Published:Updated:

``இஸ்லாம் எனக்கான ஒளியைக் கொடுத்துச்சு. மீண்டு வந்தேன்!" - யுவன் ஷேரிங்ஸ்

யுவன் ஷங்கர் ராஜா

"விறுவிறுன்னு வெளியே வந்து 'பட்'னு ஒரு அடி. 'கீப் கொயட்'னு சொல்லிட்டு உள்ளே போய்ட்டார். அந்த ஒருதடவைதான் அப்பா என்னை அடிச்சது.

``இஸ்லாம் எனக்கான ஒளியைக் கொடுத்துச்சு. மீண்டு வந்தேன்!" - யுவன் ஷேரிங்ஸ்

"விறுவிறுன்னு வெளியே வந்து 'பட்'னு ஒரு அடி. 'கீப் கொயட்'னு சொல்லிட்டு உள்ளே போய்ட்டார். அந்த ஒருதடவைதான் அப்பா என்னை அடிச்சது.

Published:Updated:
யுவன் ஷங்கர் ராஜா
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்தவற்றில் இருந்து...

அப்பா உங்ககூட பகிர்ந்துகிட்ட அனுபவங்கள், பண்ணின அறிவுரைகளில் உங்களால மறக்கமுடியாதது எது?

- தேவன் சார்லஸ்

"அப்பா இதுவரைக்கும் இப்படிப் பண்ணு அப்படிப் பண்ணுன்னெல்லாம் சொன்னதே இல்ல. நான் என்னெலாம் படம் பண்ணுறேன்னுகூட அவருக்குத் தெரியாது. ஒரே ஒரு தடவை ஒரு பாட்டு அம்மாவுக்குப் போட்டுக் காட்டுறப்போ அப்பாவும் கேட்டார். அந்தப் பாட்டுல 'உனக்காக சாகிறேன்' சாயல்ல சில வார்த்தைகள் வரும். 'பாடல்களில் எதிர்மறை வார்த்தைகள் வேணாம். அந்த நெகட்டிவ் எனர்ஜி பாடுறவங்களையும் தொத்திக்கும். முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கலாம்'னு சொன்னார். அந்த ஒரு அறிவுரைதான் அவர் எனக்குக் கொடுத்தது. ஆனா, அடி வாங்கியிருக்கேன். சின்னப்பையனா இருந்தப்போ அப்பாவோட நேரம் செலவழிக்கிற வாய்ப்பு எப்பவாவதுதான் கிடைக்கும். அப்படி ஒருநாள் 'பீச்சுக்குப் போலாம்'னு சொன்னார். கார்ல ஏறிக் கிளம்புறப்போ அவரைப் பார்க்க சில தயாரிப்பாளர்கள் வந்துட்டாங்க. அப்பா அவங்ககூட பேசுறதுக்கு உள்ள போயிட்டார். நான் வெளியே காருல உட்கார்ந்து, 'பீச்சுக்குப் போலாம், பீச்சுக்குப் போலாம்'னு கத்திக்கிட்டு ஹாரன் அடிச்சுக்கிட்டே இருந்தேன். விறுவிறுன்னு வெளியே வந்து 'பட்'னு ஒரு அடி. 'கீப் கொயட்'னு சொல்லிட்டு உள்ளே போய்ட்டார். அந்த ஒருதடவைதான் அவர் என்னை அடிச்சது."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாழ்க்கையில ஒரு மோசமான காலகட்டத்துல மது குடிக்க ஆரம்பிச்சதா நீங்களே ஒரு நேர்காணல்ல சொல்லியிருந்தீங்க? அதென்ன காலகட்டம், அந்த மதுப்பழக்கத்திலிருந்து எப்படி மீண்டிங்கன்னு பகிர்ந்துக்க முடியுமா?

- நித்திஷ்

"அம்மா இறந்த சமயம் அது. நம்மளை இத்தனைநாளா தாங்கின தூண் இனி இல்லங்கிறதை என்னால ஏத்துக்க முடியல. அதுவரைக்கும் எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. அவங்க இழப்பைத் தாங்கிக்க முடியாமதான் அந்தப் பழக்கத்தை ஆரம்பிச்சேன். ஆனா, அந்தச் சமயத்துலயும், 'இது நாம இல்லையே... நாம இதெல்லாம் பண்ண மாட்டோமே'ன்னு உள்ள தோணிகிட்டேதான் இருந்தது. அந்தச் சமயத்துல சினிமாவை விட்டே விலகியிருந்தேன்.

அம்மாவோட கடைசி நாளில் பெட்ல இருந்து அவங்க கை சட்டுனு கீழே விழுந்தது. டாக்டர்ஸ் வந்து செக் பண்ணிட்டு அவங்க இறந்துட்டதா சொன்னாங்க. 'போன நிமிஷம் வரை அந்தக் கையில இருந்த ஆன்மா அதுக்குள்ள எங்கே போச்சு'ங்குற கேள்வி துரத்திகிட்டே இருந்தது. அந்தத் தேடல்தான் என்னை இஸ்லாமுக்குள்ள கொண்டு போச்சு. இந்தமாதிரியான சமயங்களில் எல்லாருக்குமே ஒரு பிடிப்பு தேவைப்படும். அப்படி இஸ்லாம் எனக்கான ஒளியைக் கொடுத்துச்சு. மீண்டு வந்தேன்."

24 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள். இந்தப் பயணத்துல உங்களால மறக்க முடியாத பாராட்டு எது?
உங்க டிஷர்ட் போட்டோ இவ்ளோ வைரலாகும்னு எதிர்பார்த்தீங்களா?
சினிமாவுல சாதியை மையப்படுத்திய படங்கள் நிறைய வர ஆரம்பிச்சிருக்கு. இதை எப்படிப் பார்க்குறீங்க?
யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா
நீங்க அப்பாவோட ட்யூன்களில் இருந்து இன்ஸ்பையராகி சில பாடல்கள் போட்ருக்கீங்க 'மேகம் கருக்குது மழ வரப் பாக்குது' மாதிரி. அப்படி நீங்க இன்ஸ்பையராகி ஆனா நாங்க இன்னும் கண்டுபிடிக்காத பாடல்கள் எதுவும் இருக்கா?
அப்பாவால கிடைச்ச விஷயங்கள் நிறைய இருந்திருக்கும். அப்பாவால மிஸ் பண்ணுன விஷயங்கள்னு ஏதாவது இருக்கா?
நெப்போடிசம்தான் இப்போ ரொம்பவே விவாதிக்கப்படுற விஷயம். இந்த வாரிசு ஆதிக்கத்தை நீங்க எப்படிப் பார்க்குறீங்க?
அப்பா காப்பிரைட் பிரச்னைகளை பேசினப்போ அவருக்கு ஆதரவாவும் எதிராவும் நிறைய கருத்துகள் வந்தது. நீங்க ஒரு இசையமைப்பாளரா காப்பிரைட் பிரச்னையை எப்படி அணுகுறீங்க?

இந்தக் கேள்விகளுக்கு யுவன் பகிர்ந்த விரிவான பதில்களை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "எனக்கும் அந்த அவமானம் நடந்திருக்கு!" - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா! https://bit.ly/2GCax3F

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV