சினிமா
Published:Updated:

மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா? - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

யுவன் ஷங்கர் ராஜா
News
யுவன் ஷங்கர் ராஜா

#AnandaVikatanPressMeet

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட்இது.

``அஜித்துக்கு நீங்கள் இசையமைக்கும் படங்களில் தீம் மியூசிக் ரொம்ப கெத்தா இருக்கும். ஆனா, ‘நேர்கொண்ட பார்வை’ அவரோட ஒரு மாறுபட்ட படம். அதுக்கு இசையமைக்கிறது எவ்வளவு சவாலா இருந்தது?’’

- சுதர்சன் காந்தி

“எனக்கு ரொம்பவே சவாலான படமா இருந்தது ‘நேர்கொண்ட பார்வை.’ படத்துல நிறைய சைலன்ஸுக்கான ஸ்கோப் இருக்கும். ஒரு மாஸ் ஹீரோ படத்துல எல்லாக் காட்சிகளையுமே மியூசிக் போட்டு ஹைப் ஏத்தணும்னு அவசியம் இல்ல. அமைதிக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. அதனால அந்த பார்க் சண்டைக்காட்சியைத் தவிர மத்த காட்சிகள் எல்லாத்துக்கும் அந்த சைலன்ஸைக் கடத்தலாம்னு முன்னாடியே நானும் இயக்குநர் வினோத்தும் முடிவு பண்ணிட்டோம்.”

மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா? - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

``ஒருதலைக்காதல், டபுள்சைடு, ஏக்கம், பிரிவுன்னு காதலிக்கிறவங்க எல்லார்கூடவும் பயணிச்சிருக்கீங்க? உங்களுடைய காதல் பத்திச் சொல்லுங்க!’’

- ஜெனிஃபர் ம.ஆ

“என்னோட காதல் என்னோட ரசிகர்கள்தான். என்னோட ஏற்றம், தாழ்வுன்னு எல்லாத்துலயும் அவங்க கூட நின்னுருக்காங்க. என் மேல அவங்க வெச்சிருக்கிற இந்தக் காதல்தான் என்னை இன்னும் இன்னும் அவங்களுக்காக இசையமைக்க வைக்குது. நான் பண்ணுற படங்கள் எல்லாமே அவங்களுக்காகத்தான். இலங்கைப் போர் உச்சத்துல இருந்த சமயம். ஒரு இலங்கைத் தமிழர் எனக்கு அப்போ மெயில் பண்ணுவார். ‘நாளைக்கு நாங்க இருப்போமா இல்லையான்னு தெரியாது. ஆனா, இந்த வாழ்தலுக்கான பிடிப்பா உங்க இசைதான் இருக்கு’ன்னு கடைசியா ஒருதடவை மெயில் பண்ணினார். அதுக்கு அப்புறம் அவர் என்ன ஆனார்னே தெரியல. ரொம்ப வருஷங்கள் கழிச்சு சமீபத்துலதான் இன்னொரு ரசிகர் மூலமா அவர் நல்லா இருக்கார்னு தெரிஞ்சு அவர்கூட வீடியோ கால்ல பேசினேன். அவர் நல்லா இருக்கார்னு ஒரு வார்த்தை தெரிஞ்சுக்க இத்தனை ஆண்டுகள் வெயிட் பண்ணினேன். அவர்கூட பேசின அந்தத் தருணம் எமோஷனலா இருந்தது. இந்த அளவுகடந்த காதல்தான் என்னை மேலும் மேலும் உழைக்க வைக்குது.”

மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா? - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

``யுவன் இசை முன்னாடி மாதிரி இல்லன்னு தொடர்ச்சியா வைக்கப்படுற விமர்சனங்களுக்கு உங்க பதில் என்ன?’’

- ஜெனிஃபர் ம.ஆ

“ரஹ்மான் சார் ‘ரோஜா’ படத்தப்போ பண்ணுன பாடல்கள் வேற, இப்போ அவர் பண்ணுற ஸ்டைல், சவுண்டிங் எல்லாம் வேற. அப்பாவுமே அப்படித்தான். எல்லா இசையமைப்பாளர்களும் இப்படி ஒரு கட்டத்துல இருந்து இன்னொரு கட்டத்துக்கு நகர்ந்துகிட்டேதான் இருப்பாங்க. எனக்கு நான் பண்ணுனதையே திரும்பத் திரும்பப் பண்ணுறதுல உடன்பாடில்ல. யாராவது என்கிட்ட வந்து ‘7ஜி மாதிரியே ஒரு படத்துக்கு இசையமைக்கணும்னு சொன்னா, அதான் 7ஜிக்கே பண்ணிட்டேனே, திரும்ப ஏன் பண்ணணும்’னுதான் கேப்பேன். நான் புதுசா ஏதாவது முயற்சி பண்ணினா, யுவன் இசை பழையபடி இல்லன்னு சொல்லுவாங்க. சரின்னு பழையமாதிரியே இசையமைச்சா, யுவன் ஒரேமாதிரியேதான் பண்ணுறாருன்னு சொல்லுவாங்க. இசைவடிவம் மாறிக்கிட்டே இருக்கும். அதுக்கேத்தமாதிரி அப்டேட் ஆகிட்டே இருந்தாதான் ரொம்ப நாள் சினிமால நிக்கமுடியும். அதைத்தான் நானும் பண்ணுறேன்.”

மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா? - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

``தமிழ்த் திரையுலகினர் மத்தியில் மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா பண்ணப்படுதுன்னு சிலர் குற்றச்சாட்டு முன்வைக்கிறதை எப்படிப் பார்க்கிறீங்க?’’

- சுகுணா திவாகர்

“மதம் மாறுறது அவங்கவங்களோட தனிப்பட்ட விருப்பம். என்னோட வாழ்க்கையில கடினமான தருணங்களில் யாருக்கும் தெரியாம ரூமைப் பூட்டிக்கிட்டு மணிக்கணக்குல அழுதிருக்கேன். இப்படியான தருணங்கள், கதைகள் ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் இருக்கு. அதுல இருந்து மீள்றதுக்கு மதமாற்றம் ஒரு பதிலாக்கூட இருக்கலாம். ஒருத்தர் அனுபவிக்கிற வலி, வேதனைகள் பத்தி எல்லாம் தெரிஞ்சுக்காம ‘சும்மா காசுக்காக மதம் மாறு றாங்கன்னு சொல்றது நியாயமே இல்லையே.”

மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா? - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

``முன்னாடி ஒரு நேர்காணலில் அம்மா உங்களை ஹீரோவா பார்க்க ஆசைப்படுவதா சொல்லியிருந்தாங்க. நீங்களும் இப்போ நிறைய போட்டோஷுட் பண்ணுறீங்க? எப்போ ஹீரோவா என்ட்ரி?’’

- ஆர்.சரண்

“போட்டோஷூட் ரசிகர் களுக்காகப் பண்ணுறது. ரொம்ப நாளா ஒரே செட் புகைப் படங்களைப் பயன்படுத்து றாங்களேன்னு அவங்களுக்காகத் தான் இந்தப் போட்டோஷூட் எல்லாம். என்னை நீங்க தனியிசை ஆல்பங்களில் பார்க்கலாம். மத்தபடி ஹீரோ ரோல் எல்லாம் எனக்கு செட்டாகாது. படத்துல வர்ற பாடல்களில் நான் வர்றேன்னா அது நடிக்கிறதுக்கே நான் ரொம்ப சிரமப்படுவேன். ரொம்பக் கஷ்டமான பிராசஸ் அது. ஸோ, எனக்கு ஹீரோ வாகணும்ங்குற எண்ணமே இல்ல.’’

மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா? - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

``விஜய்கூட மறுபடியும் இணைகிற வாய்ப்பு கிடைச்சா, அவரைப் பாட வைப்பீங்களா? அந்தப் பாட்டு என்ன ஜானர்ல இருக்கும்?’’

- கிருஷ்ணா

கண்டிப்பா மாஸான ஒரு பாட்டு இருக்கும். அவரோட வாய்ஸ் மெலடிக்கும் நல்லா செட்டாகும். அதனால கூடவே ஒரு மெலடியும் பாட வெச்சிடுவேன்.”

மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா? - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!