Election bannerElection banner
Published:Updated:

சிம்பு கேட்டது எத்தனை கோடி... `அஞ்சாதே-2'வில் அருண் விஜய் வந்தது எப்படி?!

மிஷ்கின், அஞ்சாதே -2, சிம்பு
மிஷ்கின், அஞ்சாதே -2, சிம்பு

தனது கேரியரில் பத்தாவது படமாக விஷால், பிரசன்னா என அதே கூட்டணியோடு 'துப்பறிவாளன் -2' படத்தை லண்டனில் தொடங்கினார் மிஷ்கின். படப்பிடிப்பை கிட்டத்தட்ட முழுவதுமாக முடித்து 2020 புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு, ஜனவரியில் சென்னை வந்து சேர்ந்தது துப்பறிவாளன் -2 டீம்.

மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த அவரது 8-வது படம் 'துப்பறிவாளன்.' இத்திரைப்படம் ஹிட் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த விஷாலுக்குப் பெரிய பிரேக்கைக் கொடுத்தது. பிரசன்னாவுக்கும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. மிஷ்கினின் கரியர் கிராஃபிலும் முக்கியமான படமாக மாறியது 'துப்பறிவாளன்'. இது 2017-ம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் ஹிட் அடித்ததால், உடனடியாக சீக்வெல் பண்ணும் பேச்சுகள் கிளம்பி, ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்தன. இதற்கு இடையில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க 'சைக்கோ' படத்தை இயக்கினார் மிஷ்கின். அடுத்து, 'துப்பறிவாளன் 2' படத்தின் வேலை ஆரம்பமானது.

vishal, Thupparivaalan -2
vishal, Thupparivaalan -2

தனது கரியரில் பத்தாவது படமாக விஷால், பிரசன்னா என அதே கூட்டணியோடு 'துப்பறிவாளன் -2' படத்தை லண்டனில் தொடங்கினார் மிஷ்கின். படத்தின் படப்பிடிப்புகளை கிட்டத்தட்ட முழுவதுமாக முடித்து 2020 புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு, ஜனவரியில் சென்னை வந்துசேர்ந்தது துப்பறிவாளன் -2 டீம். இந்நிலையில்தான் மிஷ்கின் இயக்கிய 'சைக்கோ' படம் ரிலீஸானது. இந்தப்படத்தின் ஹிட்டைப்பொறுத்து 'துப்பறிவாளன் -2' படத்தின் இயக்குநர் சம்பளத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்பதுதான் விஷாலுக்கும் - மிஷ்கினுக்கும் இடையிலான வாய்வழி ஒப்பந்தம்.

ஜனவரி இறுதியில் 'சைக்கோ' படம் ரிலீஸாகி படத்துக்கு நல்ல விமர்சனங்களும் வர ஆரம்பித்தன. இதைத்தொடர்ந்து விஷாலிடம், 'துப்பாறிவாளன் - 2' படத்துக்கான சம்பளம் பற்றி பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார் மிஷ்கின். ஆனால், மிஷ்கின் கேட்ட சம்பளத்தில் விஷாலுக்கு உடன்பாடு இல்லையென்பதோடு, 'சைக்கோ' ஒன்றும் பெரிய வெற்றிப்படம் இல்லையென வாதாடியிருக்கிறார். இதனால் வாக்குவாதம் முற்றி பிரச்னை பெரிதாக வெடித்தது. 'துப்பறிவாளன் - 2' படத்தை விஷாலிடமே கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டார் மிஷ்கின். இதன்பிறகு, இவர்கள் இருவருக்கும் இடையிலான சண்டை பொதுவெளிக்கு வந்தது.

simbu
simbu

''மிஷ்கினுக்கு யாரும் படம் இயக்க வாய்ப்பே கொடுக்கக்கூடாது'' என விஷால் அறிக்கைவிட, மிஷ்கின் எதிர் சவால்விட்டு அடுத்தப் படத்துக்கான வேலைகளை ஆரம்பித்தார். தனது ஹிட் படங்களில் ஒன்றான 'அஞ்சாதே' படத்தின் சீக்வெல் பண்ணலாம் என முடிவெடுத்தார் மிஷ்கின். ஏற்கெனவே நடிகர் சிம்பு மிஷ்கினிடம் அவர் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகச் சொல்லியிருந்ததால் சிம்புவிடம் கதை சொல்லியிருக்கிறார். சிம்புவுக்கு கதை டபுள் ஓகே. ஆனால், சிம்பு சொன்ன சம்பளம் கேட்டு மிரண்டு போயிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். ஆமாம்... சிம்பு கேட்ட சம்பளம் 10 கோடி. சிம்புவின் சம்பளம் அதிகம் என்பதோடு ஷூட்டிங்கிற்கும் சரியாக வருவார் என்பதற்கான உத்திரவாதம் இல்லையென்பதால் தயாரிப்பு தரப்பு நோ சொல்ல, கதையை அருண் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.

Arun VIJAY
Arun VIJAY

கரியரில் ஒரு பெரிய ஹிட்டுக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் அருண் விஜய், மிஷ்கினிடம் கதையைக் கேட்டதும் ஓகே சொல்லிவிட்டார். சம்பளமும் பிரச்னையில்லை என்பதால் ஹீரோ பஞ்சாயத்து முடிந்தது. இப்போது வில்லனைத் தேர்ந்தெடுப்பதில்தான் சிக்கல். மிஷ்கினுக்கு மிகவும் ஃபேவரைட் நடிகர் பிரசன்னா. 'அஞ்சாதே' படத்தின் வில்லனும் இவர்தான். ஆனால், அருண் விஜய் ஹீரோவாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்து 'மாஃபியா' தற்போது வெளியாகியிருக்கிறது. இதற்கும் பார்ட் 2 இருக்கிறது என்பதால் பிரசன்னா 'அஞ்சாதே -2'வில் இருக்க மாட்டார் என்கிறார்கள்.

Prasanna
Prasanna

பிரசன்னாவுக்கு பதில் புதிய வில்லனைத் தேடிக்கொண்டிருக்கிறார் மிஷ்கின். லாக்டெளன் முடிந்து இயல்புநிலை திரும்பியதும், 'அஞ்சாதே -2' ஷூட்டிங் தொடங்கிவிடும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு