Election bannerElection banner
Published:Updated:

கவுண்டமணி அட்வைஸ்... வடிவேலு அழைப்பு... - யோகிபாபு சிறப்பு ஷேரிங்ஸ்

யோகிபாபு
யோகிபாபு

"நான் அதிக சம்பளம் கேட்கிறேன்னு செய்தி பரப்புறவங்ககிட்ட, அதை ஆதாரத்தோடு நிரூபிங்கன்னு கேட்டுக்கிறேன்." - யோகிபாபு

"கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரின்னு உங்களுக்கு சீனியர் காமெடி நடிகர்களாக இருக்கிறவங்க பேசிய விஷயங்கள் ஞாபகம் இருக்கா?"

``இவங்க எல்லாரையும் மீட் பண்ணிப் பேசியிருக்கேன். அவங்களும் நிறைய விஷயங்களை என்கிட்ட சொல்லியிருக்காங்க. குறிப்பா, கவுண்டமணி சார் சொன்ன ஒரு அட்வைஸைத்தான் இப்போவரைக்கும் பாலோ பண்ணிட்டு இருக்கேன். முதல்முறை அவரை மீட் பண்ணும்போது, 'தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்'னு சொன்னார். இப்போ வரைக்கும் அப்பப்போ சார்கிட்ட பேசுவேன்.

அதே மாதிரி, வடிவேலு அண்ணனும் 'கோலமாவு கோகிலா' படம் பார்த்துட்டு என்னை ஆபீஸுக்கு வரச்சொன்னார். அவர்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். விவேக் சாரும் `கோலமாவு கோகிலா' படம் பார்த்ததுக்கு அப்புறம் கூப்பிட்டுப் பேசினார். அவரோடு 'பிகில்', 'அரண்மனை - 3' படத்துல நடிச்சிருக்கேன். சந்தானமும் சூரியும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.''

யோகிபாபு
யோகிபாபு

"நீங்க அதிக சம்பளம் கேட்கிறதாகவும் சொல்றாங்களே?"

``நான் அதிக சம்பளம் கேட்கிறேன்னு செய்தி பரப்புறவங்ககிட்ட, அதை ஆதாரத்தோடு நிரூபிங்கன்னு கேட்டுக்கிறேன். ஏன்னா, இந்த லாக்டெளன் அறிவிச்சு படங்களோட ஷூட்டிங் எல்லாம் நிறுத்தி வெச்சப்போ, நானே என் படத் தயாரிப்பாளர்கள்கிட்ட பேசி என் சம்பளத்தைக் குறைச்சேன். இதை நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். இவ்வளவு நாளா இது என் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயமா இருந்துச்சு.

ஏன்னா, கஷ்டப்பட்டு சினிமாவுக்குள் வந்தவன் நான்; சினிமாதான் எனக்கு எல்லாமே. அதனால, நான் வேற யாரையும் கஷ்டப்படுத்திப் பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.''

> " `பேய் மாமா' படம் எப்படி வந்திருக்கு? அந்தப் படத்தில் வடிவேலுதான் முதலில் நடிக்க வேண்டியது எனத் தகவல்கள் வந்தன. 'இம்சை அரசன்' படத்துக்கு பிரச்னை வந்தபோதும் அதில் நீங்க நடிக்கப்போறதா செய்திகளும் வந்துச்சு. வடிவேலுவுக்கு மாற்றா யோகி பாபுவைப் பார்க்கிறார்களா?"

> "ரஜினி, அஜித், விஜய்யோடு நடித்ததில் நீங்க கத்துக்கிட்ட விஷயங்கள் என்ன?"

> " `யோகி பாபு ஹீரோவா நடித்திருக்கும் படம்'னு சில படங்களுக்கு போலியா விளம்பரங்கள் பண்ணிட்டு இருக்காங்கன்னு சமீபத்தில் சொல்லியிருந்தீங்க. அது என்ன பிரச்னை?"

யோகிபாபு
யோகிபாபு

> "பாரம்பர்யமான ஏவிஎம் கார்டன் டப்பிங் தியேட்டர் இப்போ திருமண மண்டபமா மாறப்போகுதுன்னு செய்திகள் வந்தது; அதில் கடைசியாக டப்பிங் செய்த படம் உங்களோடதுதான். அதை நினைக்கும் போது எப்படி இருக்கு..?"

> "உங்க கல்யாணத்தை ரொம்ப சிம்பிளா பண்ணிட்டீங்களே..?"

- இந்தக் கேள்விகளுக்கான பதில்களுடன் கூடிய முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "இனிமே ஹீரோவா நடிக்க மாட்டேன்!" - யோகிபாபு https://bit.ly/32VkIsD

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு