'நேச்சுரல் லைட்’ சென்னை சர்வதேச திரைப்பட விழா அளித்த கொடைகளில் ஒன்று.
ஆவணப்பட இயக்குநர் ‘டெனிஸ் நேகி’ தனது முதல் திரைப்படத்தையும் ஆவணப்படம் போன்று கட்டமைத்து இருந்தது மிகச்சிறப்பு. வழமையான போர்த் திரைப்படங்களிலிருந்து முற்றிலும் மாறாக உருவாக்கப்பட்டிருந்தது.
கரிய களிமண் நிறத்தில் படத்தின் வண்ணம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. பசுமை நிறைந்த அடர்ந்த காட்டின் பின்னணி மிகுந்த காட்சிகள் கூட பச்சை நிறம் தவிர்க்கப்பட்டு இருந்தன.
எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும், எளிய மக்களை எலிகளைப் போல கையாளுவதை உலக சினிமாக்கள் மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளன.

எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும், எளிய மக்களை எலிகளைப் போல கையாளுவதை உலக சினிமாக்கள் மட்டுமே காட்சிப்படுத்தியுள்ளன. ‘கம் அண்ட் சீ’, ‘இவான் சைல்ட்ஹூட்’ போன்ற படங்களின் வரிசையில் நிற்பதற்காக ‘நேச்சுரல் லைட்’ திரைப்படத்தை கட்டமைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் டெனிஸ் நேகி.
குடிசைக்குள் எளிய மக்களை உயிரோடு வைத்து கொளுத்துவது உன்மத்தர்களின் வழக்கம் போல! தீயில் வெந்து சாம்பலாகும் போது எழும்பும் அவலக்குரல் இரண்டாம் உலகப் போரோடு முடிவடைந்து விடவில்லை. நேற்றும் தர்மபுரியில் கேட்டதே...
நேச்சுரல் லைட் உன்னதமான உலக சினிமா!
‘Natural Light’ | Running time: 103 MIN | (Original title: “Természetes fény”) | Crew: Director, writer: Dénes Nagy, based on the novel by Pál Závada. Camera: Tamás Dobos. Editor: Nicolas Rumpl. Music: Santa Ratniece.