Published:Updated:

#Vijay65 முருகதாஸை மாற்றியது 25 கோடிகளா... நடந்தது என்ன?!

முருகதாஸின் கடைசி மூன்று படங்கள் சரியாகப்போகாததால் அவருடைய சம்பளத்தை 25 கோடியில் இருந்து குறைத்துக்கொள்ளச்சொல்லிக் கேட்கப்பட்டது. ஆனால், அவர் சம்பள விஷயத்தில்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விஜய் 65 படத்தில் இருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் விலகல் சினிமா உலகில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. முருகதாஸ் ஏன் விலகினார் என பல செய்திகள் பரவிவரும் நிலையில் #Vijay65 படத்தோடு சம்பந்தப்பட்ட முக்கியமானவர்கள் சிலரிடம் பேசினோம்.
இயக்குநர் முருகதாஸ்
இயக்குநர் முருகதாஸ்

சன் டிவிக்கு கதை பிடிக்கவில்லை, அதில் மாற்றங்கள் செய்யச்சொல்லி சன் டிவி கேட்க அதை முருகதாஸ் மறுத்துவிட்டார் என்கிற செய்திகள்தான் முதலில் நமக்கு கிடைத்தது. ஆனால், இதுதொடர்பாக தயாரிப்பு தரப்பில் சிலரிடம் விசாரித்தபோது, முருகதாஸின் சம்பளம்தான் பிரச்னையே என்றார்கள். ''முருகதாஸின் கடைசி மூன்று படங்கள் சரியாகப்போகாததால் அவருடைய சம்பளத்தை 25 கோடியில் இருந்து குறைத்துக்கொள்ளச்சொல்லிக் கேட்கப்பட்டது. ஆனால், அவர் சம்பள விஷயத்தில் கறாராக இருந்ததுதான் பிரச்னை" என்றார்கள்.

#Vijay65  படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகல்... வெற்றிமாறன்தான் புதிய இயக்குநரா?!

முருகதாஸ் தரப்பில் விசாரித்தோம். "சம்பள விஷயத்தில் எந்த பிரச்னையும் இல்லை. இயக்குநரின் சம்பளம் 19 கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு ஜனவரியிலேயே எல்லாம் இறுதி செய்யப்பட்டுவிட்டது. விஜய் சாரின் சம்பளமும் ஏற்கெனவே இறுதிசெய்யப்பட்டு சம்பளங்கள் போக படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பதும் இறுதி செய்யப்பட்டுவிட்டது.

விஜய் - முருகதாஸ்
விஜய் - முருகதாஸ்

இயக்குநரின் சம்பளம்தான் பிரச்னையாக இருந்தால் இவ்வளவு நாட்கள் எப்படி ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்திருக்கும்? அப்போதே முருகதாஸ் வெளியேறியிருப்பாரே! கதையில்தான் சில கருத்துவேறுபாடுகள் இருந்தன. அதுதான் முருகதாஸ் வெளியே வரக்காரணம். இன்னொரு விஷயம் இந்தப்படத்தில் அரசியல் துளியும் இல்லை. இந்தக் கதைக்கும் அரசியலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்றார்கள்.

விஜய் 65 படத்தின் அடுத்த இயக்குநர் யார் என்பதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. அடுத்த இயக்குநர் யார் என்பது இறுதியாக இன்னும் எப்படியும் ஒரு மாதம் ஆகும் எனத்தெரிகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு