Published:Updated:

''தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம்!'' - சிம்புவின் அறிக்கையும், அணிகள் உருவாக்கமும் சொல்வது என்ன?

''இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம்...''

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

''என் உயிரினும் மேலான ரசிகர்கள்...'' என்று தன் ரசிகர்களை அழைத்து வந்த சிலம்பரசன், இப்போது கூடுதல் அன்போடு 'மதிப்பும் பேரன்பும் கொண்ட என் இரத்தத்தின் இரத்தமான உறவுகளே' என்று அழைக்க ஆரம்பித்திருக்கிறார்.

வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'மாநாடு' தீபாவளி அன்று திரைக்கு வருகிறது என்று அறிவித்த நிலையில், இப்போது ரசிகர்களையும் ஒருங்கிணைக்க முடிவு செய்திருக்கிறார். அதன் முதல்கட்டமாக தன் ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி
வெங்கட் பிரபு, சிம்பு, சுரேஷ் காமாட்சி

''நீண்ட நாளாக இயற்கையின் செயல்களால், உங்களிடம் நேரடியாக உறவாடாமல், தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம். மேலும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரிவுபடுத்த உள்ளோம். ஆகையால் மாநில, மாவட்ட, வட்ட, பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கலந்து கொள்ள பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்றவர் ரஜினி ஸ்டைலில் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இதுகுறித்து சிம்புவின் வட்டாரத்தில் விசாரித்தால், ''அவருக்கு அரசியலுக்கு வரும் ஐடியாவெல்லாம் இல்லை. லாக்டெளனுக்குப் பிறகு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதில் இடைவெளி விழுந்து விடக்கூடாது என்பதாலேயே ரசிகர்களுடன் பேச விரும்புகிறார். மன்றத்தையும் நவீனப்படுத்துகிறார். வேறு காரணம் ஒன்றுமில்லை'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு