சினிமா
Published:Updated:

ஷேர்பட்டா பரம்பரை! - “சொந்தமா ஒரு ஒட்டகம் வாங்கினேன்!”

இர்ஃபான்
பிரீமியம் ஸ்டோரி
News
இர்ஃபான்

நமக்கு என்னலாம் பிடிக்கும்னு பொறுமையா யோசிக்க ஆரம்பிச்சேன். எனக்கு சாப்பாடு ரொம்பப் பிடிக்கும்.

“யூடியூபில் ஹோட்டல்கள் பற்றி நான் ரிவ்யூ பண்ணுவேன்கிறது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அதுக்காக ஹோட்டலில் மேனேஜர் வேலை பார்த்தேன்னு உங்களுக்குத் தெரியுமா?” - ஆரம்பத்திலேயே ஆச்சர்யப்படுத்துகிறார் இர்ஃபான். வார இறுதிநாள்களில் குடும்பத்துடன் நல்ல ஹோட்டலுக்குச் செல்ல வேண்டும் என்பவர்களின் முதல் வேலை, இர்ஃபான் தளத்தை எட்டிப் பார்ப்பதுதான். தமிழ் யூடியூபர்ஸில் தனி இடம் பிடித்த கதையைச் சொல்லத்தொடங்குகிறார் இர்ஃபான்.

‘சின்ன வயசுல இருந்தே ஏதாவது சாதிக்கணுங்குற எண்ணம் இருந்துச்சு. நான் நிறைய தன்னம்பிக்கைப் பொன்மொழிகள் படிப்பேன். அப்படிப் படிச்சு மனசுல நின்ன ஒரு பொன்மொழி, ‘நம் இலக்கை அடைவதற்கு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் செலவிட்டால் போதும்.’ ஒரு மணி நேரம் நமக்காக ஏன் செலவழிக்கக்கூடாதுங்குற எண்ணம் ஏற்பட்டுச்சு. வெளிநாட்டினருடைய யூடியூப் சேனல்கள் நிறைய பார்ப்பேன். பார்த்தால் மட்டும் போதுமா, நாமளே ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாமேன்னு தோணுச்சு.

ஷேர்பட்டா பரம்பரை! - “சொந்தமா ஒரு ஒட்டகம் வாங்கினேன்!”

ஓகே. சேனல் ஆரம்பிச்சாச்சு. என்ன வீடியோஸ் போடறதுன்னு ரூம் போடாம யோசிச்சேன். அப்போ நான் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துட்டிருந்தேன். எனக்கு சினிமா பிடிக்குங்குறதனால சினிமா விமர்சனம் பண்ணலாம்னு யோசிச்சேன். இ.எம்.ஐ போட்டு கேமரா குவாலிட்டி நல்லா இருக்கிற மாதிரி ஒரு போன் வாங்கினேன். நானே கேமராவை செட் பண்ணி வச்சு ரிவ்யூ ஷூட் பண்ணுவேன். எடுத்த வீடியோவை கார்ல ஆபீஸ் போகிற இடைவெளியில் எடிட் பண்ணுவேன். ஆபீஸ் போனதும் அப்லோடு பண்ணிடுவேன். இதையே ரொம்ப நாளா செய்துட்டிருந்தேன். ஆனா, அந்த வீடியோஸ் எல்லாம் அவ்வளவா வியூஸ் போகலை. அப்புறம் இங்கிலீஷ்ல வீடியோ பிளாக் பண்ணினேன். ஊஹூம், அதுவும் பெரிசா ஒர்க்-அவுட் ஆகலை.

பிறகு நமக்கு என்னலாம் பிடிக்கும்னு பொறுமையா யோசிக்க ஆரம்பிச்சேன். எனக்கு சாப்பாடு ரொம்பப் பிடிக்கும். படங்களை ரிவ்யூ பண்ற மாதிரி நாம ஏன் சாப்பாட்டை ரிவ்யூ பண்ணக் கூடாதுன்னு நினைச்சேன். அந்தச் சமயத்துல எனக்குத் தெரிஞ்சு பெரிய அளவில் யாரும் சாப்பாட்டை ரிவ்யூ பண்ணுனதில்லை. என் சேனலுக்குக் கொஞ்சம் கொஞ்சமா வியூஸ் அதிகமாக ஆரம்பிச்சது. பலருக்கும் என் வீடியோஸ் பிடிக்க ஆரம்பிச்சது. அப்பவும் நான் சொன்ன மாதிரி வேலை பார்த்துட்டேதான் இதையெல்லாம் செய்துட்டிருந்தேன்” என்று இர்ஃபான் பேசிக்கொண்டே போக, “ஹலோ, ஆரம்பத்தில ஒண்ணு சொன்னீங்களே, அதை மறந்துட்டீங்க?” என்றேன்.

ஷேர்பட்டா பரம்பரை! - “சொந்தமா ஒரு ஒட்டகம் வாங்கினேன்!”
ஷேர்பட்டா பரம்பரை! - “சொந்தமா ஒரு ஒட்டகம் வாங்கினேன்!”

“ஞாபகம் இருக்கு மேடம். சொல்றேன். சாப்பாடு பற்றி ரிவ்யூ பண்றதனால முதலில் ரெஸ்டாரன்ட் எப்படி இயங்குதுன்னு தெரிஞ்சுக்கலாம்னு நான் பண்ணிட்டு இருந்த வேலையை விட்டுட்டு ஒரு ரெஸ்டாரன்ட்ல மேனேஜரா சேர்ந்தேன். ஒரு சாப்பாட்டை ரெடி பண்ணிக் கொடுக்கிறதுக்குப் பின்னாடி எவ்வளவு உழைப்பு இருக்குன்னு நேர்ல பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு சாப்பாட்டை ரிவ்யூ பண்றதுக்காக ஒரு ஹோட்டலுக்குப் போறோம்... அன்னைக்கு சாப்பாடு நல்லா இல்லைன்னா, தினமும் அது அப்படி நல்லா இல்லாமதான் இருக்குங்குறது கிடையாது. அன்னைக்கு அந்த ஹோட்டலின் சமையல் மாஸ்டர் லீவு போட்டிருக்கலாம். வழக்கமா நல்லா நடக்கற ஒரு விஷயம் அன்னைக்கு சொதப்பியிருக்கலாம். இப்படி அதுக்குப் பின்னாடி என்ன காரணம்னாலும் இருக்கலாம். நல்லா இல்லைன்னு நான் சொல்லிட்டேன்னா அது அவங்களுடைய பல நாள் கனவை, உழைப்பை ஒரே நொடியில் கெடுத்ததுக்கு சமம். அதையெல்லாம் நான் மேனேஜராக இருக்கும்போதுதான் கத்துக்கிட்டேன்.

ஷேர்பட்டா பரம்பரை! - “சொந்தமா ஒரு ஒட்டகம் வாங்கினேன்!”

பல விஷயங்கள் கத்துக்கிட்டு அங்கிருந்து வெளியில் வந்து முழுநேர யூடியூபர் ஆனேன். தினமும் ஒரு வீடியோ போஸ்ட் பண்ணணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய ஆடியன்ஸ்கிட்ட சொல்லிட்டு தினசரி வீடியோ போட ஆரம்பிச்சேன். அப்போ என் கூட யாரும் வேலை பார்க்கலை. நானே ஷூட் பண்ணி நானே எடிட் பண்ணி போஸ்ட் பண்ணினேன். பிறகு சின்னதா ஒரு ஆபீஸ் செட்டப் ஆரம்பிச்சேன். ஆரம்பத்தில் எனக்குன்னு எடிட்டர் ஒருத்தரை வேலைக்குச் சேர்த்தேன். தொடர்ந்து வீடியோஸ் போட்டேன். 2018லிருந்து இப்போ வரைக்கும் விடாம வீடியோ போட்டுட்டு இருக்கேன். இடையில இரண்டு நாள் வீடியோ போடாம மிஸ் பண்ணியிருப்பேன், அவ்வளவுதான்! வீடியோஸ் பண்ண ஆரம்பிச்ச சமயத்தில் என் தங்கச்சிதான் எனக்கு ஃபுல் சப்போர்ட். அம்மா, அப்பாவுக்குக்கூட நான் என்ன பண்றேன்னு தெரியாது. அவளுக்கு மட்டும்தான் தெரியும்.

ஷேர்பட்டா பரம்பரை! - “சொந்தமா ஒரு ஒட்டகம் வாங்கினேன்!”
ஷேர்பட்டா பரம்பரை! - “சொந்தமா ஒரு ஒட்டகம் வாங்கினேன்!”

அப்பா தீவிர மத நம்பிக்கை கொண்டவர். அப்பாவுக்கு நான் வீடியோ பண்றதெல்லாம் தெரியாது. அவர் ஃபிரெண்ட்ஸ் மூலமா அப்பாவுக்குத் தெரிஞ்சு வீட்ல கொஞ்சம் பிரச்னைகள் வந்துச்சு. அப்போதான் நான் கொஞ்சம் வெளியில் தெரிய ஆரம்பிச்சேன். இதை விட முடியாதுங்குறதுல நான் ரொம்பவே உறுதியா இருந்தேன். சில பர்சனல் பிரச்னைகளால அப்பா தனியா போய்ட்டார். இப்போ அப்பா எங்ககூட இல்லை. அம்மாவும் தங்கச்சியும் என்னைப் புரிஞ்சுக்கிட்டாங்க. சப்போர்ட் பண்றாங்க. இப்போ அவங்க இரண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க. அது போதும் எனக்கு!

புதுசா எப்படியெல்லாம் வீடியோஸ் பண்ணலாம்னு யோசிச்சேன். முதலில் டெல்லிக்குப் போனேன். அப்புறம்தான் வெளிநாட்டில் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டு ரிவ்யூ சொல்லலாம்னு கிளம்பினேன். முதல்ல தாய்லாந்து. அங்கே முதலைக்கறி, பாம்புக்கறி, தேள் கறின்னு எல்லாம் வித்தியாசமா இருந்துச்சு. அந்த வீடியோஸ் எல்லாத்துக்கும் நல்ல ரீச் கிடைச்சது.

அதே சமயம் மத ரீதியான பிரச்னைகளும் வந்துச்சு. அதுக்குப் பிறகு எனக்கான அங்கீகாரம் கிடைக்க ஆரம்பிச்சது. என்னை நிறைய பேர் கவனிக்க ஆரம்பிச்சாங்க. துபாயில் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒரே ஒரு ஒட்டகம் வாங்கி அதை வச்சு வீடியோ பண்ணினேன். யாரும் எனக்கு எந்தக் காசும் கொடுக்கலை. எல்லா ரிஸ்க்கும் நானே எடுத்தேன்.

ஷேர்பட்டா பரம்பரை! - “சொந்தமா ஒரு ஒட்டகம் வாங்கினேன்!”

வீடியோவுக்காக எவ்வளவு செலவானாலும் யோசிக்க மாட்டேன். என் ஆடியன்ஸ் எதைப் போட்டாலும் பார்ப்பாங்கங்கிற எண்ணம் எனக்குக் கிடையாது. ஒவ்வொரு நாளும் அவங்களுக்குப் புதுசா நான் ஏதாச்சும் காட்டணும். யூடியூப்ல கிடைக்கிற வருமானத்துல என் தேவைக்குப் போக மீதியை கொஞ்சமும் யோசிக்காம அடுத்த வீடியோவுக்காகச் செலவு செய்வேன்.

இப்போ என்னுடைய ஆபீஸ்ல இரண்டு எடிட்டர்கள் வேலை பார்க்குறாங்க. என் தாய்மாமா அவர் செய்துட்டு இருந்த வேலை பிடிக்கலைன்னு என்கூட வந்து சேர்ந்தார். இப்போ அவர்தான் கேமரா பார்த்துக்கிறார். என் சித்தி பையனும் என்கூடதான் வேலை செய்றான். அதோடு சேர்த்து எங்க டீம்ல என் தங்கச்சியும் இருக்கா. அவதான் எந்த வீடியோ எப்போ அப்லோடு பண்ணணும், வீடியோ கன்டென்ட் எப்படி இருக்குன்னு எல்லாமே பார்த்து அப்லோடு பண்ணுவா.

இர்ஃபான்
இர்ஃபான்

புகழும் காசும் கிடைக்கணும் என்கிற ஆசை எனக்கு இருந்துச்சு. ஆனா, அதுக்காக மட்டும் இந்த சேனலைத் தொடங்கலை. என் சந்தோஷத்துக்காக இந்த சேனலை ஆரம்பிச்சேன். அதனால தான் விடாமுயற்சியோட எனக்குப் பிடிச்சதை மனப்பூர்வமா செய்துட்டு இருந்தேன். இப்போ என் சேனல் மூலமா கிடைக்கிற புகழையும், அங்கீகாரத்தையும் நான் ஏத்துக்கிறேன். எனக்கு கார் வாங்கணும். வீடு வாங்க ணுங்குறது நீண்ட நாள் கனவா இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கார் வாங்கிட்டேன். இப்போ எங்களுக்குன்னு சொந்தமா வீடு கட்டிட்டு இருக்கேன்” என்ற இர்ஃபான் முகத்தில் ஆயிரம் மின்னல்கள்!