Published:Updated:

`உங்களை எப்பவுமே பின் தொடர்வேன்!' - ரஜினியின் பிறந்த நாளுக்கு மகளின் ஸ்பெஷல் வாழ்த்து

உங்களுடைய சிரிப்பை மட்டுமே நான் காண விழைகிறேன்" ... ``மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா"

நடிகர் ரஜினி  தனது குடும்பத்தினருடன்
நடிகர் ரஜினி தனது குடும்பத்தினருடன் ( Instagram )

திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தனது 69-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவரின் ரசிகர்கள் பல்வேறு வடிவங்களில் அவருக்குப் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடிவருகின்றனர். பல்வேறு துறைகளில் இருக்கும் முக்கியப் பிரமுகர்கள், ரஜினிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கான வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் இன்ஸ்டாகிராமில், ``உங்களை எப்பவுமே பின் தொடர்வேன் அப்பா" என்று தனது தந்தைக்கு வாக்குக் கொடுத்து வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார். மேலும், ``எப்பவுமே உங்களுடைய சிரிப்பை மட்டுமே நான் காண விரும்புகிறேன். மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா" என்று பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் அந்தப் பதிவு ரஜினியின் குணங்கள், கொள்கைள், பண்பு நலன்கள் என அனைத்தையும் நான் பின்பற்றி நடப்பேன் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது என ரஜினியின் ரசிகர்கள் கமென்ட் செய்துவருகிறார்கள்.

அந்தப் பதிவுக்குப் பொருத்தமாக, ரஜினியைப் பின் தொடர்ந்து செல்லும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதே போன்று ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து Happy birthday my life! my father... my everything!" என்று வாழ்த்துத் தெரிவித்து மகிழ்ந்துள்ளார். ரஜினியை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்விதமான வாழ்த்துச் செய்திகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் இருவரும்.

நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ்
ட்விட்டர்

ரஜினின் மருமகனும் ஐஸ்வர்யாவின் கணவருமான நடிகர் தனுஷ் ரஜினிக்கு ட்விட்டரில் தனது வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார். அதில், ``பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா'' என்று பதிவிட்டு தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.