Published:Updated:

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது? விகடன் வாசகர்களின் கேள்விக்கு பதில்! #VijayWithVetrimaaran

Vetrimaaran and Vijay

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி என்பது விகடன் வாசகர்களின் விருப்பம் மட்டுமல்ல, விஜய்யின் விருப்பமுமே இதுதான்.

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது? விகடன் வாசகர்களின் கேள்விக்கு பதில்! #VijayWithVetrimaaran

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி என்பது விகடன் வாசகர்களின் விருப்பம் மட்டுமல்ல, விஜய்யின் விருப்பமுமே இதுதான்.

Published:Updated:
Vetrimaaran and Vijay

விஜய்யை சுற்றித்தான் இப்போது தமிழ் சினிமா சுழன்றுகொண்டிருக்கிறது. விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிவிட வேண்டும் என்கிற பேரார்வத்தில்தான் எல்லா இயக்குநர்களுமே ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு கதை சொல்லி காத்திருக்கும் இயக்குநர்களின் லிஸ்ட், கொரொனா காலத்தில் நாம் வாங்கும் மளிகைப் பொருள்களின் லிஸ்ட்டைவிட நீளமாகப் போய்க்கொண்டேயிருக்கிறது. விஜய் கதை கேட்டு ஓகே சொல்லி வைத்திருக்கும் இயக்குநர்களின் பட்டியலும் பெரிது. இச்சூழலில்தான் விஜய்யின் 46-வது பிறந்தநாளான 22.6.2020 அன்று விகடன் இணையதளம் மற்றும் விகடனின் சமூக வலைதள பக்கங்களில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியிருந்தோம்.

`அடுத்ததாக விஜய் எந்த இயக்குநருடன் கைகோக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?' என்பதுதான் கேள்வி. ஆப்ஷன்களாக வெற்றிமாறன், கார்த்திக் சுப்பராஜ், ஹரி, பா.இரஞ்சித் ஆகியோரின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த நான்கு இயக்குநர்களுமே விஜய்யை நேரில் சந்தித்து அடுத்த படம் இயக்குவதற்காகக் கதை சொன்னவர்கள்தான்.

கருத்துக்கணிப்புக்கான கேள்வியை வெளியிட்ட அடுத்த நொடியில் இருந்தே வாக்குகள் விழத்தொடங்கிவிட்டன. ஆயிரக்கணக்கில் வாக்குகள் குவிந்ததோடு, கமென்ட்டுகளிலும் களேபரங்கள் நடந்தன.

இதில் ஒட்டுமொத்தமாக எல்லாத் தளங்களிலும் விழுந்த வாக்குகளை ஒன்றுதிரட்டியதில் வெற்றிமாறனே ரசிகர்களின் ஃபேவரிட். கிட்டத்தட்ட 60 சதவிகித வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார் வெற்றிமாறன். இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 17 சதவிகித வாக்குகளையும், இயக்குநர் ஹரி 13 சதவிகித வாக்குகளையும், இயக்குநர் பா.இரஞ்சித் 10 சதவிகித வாக்குகளையும் பெற்றிருக்கிறார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விஜய் - வெற்றிமாறன் கூட்டணி என்பது விகடன் வாசகர்களின் விருப்பம் மட்டுமல்ல, விஜய்யின் விருப்பமுமே இதுதான். கடந்த ஆண்டு டிசம்பரில் வெற்றிமாறனை நேரில் அழைத்து கதை கேட்டார் விஜய். வெற்றிமாறன் சொன்ன கதை விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது. `மாஸ்டர்' முடிந்துவிட்டதால் உடனடியாக இந்தப் படத்தை தொடங்க வேண்டும் என்பது விஜய்யின் விருப்பம். ஆனால், வெற்றிமாறனோ ஆர்.எஸ்.என்ஃபோடெய்ன்மென்ட்காக சூரி நடிக்கும் படம், அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யாவுடன் `வாடிவாசல்' என இரண்டு படங்களுக்கான கமிட்மென்ட்டில் இருந்தார். இதனால் அடுத்த 8 மாதங்கள் டு 1 வருடம் வெற்றிமாறனால் வெளியே வர முடியாது என்பதால் பேச்சுவார்த்தை அடுத்தகட்டத்துக்கு நகரவில்லை. இல்லையென்றால் விஜய்யின் 65-வது படமாக விஜய் - வெற்றிமாறன் பார்ட்னர்ஷிப் தொடங்கியிருக்கும்.

Vijay | Vikatan Poll Result
Vijay | Vikatan Poll Result

வெற்றிமாறன் சூரியை இயக்கும் படம் கிட்டத்தட்ட 1 மாதத்தில் ஷூட்டிங் முடியும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. துபாயில் ஷூட்டிங் நடத்த எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, ஷூட்டிங் கிளம்பத் தயாராக இருந்த நிலையில்தான் கொரோனா பிரச்னை ஆரம்பித்தது. இல்லையென்றால் மார்ச் - ஏப்ரலிலேயே இந்தப் படத்துக்கான ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் எல்லாம் ஜூலைக்குள் முடிந்திருக்கும். செப்டம்பரில் சூர்யாவின் `வாடிவாசல்' படத்துக்கான ஷூட்டிங் தொடங்குவதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருந்தன.

இந்தச் சூழலில்தான் கொரோனாவால் இரண்டு படங்களுக்கான வேலைகளும் அப்படியே நின்றுபோயிருக்கின்றன. அக்டோபரில் கொரோனாவின் தாக்கம் குறைந்தாலுமே புதுப்படங்களுக்கான ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதோடு, நடிகர்களும் இயக்குநர்களும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரத் தயாராகவும் இல்லை. இதனால் அடுத்த ஆண்டுதான் புதுப்படங்களுக்கான ஷூட்டிங் தொடங்கும்.

விஜய்
விஜய்

இதற்கிடையே இப்போதும் விஜய் - வெற்றிமாறன் என இருவருமே சேர்ந்து படம் பண்ணுவதில் ஆர்வமாகவே இருக்கிறார்கள். கதையும் தயாராக இருக்கிறது. வெற்றிமாறன் தன் கையில் இருக்கும் இரண்டு படங்களையும் முடித்துவிட்டுவந்ததும் நிச்சயம் அவரோடு இணைவதில் உறுதியாக இருக்கிறார் விஜய். வெற்றிமாறனும் விஜய் படத்துக்காக வெயிட்டிங்.