Published:Updated:

வற்புறுத்தும் ஶ்ரீப்ரியா, `பாபநாசம் -2’ படத்தில் நடிக்கத் தயங்கும் கமல்ஹாசன்… காரணம் என்ன?!

பாபநாசம் கமல்

30 நாள்களுக்குள் ஷூட்டிங் முடித்துவிடலாம் எனவும், கெளதமிக்குப் பதிலாக மீனாவையே தமிழிலும் நடிக்கவைத்துவிடலாம் எனவும் ஶ்ரீப்ரியா கமல்ஹாசனிடம் பேசிவருவதாகச் சொல்கிறார்கள்.

வற்புறுத்தும் ஶ்ரீப்ரியா, `பாபநாசம் -2’ படத்தில் நடிக்கத் தயங்கும் கமல்ஹாசன்… காரணம் என்ன?!

30 நாள்களுக்குள் ஷூட்டிங் முடித்துவிடலாம் எனவும், கெளதமிக்குப் பதிலாக மீனாவையே தமிழிலும் நடிக்கவைத்துவிடலாம் எனவும் ஶ்ரீப்ரியா கமல்ஹாசனிடம் பேசிவருவதாகச் சொல்கிறார்கள்.

Published:Updated:
பாபநாசம் கமல்
தேர்தல் தோல்வி தந்த அழுத்தத்தில் இருந்து மீண்டு வெளியே வந்துவிட்டார் கமல்ஹாசன். அக்டோபரில் பிக்பாஸ் சீசன் 5 ஷூட்டிங் தொடங்கி இருப்பதால் அதற்கு முன்பாக ‘விக்ரம்' படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிட திட்டமிட்டிருக்கிறார் கமல்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கயிருக்கும் ‘விக்ரம்’ படம் கமலின் சொந்த தயாரிப்பு. அதனால் ‘விக்ரம்' படத்தின் ஷூட்டிங்கை முதலில் தொடங்கி நடத்தி முடித்துவிடவேண்டும் என்பதில் தீவிரமாகயிருக்கிறார் கமல். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை 60-70 நாள்களில் முடிக்கும் வகையில் திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்கிடையே இந்தப் படத்தைப் பற்றி நீண்ட நாள்களாக அப்டேட்டே இல்லாமல் இருந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஸ்டன்ட் மாஸ்டர்கள் அன்பறிவு ‘விக்ரம்' படக்குழுவில் இணைந்திருப்பதாக போட்டோவோடு செய்தி பகிர்ந்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, கமல்
லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, கமல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதையடுத்து நிலுவையில் இருக்கும் ‘இந்தியன் -2’ படத்தின் ஷூட்டிங். இப்படத்தின் படப்பிடிப்பை பொறுத்தவரை ஷங்கர் - லைகா நிறுவனத்துக்கு இடையேதான் இப்போது பிரச்னை போய்க்கொண்டிருக்கிறது. இப்பிரச்னை முடிந்து இருவரும் சுமூகமாக வந்தால், தான் நடித்து கொடுப்பதற்குத் தயாராகவே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் கமல்.

இதற்கு அடுத்தபடியாக ‘பாபநாசம்-2’ படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. மோகன்லால் நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் பெரும் ஹிட் அடித்த ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்திருந்தார் கமல்ஹாசன். 6 ஆண்டுகளுக்கு முன்னர் ‘பாபநாசம்’ என்கிற பெயரில் வெளியான இந்தப்படம் தமிழிலும் வெற்றிபெற்றது. இதே படம் தெலுங்கிலும் வெங்கடேஷ், மீனா நடித்து பெரிய ஹிட் ஆனது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்போது மலையாளத்தில் எடுக்கப்பட்ட ‘த்ரிஷ்யம் - 2’ படமும் பெரிய வரவேற்பைப் பெற, அந்தப்படத்தின் தெலுங்கு, தமிழ் ரீ-மேக் உரிமைகள் வாங்கப்பட்டிருக்கின்றன. தெலுங்கில் பார்ட்-2 வில் வெங்கடேஷ் - மீனா என அதே ஜோடி நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதமே தொடங்கிவிட்டது. இந்தப் படத்தை வெங்கடேஷின் சொந்த நிறுவனமான சுரேஷ் பிக்சர்ஸும், ஶ்ரீப்ரியாவும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

'த்ரிஷ்யம் 2' படத்தில்...
'த்ரிஷ்யம் 2' படத்தில்...

தமிழ் ரீமேக் உரிமையையும் ஶ்ரீப்ரியாவே வாங்கியிருக்கிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருக்கும் ஶ்ரீப்ரியா இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதால் இந்தப் படத்தை நடித்துத்தரும்படி கமல்ஹாசனிடம் கேட்டுவருகிறார். ஆனால், கமல் தயக்கம் காட்டுகிறார். ஏனெனில் ‘பாபநாசம்’ படத்தின் க்ளைமேக்ஸிலும், ‘த்ரிஷ்யம்' க்ளைமேக்ஸிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மலையாளத்தில் மோகன்லால் தவறை ஒப்புக்கொள்ளவே மாட்டார். ஆனால், தமிழில் கமல்ஹாசன் குற்றத்தை மறைமுகமாக ஒப்புக்கொண்டு பேசுவது போன்ற காட்சிகள் இடம்பிடித்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாபநாசம் க்ளைமேக்ஸ்
பாபநாசம் க்ளைமேக்ஸ்

அதனால், தமிழில் பார்ட்-2 வுக்கு என்ன ஸ்கோப் இருக்கிறது என கமல்ஹாசன் நடிக்கத் தயங்குவதாக சொல்லப்படுகிறது. மேலும் ஓடிடி-யில் கிட்டத்தட்ட எல்லோருமே ‘த்ரிஷ்யம்-2’ பார்த்துவிட்ட நிலையில் இப்போது மீண்டும் தமிழில் எடுத்தால் படம் பார்க்கும் ஆர்வம் மக்களுக்கு இருக்குமா என்பது சந்தேகமே என கமல்ஹாசன் நினைப்பதாகச் சொல்கிறார்கள்.

30 நாள்களுக்குள் ஷூட்டிங் முடித்துவிடலாம் எனவும், கெளதமிக்குப் பதிலாக மீனாவையே தமிழிலும் நடிக்கவைத்துவிடலாம் எனவும் ஶ்ரீப்ரியா கமல்ஹாசனிடம் பேசிவருவதாகச் சொல்கிறார்கள். ‘பாபநாசம்-2’ படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறாரா இல்லையா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism