Published:Updated:

சமூக வலைதளங்களில் அஜித்துக்கே ஆதரவு அதிகம்... ஆனால், விஜய்தான் நம்பர் 1?

விஜய்
விஜய்

7 வயது முதல் 70 வயதுவரையிலான ரசிகர்கள் எப்படி ரஜினிக்கு இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்க்கும் இருக்கிறார்கள்: தாணு.

சில லட்சங்களில் ஆரம்பித்த விஜய்யின் சம்பளம் இப்போது 50 கோடி ரூபாய் என்கிறார்கள். அஜித் கடைசியாக நடித்த 'விஸ்வாசம்' படத்துக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம். சில படங்களுக்கு முன்புவரை 15 கோடி ரூபாய் சம்பளம் ப்ளஸ் தெலுங்கு உரிமை என்பதுதான் சூர்யாவின் சம்பளமாக இருந்தது. 'அசுரன்' வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் தனது சம்பளத்தைத் தற்போது 10 கோடியாக உயர்த்தியிருக்கிறார்.

மக்கள் ஆதரவு, எப்போதும் லைம்லைட்டில் இருப்பது - இவைதான் நம்பர் 1 நடிகரைத் தீர்மானிக்கும் விஷயங்கள். தற்போதைய சூழலில் நம்பர் 1 நடிகர் என்று யாரை நினைக்கிறீர்கள்?” என்று நாம் ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் கேட்ட கேள்விக்கு அஜித்துக்கே ஆதரவு அதிகம்.

ஆனால் அஜித் பொது இடங்களில் வருவதை முற்றிலும் தவிர்த்த நிலையில் அரசியல் சர்ச்சை, ஆடியோ ரிலீஸ் பேச்சு என எப்போதும் தொடர்ந்து பேசப்படுபவராகவே இருக்கிறார் விஜய்.

ரஜினி சார் எப்படி வெற்றியைத் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டாரோ, அதேபோல் விஜய் தம்பியும் தலைக்கு ஏற்றிக்கொள்வதில்லை
தாணு

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவர், தொடர்ந்து 'சச்சின்', 'துப்பாக்கி', 'தெறி' என விஜய்யின் ஹிட் படங்களைத் தயாரித்த கலைப்புலி எஸ்.தாணுவிடம் பேசியபோது, ''எஸ்.ஏ.சி அவர்கள் தம்பி விஜய்க்கு ஒரு படம் பண்ணணும்னு சொன்னார். அப்போது ஆரம்பித்ததுதான் 'சச்சின்.' மிகப்பெரிய வெற்றிப்படமான 'சந்திரமுகி'யுடன் வெளியானது. 'சச்சின்' படமும் 200 நாள்கள் ஓடி, அதுவரை வந்த விஜய் படங்களிலேயே அதிக வசூலைக் கொடுத்த படமாக மாறியது. விரிவான அலசல் கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2V9A9tU

இதற்கு அடுத்து ஒருநாள் தம்பி விஜய் என்னை போனில் அழைத்தார். 'முருகதாஸ் வந்து கதை சொல்வார் சார். நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாம்' எனச் சொன்னார். அந்தப் படம்தான் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் செய்த முதல் படம் 'துப்பாக்கி.'

விஜய்யிடம் ஒரு பழக்கம் உண்டு. போட்ட பட்ஜெட்டைவிடப் படத்துக்கான தயாரிப்புச் செலவுகள் அதிகம் போனால் அதற்கான தொகையை நான் தருகிறேன் எனத் தானே முன்வருவார். ஒரு படத்தின்போது ஒரு பெரும்தொகையை அவர் உதவியாளரிடம் கொடுத்து அனுப்பிவிட்டார். ஆனால், 'படத்தின் தயாரிப்பாளர் நான்தான். நீங்கள் பணம் கொடுப்பது சரியாக இருக்காது' என அதை வாங்கமறுத்துவிட்டு, படத்தை முடித்தோம். அப்படி தயாரிப்பாளர்களுக்கு எந்தவகையிலும் தொல்லை தந்துவிடக்கூடாது, நஷ்டம் ஏற்படுத்திவிடக்கூடாது என நினைப்பவர் விஜய்.

விஜய்
விஜய்

7 வயது முதல் 70 வயதுவரையிலான ரசிகர்கள் எப்படி ரஜினிக்கு இருக்கிறார்களோ, அதேபோல் விஜய்க்கும் இருக்கிறார்கள். ரஜினி சார் எப்படி வெற்றியைத் தலைக்கு ஏற்றிக்கொள்ள மாட்டாரோ, அதேபோல் விஜய் தம்பியும் தலைக்கு ஏற்றிக்கொள்வதில்லை. எம்.ஜி.ஆர் அரசியலுக்குப் போனதும் அந்த இடத்துக்கு ரஜினி சார் வந்தார். இப்போது ரஜினி சார் அரசியலுக்குப்போகிறார். அந்த இடத்துக்கு தம்பி விஜய் வந்துவிடுவார்'' என்றார் தாணு.

- படம் சுமார், கதை சுமார், லாஜிக்குகள் இல்லை, ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் அத்தனையையும் தாண்டி 'பிகில்'தான் கடந்த ஆண்டின் வசூல் நம்பர் 1. '300 கோடி ரூபாய் வருமானம்' என வரிமானவரித்துறையே சாட்சியம் அளித்திருக்கிறது. இது அத்தனையும் சாத்தியமானது விஜய் எனும் ஒற்றைமனிதனுக்காகத்தான். தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகராக, உச்சநட்சத்திரமாகப் பல ஆண்டுகளுக்கும் மேலாக முதலிடத்தில் இருக்கும் ரஜினியின் உச்சத்தை இப்போது விஜய் தொட்டுவிட்டார் என்பதே உண்மை.

இது எப்படி சாத்தியமானது என்பதை நிறுவும் ஆனந்த விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > விஜய்தான் நம்பர் 1? https://cinema.vikatan.com/tamil-cinema/vijay-raising-to-be-the-number-one-star-of-tamil-cinema

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு