நவம்பர் 25 தேதி) திரையரங்குகளில் வெளியாகியுள்ளத் திரைப்படம் 'Bhediya'.

Strange World (ஆங்கிலம்)

Strange World
Strange World

இயக்குநர் டான் ஹால் இயக்கத்தில் பேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளத் திரைப்படம் 'Strange World'. வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆங்கில மொழித் திரைப்படமான இத்திரைப்படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Bodies Bodies Bodies (ஆங்கிலம்)

Bodies Bodies Bodies
Bodies Bodies Bodies

ஆங்கில மொழி ஹாரர் மற்றும் காமெடி கலந்த திரைப்படமான 'Bodies Bodies Bodies' நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஹலினா ரெய்ன் இயக்கயுள்ள இத்திரைப்படத்தில் அமண்ட்லா ஸ்டென்பெர்க், மரியா பகலோவா, ரேச்சல் சென்னோட், சேஸ் சூய் வொண்டர்ஸ் பீட் டேவிட்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

காபி (COFFEE) (கலர்ஸ் டிவி- தமிழ்)

காபி
காபி

புதுமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகை இனியா நடிப்பில் உருவாகியுள்ளத் திரைப்படம் 'காபி (COFFEE)'. இத்திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி கலர்ஸ் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.

Meet Cute (தெலுங்கு - SonyLIV)

Meet Cute
Meet Cute

தெலுங்கு மொழி ஆந்தாலஜித் திரைப்படமான ‘Meet Cute’ நவம்பர் 25ம் தேதி 'SonyLIV' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நானி, சத்யராஜ், ஆதா ஷர்மா, அஸ்வின் உள்ளிட்டப் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Khakee: The Bihar Chapter (இந்தி - Netflix)

Khakee: The Bihar Chapter
Khakee: The Bihar Chapter

இயக்குநர் பவ் துலியா இயக்கத்தில் கரண் டேக்கர், அவினாஷ் திவாரி, அசுதோஷ் ராணா, நிகிதா தத்தா, அபிமன்யு சிங், ரவி கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளத் இந்தி மொழித் திரைப்படம் 'Khakee: The Bihar Chapter'. இத்திரைப்படம் நவம்பர் 25ம் தேதி 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Noel Diary (ஆங்கிலம் - Netflix)

The Noel Diary
The Noel Diary

சார்லஸ் ஷயர் இயக்கத்தில் ஜேம்ஸ் ரெமர், போனி பெடெலியா, பாரெட் டோஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுளளத் திரைப்படம்'The Noel Diary'. இத்திரைப்படம் நவம்பர் 24ம் தேதி 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Swimmers (ஆங்கிலம் - Netflix)

The Swimmers
The Swimmers

சாலி எல் ஹொசைனி இயக்கத்தில் மத்தியாஸ் ஷ்வேஃபர், அலி சுலிமான், ஜேம்ஸ் கிருஷ்ணா ஃபிலாய்ட், மணால் இசா, அகமது மாலேக் கடந்த நவம்பர் 23ம் தேதி 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்பம் 'The Swimmers'.

திரையரங்கு டு ஓடிடி

காந்தாரா (கன்னடம்/தமிழ்- Amazon Prime)

இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சப்தமி கவுடா, கிஷோர், அச்யுத் குமார், வினய் பிடப்பா, பிரமோத் ஷெட்டி, உக்ரம் ரவி, பிரகாஷ் துமிநாட் ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் 'காந்தாரா'. இப்போது இத்திரைப்படம் 'Amazon Prime' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பிரின்ஸ் (தமிழ் -Hotstar)

தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'பிரின்ஸ்' திரைப்படம் தற்போது 'Hotstar' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Padavettu (மலையாளம்-Netflix)

Padavettu
Padavettu

லிஜு கிருஷ்ணா இயக்கத்தில் நிவின் பாலி, அதிதி பாலன், ஷம்மி திலகன், ஷைன் டாம் சாக்கோ, இந்திரன்ஸ் உளியிட்டோர் நடிப்பில் வெளியாகியிருந்த மலையாள மொழித் திரைப்படமான 'Padavettu' 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Chup: Revenge of the Artist (இந்தி - Zee5)

Chup: Revenge of the Artist
Chup: Revenge of the Artist

இயக்குநர் பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருந்த 'Chup: Revenge of the Artist' திரைப்படம் தற்போது 'Zee5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Last Film Show (குஜராத்தி- Netflix)

2023ம் ஆண்டிற்கான 95-வது அகாடமி விருதுக்காக சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' (Last Film Show) தற்போது 'Netflix' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.