Published:Updated:

யூனி - ஒரு பெண்ணின் கதை | உலக சினிமா #MyVikatan

இயக்குநர் கமீலா அந்தினி ஒரு பெண்ணாக இருப்பதால் மிக நுட்பமாக பெண்ணரசியலை அணுகி இருக்கிறார். ‘யூனி’ திரைப்படம் அரசியல் பார்வையையும்,சமூகப்பார்வையையும் கொண்டிருக்கிறது.

யூனி - ஒரு பெண்ணின் கதை | உலக சினிமா #MyVikatan

இயக்குநர் கமீலா அந்தினி ஒரு பெண்ணாக இருப்பதால் மிக நுட்பமாக பெண்ணரசியலை அணுகி இருக்கிறார். ‘யூனி’ திரைப்படம் அரசியல் பார்வையையும்,சமூகப்பார்வையையும் கொண்டிருக்கிறது.

Published:Updated:

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழாவில் இரண்டாம் நாள் திரையிடலில் பார்த்த மிக முக்கியமான திரைப்படம் ‘யூனி’. இந்தோனேஷியா நாட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் பல பன்னாட்டு விழாக்களில் தேர்வு செய்யப்பட்டு விருதுகளை அள்ளி வருகிறது. இயக்குநர் கமீலா அந்தினி ஒரு பெண்ணாக இருப்பதால் மிக நுட்பமாக பெண்ணரசியலை அணுகி இருக்கிறார். ‘யூனி’ திரைப்படம் அரசியல் பார்வையையும்,சமூகப்பார்வையையும் கொண்டிருக்கிறது.

யூனி பள்ளியின் இறுதி ஆண்டில் படித்துக்கொண்டு இருக்கும் பதின்வயதுப்பெண். படத்தின் தொடக்க காட்சியே அதிரடியாக இருக்கிறது. யூனி நிர்வாணமாக நின்று கொண்டு கத்தரிப்பூ வண்ணத்தில் இருக்கும் உள்ளாடைகளை அணிகிறாள். ஹிஜாப்புடன் கூடிய யூனிபார்ம் அணிந்து பள்ளிக்கு செல்கிறாள்.

இரண்டு முறை திருமணத்தை வேண்டாம் எனத் தடுத்தால் திருமணமே நடக்காது என்ற பிற்போக்குதனமான நம்பிக்கை கொண்ட சமூகத்தில் மூன்றாவது நபர் யூனியை மணக்க விருப்பம் தெரிவிக்கிறார்.

பள்ளிக்காட்சிகள் படிக்கின்ற காலத்தில் மாணவிகள் கர்ப்பம் அடைவது,திருமணம் செய்வது போன்ற பிரச்னைகளை படம் பிடித்துக்காட்டுகிறது. இந்தோனேஷிய அரசு மாணவிகள் கன்னிதன்மையை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கன்னித்தன்மை இல்லாதவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவர் என அதிரடியாக அறிவிக்கிறது. அடிப்படைவாதிகள் ஆட்சி புரிந்தால் எத்தகைய அவலங்களை பொதுமக்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கு இக்காட்சி ஒரு சாட்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யூனி நன்கு படித்து உதவித்தொகை பெற்று உயர்கல்வி பெறுவதை லட்சியமாக கொண்டு இருக்கிறாள். ஆனால், யூனியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்து இரண்டு பேர் முயற்சிக்கிறார்கள். இரண்டு முறை திருமணத்தை வேண்டாம் எனத் தடுத்தால் திருமணமே நடக்காது என்ற பிற்போக்குதனமான நம்பிக்கை கொண்ட சமூகத்தில் மூன்றாவது நபர் யூனியை மணக்க விருப்பம் தெரிவிக்கிறார். அதுவும் அவளின் பள்ளி ஆசிரியர் முயற்சிக்கிறார்.

யூனி இப்பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்கிறாள்? என்பதை படத்தின் இறுதிக்காட்சிகள் விளக்குகின்றன.

யூனி... இயக்குநர் கமிலா அந்தினி அவர்களின் திரைமொழி தனி!.

Directed by Kamila Andini Written by Kamila Andini, Prima Rusdi Produced by Ifa Isfansyah, Fran Borgia, Birgit Kemner Starring Arawinda Kirana Cinematography Teoh Gay Hian Edited by Lee Chatametikool Music by Alexis Rault Production companies: Fourcolours Films, Akanga Film Asia, Manny Films Running time: 95 minutes Countries: Indonesia, Singapore, France, Australia Languages: Indonesian, Serang-Javanese

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism