Published:Updated:

`சிறந்த நடிகர் 2019'- ரஜினி, அஜித் டு விஜய்... இந்த 10 நடிகர்களில் இந்த ஆண்டு விகடன் விருது யாருக்கு?

Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

இந்த 10 பரிந்துரைகளில், விகடனின் சிறந்த நடிகர் - 2019 விருதை வெல்லப்போவது யார்? சரியாகக் கணித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கிற்குச் சென்று உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்.

2019-ம் ஆண்டு தமிழ் சினிமாவில், வழக்கம்போல் மாஸ் படங்களுக்கும் க்ளாப்ஸ் இருந்தது, க்ளாஸ் படங்களுக்கும் அப்ளாஸ் இருந்தது. புதியதோர் வரவேற்கத்தக்க மாற்றமாக, முன்னணி நடிகர்கள் பலர் இளம் இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தனர். அதற்கு, மக்களிடமும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்த வருடத்துக்கான சிறந்த நடிகர் யார்? விகடன் பரிந்துரைக்கும் அந்த 10 நடிகர்கள் இதோ... இதில், விகடன் விருது பெறப்போகிறவர் யாராக இருக்கும்? இப்போதே உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்.

ஆனந்த விகடன் சினிமா விருதுகள்... கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்? 2 மினிட்ஸ் ப்ளீஸ்! #StepByStepGuide

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் - பேட்ட
ரஜினிகாந்த் - பேட்ட

'பேட்ட' படத்தின் மூலம் ரஜினிகாந்த்தான் இந்த வருடம் பெரிய நடிகர் - இளம் இயக்குநர் டிரெண்டைத் தொடங்கிவைத்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி ஹாஸ்டல் வார்டனாக ஃபோரும், பேட்ட வேலனாக சிக்ஸரும் அடித்தார். அது மட்டுமன்றி கலகலப்பான காட்சிகளில் எல்லாம் ரஜினி, சில நாஸ்டால்ஜியா ஃபீலிங்க்ஸையும் நமக்குக் கடத்தினார்.

மம்மூட்டி

மம்மூட்டி - பேரன்பு
மம்மூட்டி - பேரன்பு

அடுத்ததாக, ராமின் இயக்கத்தில் மம்மூட்டி நம்மீது பேரன்பைப் பொழிந்தார். மூளை முடக்குவாதத்தால் பாதிப்புக்குள்ளான, பதின்ம வயது மகளோடு தன்னந்தனியே ஒரு தந்தை நிகழ்த்தும் உணர்ச்சிப் போராட்டத்தை நம் கண்முன் அப்படியே நிறுத்தினார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி - ஷில்பா, சூப்பர் டீலக்ஸ்
விஜய் சேதுபதி - ஷில்பா, சூப்பர் டீலக்ஸ்

விஜய் சேதுபதி, தன்மீது அதுவரை பின்னப்பட்டிருந்த இமேஜை முற்றிலும் உடைத்துவிட்டு, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் 'சூப்பர் டீலக்ஸ்'க்காக ஷில்பாவாக மாறினார். படம் நெடுக விஜய் சேதுபதியை நாம் மறந்துவிட்டு ஷில்பாவுக்காகவும் அவளின் மகனுக்காகவும் மட்டுமே ஏங்கத் தொடங்கினோம்.

சூர்யா

NGK - சூர்யா
NGK - சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா என்றதுமே, எதிர்பார்ப்புகள் பற்றிக்கொண்டன. படத்திலும் எந்தக் குறையும் வைக்காமல் ஜாலி ரகளை, ஆத்திரம், ஆற்றாமை, காதல் என நவரசங்களையும் காட்டி நம்முடைய லைக்ஸை அள்ளினா,ர் சூர்யா. நந்தகோபாலன் குமரன், என்.ஜி.கே ஆனவுடன் காட்டும் வேறு முகம், சூர்யா ஸ்பெஷல்!

அஜித்

அஜித், நேர்கொண்ட பார்வை
அஜித், நேர்கொண்ட பார்வை

வருடத்தின் தொடக்கத்திலேயே, 'விஸ்வாசம்' எனும் கமர்ஷியல் பேக்கேஜ் படம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, அந்தச் சுவடு கொஞ்சம்கூட இல்லாமல், 'நேர்கொண்ட பார்வை'யில் அமைதியான, அதே சமயம் ஆழமான நடிப்புடன் வழக்கறிஞர் பரத் சுப்பிரமணியமாக வந்து நின்றார், அஜித். நீதிமன்றக் காட்சிகளில் அந்த வீரியம்மிக்க வசனங்களுக்கு அஜித் இன்னமும் அர்த்தம் சேர்த்தார்.

ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7
ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒத்த செருப்பு சைஸ் 7

படம் முழுக்க பார்த்திபன் மட்டுமே! ஒரே ஆள், திரை முழுக்க ஆக்கிரமித்தாலும், இந்த மாசிலாமணி வசீகரிக்கவே செய்தார். உலக அளவில் ஒரே ஒரு நபர் நடித்த திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஒரே ஒருவர் நடித்து, அவரே இயக்கிய முதல் படம், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’தான்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், நம்ம வீட்டுப் பிள்ளை
சிவகார்த்திகேயன், நம்ம வீட்டுப் பிள்ளை

அரும்பொன்னைப் போல் அண்ணன் வேண்டுமென துளசி மட்டுமல்ல, எல்லாத் தங்கைகளுமே விரும்புவார்கள். அரும்பொன்னாக சிவகார்த்திகேயன் கொஞ்சம் காமெடியின் அளவைக் குறைத்துவிட்டு, எமோஷனலாகவும் ஸ்கோர் செய்திருந்தார். அந்த வகையில், சிவகார்த்திகேயன் நம்ம வீட்டுப் பிள்ளையாகவே நம் மனத்தில் நின்றார்.

தனுஷ்

தனுஷ், அசுரன்
தனுஷ், அசுரன்

சாதுவான முதிய வயது அப்பாவாக தனுஷ்... மகன் செய்துவிட்ட கொலைக்காக ஓடி ஒளிபவர், இடைவேளையில் காட்டியது அசுரப் பாய்ச்சல். அசுர வேட்டைக் காட்சிகளில் அரங்கத்தையே அலறச் செய்த ஆளுமை தனுஷின் டிரேட்மார்க்! துடிப்பான இளைஞனை ஃப்ளாஷ்பேக்கில் மட்டும் காட்டிவிட்டு, முதிர்ச்சியான சிவசாமியை முன்னிறுத்தி, கதைக்கு முக்கியத்துவம் அளித்தது அசுரனுக்கு இன்னமும் பலம் சேர்த்தது.

கார்த்தி

கார்த்தி, கைதி
கார்த்தி, கைதி

படம் முழுக்க ஆக்‌ஷன்... அதுவும் இரவில்! அப்படியொரு சேஸிங் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளுக்கு நடுவே டில்லி என்ற கதாபாத்திரம் அசால்ட்டாக ஸ்கோர் செய்ததெல்லாம் கார்த்தியின் நடிப்பால் மட்டுமே. ஆக்‌ஷன் காட்சிக்காக வேட்டியை மடித்துக்கட்டி களம் காணும் கார்த்தி, அப்பாவாக மகளின் முகத்தைப் பார்க்க ஏங்கும் காட்சிகளில் எமோஷனலாகவும் பேலன்ஸ் செய்திருப்பார். அதேபோல், இந்த வருட இறுதியில் 'தம்பி'யாகவும் வந்து கைதட்டல் பெற்றார்.

விஜய்

விஜய், பிகில்
விஜய், பிகில்

அப்பா - மகன் என டபுள் ரோல். அதிலேயே பிகில், மைக்கேல், ராயப்பன் என மூன்று முகம் காட்ட வேண்டும். சிங்கப்பெண்களின் கோச்சாக ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் மைக்கேல், நல்ல மகனாக, ஃபுட்பால் காதலனாக பிகில், அரசியல் புரிந்த அடாவடி அப்பாவாக ராயப்பன் என ஒரு நடிகராக விஜய் இதில் அடித்தது ஹேட்ரிக் கோல்தான்.

இந்த 10 பரிந்துரைகளில்... விகடனின் சிறந்த நடிகர் - 2019 விருதை வெல்லப்போவது யார்? சரியாகக் கணித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கிற்குச் சென்று உங்கள் வாக்கைப் பதிவுசெய்யுங்கள்.

Ananda Vikatan Cinema Awards 2019
Ananda Vikatan Cinema Awards 2019

அனைத்து விருதுகளுக்கான பரிந்துரைகளையும் அலசி ஆராய்ந்து, அதில் விகடன் வெற்றியாளர் யாராக இருப்பார் என்று யோசித்து, உங்களின் வாக்குகளைச் செலுத்துங்கள். கூடவே, `2019 தமிழ் சினிமா பற்றி மூன்றே வார்த்தைகளில் ஒரு பன்ச் சொல்லுங்கள்!' என்ற இடத்தில் உங்களின் கலக்கல் `Slogan'-ஐயும் பதிவுசெய்யுங்கள். ஜனவரி 11 அன்று சென்னையில் நடக்கவிருக்கும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள்' நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு