Published:Updated:

இரண்டாவது படம் வெளியாகும் முன்பே விஜய் படம்... யார் இந்த இயக்குநர் நெல்சன்?! #VIjay65

விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்-50 நிகழ்ச்சியின் இயக்குநர்களில் ஒருவர் நெல்சன். 2017-ம் ஆண்டு நடைபெற்ற ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன் எனப்பலரும் கலந்துகொண்ட 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' விழாவுக்கும் நெல்சன்தான் இயக்குநராகப் பணியாற்றினார்.

Published:Updated:

இரண்டாவது படம் வெளியாகும் முன்பே விஜய் படம்... யார் இந்த இயக்குநர் நெல்சன்?! #VIjay65

விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்-50 நிகழ்ச்சியின் இயக்குநர்களில் ஒருவர் நெல்சன். 2017-ம் ஆண்டு நடைபெற்ற ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன் எனப்பலரும் கலந்துகொண்ட 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' விழாவுக்கும் நெல்சன்தான் இயக்குநராகப் பணியாற்றினார்.

விஜய் 65 படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதில் இருந்தே அந்தப் படத்தைப் பற்றிய பரபரப்பு பற்றிகொள்ள ஆரம்பித்துவிட்டது. சுதா கொங்கராவில் தொடங்கி முருகதாஸிடம் வந்து கடைசியாக #Vijay65 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு கிடைத்திருக்கிறது.

யார் இந்த நெல்சன் திலீப்குமார்?!

சென்னையில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்த நெல்சன், விஜய் டிவியில் பல ஆண்டுகளாக நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான பெரும்பாலான Non-Fiction நிகழ்ச்சிகளுக்கு இயக்குநர் நெல்சன்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான கமல்-50 நிகழ்ச்சியின் இயக்குநர்களில் ஒருவர் நெல்சன். 2017-ம் ஆண்டு நடைபெற்ற ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன் எனப்பலரும் கலந்துகொண்ட 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' விழாவுக்கும் நெல்சன்தான் இயக்குநராகப் பணியாற்றினார்.

#VIjay65
#VIjay65

விஜய் டிவி தொடர்புகள் மூலம் சிம்பு, சிவகார்த்திகேயன், அனிருத் ஆகியோருக்கு மிக நெருக்கமான நெல்சன், சிம்புவை வைத்து 'வேட்டை மன்னன்' எனும் படத்தை 2010-ல் தொடங்கினார். இந்தப் படம் 2011 ஏப்ரலில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. கேங்க்ஸ்டர் கதை. இதில் சிவகார்த்திகேயனும் நடித்திருந்தார். படம் பாதிமுடிவடைந்த நிலையில் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெறவில்லை. சிம்புவின் தேதிகளுக்காக காத்திருந்த நெல்சன் தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கிக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் அனிருத் கனடாவில் நடத்திய இசை விழாவுக்கு நெல்சன்தான் இயக்குநராகப் பணியாற்றினார். அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைய அனிருத்துடன் தொடர்ந்து பயணமானார். 2017-ல் நயன்தாரா நடிக்க 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. இப்படத்துக்கு அனிருத்தான் இசையமைத்தார். இந்தப் படத்தின் வெற்றியின்மூலம் சிவகார்த்திகேயனோடு 'டாக்டர்' படம் இயக்க ஆரம்பித்தார் நெல்சன். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் படம் ஏப்ரலில் ரிலீஸாகயிருக்கிறது.

நெல்சன், சிவகார்த்திகேயன்
நெல்சன், சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனோடு 'டாக்டர்' படத்தின் இறுதிக்கட்டப்பணிகளில் இருக்கும் நிலையில்தான் விஜய் 65 வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. பட்ஜெட் விவாதத்தில் சன்பிக்சர்ஸுடன் ஏ.ஆர். முருகதாஸுக்கு கருத்துவேறுபாடுகள் வர ''நான் இந்தப்படத்தில் இருந்து விலகுகிறேன்'' எனச் சொல்லிவிட்டார் முருகதாஸ். விஜய்யும், முருகதாஸின் முடிவை ஏற்றுக்கொள்ள உடனடியாக புது இயக்குநர் தேடும் படலம் ஆரம்பமானது. விஜய்யுடன் சமீப காலமாக மிக நெருக்கமாக இருக்கும் அனிருத், விஜய்யிடம் நெல்சன் பற்றிச்சொல்ல, உடனடியாக நெல்சனைக் கூப்பிட்டு கதை கேட்டிருக்கிறார் விஜய். கேங்ஸ்டர் கதையை நெல்சன் சொல்ல, விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக கதையை சன்பிக்சர்ஸிடம் சொல்லச்சொல்ல, அவர்களும் ஓகே சொல்ல பட அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள்.

#VIjay65
#VIjay65
'மாஸ்டர்' படம் பொங்கலுக்கு ரிலீஸானதும்தான், நெல்சன் பட ஷுட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் விஜய். நெல்சனும் 'டாக்டர்' பட வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் விஜய் 65 படத்தின் ஷூட்டிங்கை தொடங்கயிருக்கிறார். விஜய் 65 படம் 2021 தீபாவளி ரிலீஸுக்கு திட்டமிடப்படுகிறது.