Published:Updated:

``யுவன் அதிகம் பேசமாட்டார்னு பலர் நினைக்கிறாங்க. ஆனா..." - ரகசியம் பகிரும் ஸாஃப்ருன்

ஸாஃப்ருன்
ஸாஃப்ருன்

ஸியா வந்த பிறகு அவரது வாழ்க்கை, உலகம் எல்லாம் அவளைச் சுற்றியே மாறிடுச்சுனு சொல்லலாம். ஸ்டூடியோ... அதைவிட்டா வீடு... வீட்டுக்கு வந்ததும் குழந்தையோடு விளையாட ஆரம்பிச்சிடுவார்.

'ஸா ஃப்ருன்' என்று வரவேற்கும் போர்டு தொடங்கி, நுழைவாயில், இன்டீரியர், உள்ளே ஹேங்கரில் தொங்கும் உடைகள் என எங்கெங்கும் பூக்கள்மயம். பூக்களுக்கு மத்தியில் இன்னொரு பூவாக மலர்ந்த சிரிப்புடன் வந்தமர்கிறார் ஸாஃப்ருன். சென்னையின் ஃபேஷன் ஏரியாவான காதர் நவாஸ்கான் சாலையின் புது அடையாளம். ஸாஃப்ருனுக்கு இன்னும் அழகான அறிமுகம் தரலாம். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் மனைவி இவர்.

''யுவன் எப்போதுமே ரொம்ப சப்போர்ட்டிவ் ஹஸ்பண்ட். நான் பண்ற விஷயங்கள், எடுக்கும் முடிவுகள்னு எல்லாத்துக்கும் எனக்குத் துணையா இருப்பார். அப்பாவா யுவன் ரொம்ப அன்பும் அக்கறையும் உள்ளவர். எங்க குழந்தை ஸியாவுக்கு நாலு வயசாகுது. என் மகளை நான் பார்த்துக்கிறவதைவிடவும் யுவன் நல்லா பார்த்துப்பார். ஸியாகிட்ட யாரைப் பிடிக்கும்னு கேட்டீங்கன்னா, யோசிக்காம டாடின்னு சொல்வாள். அவளுக்கு சாப்பாடு ஊட்டறது, தூங்கவைக்கிறதுனு எல்லாம் பண்ணுவார். அவ பிறந்து, முதல் ஆறு மாசங்களுக்கு டயாப்பர்கூட மாத்தியிருக்கார். ஸியா பிறந்தபோது அவளை அவர்தான் குளிப்பாட்டுவார்.

எனக்கு அவருடைய மியூசிக் மேல தனி லவ். கல்யாணத்துக்கு முன்னாடி அவர் மியூசிக்ல என் ஃபேவரைட்ஸ்னா 'ராம்' படத்துல 'ஆராரி ராரோ'வும், 'காதல்கொண்டேன்' பாடல்களும், 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யும், 'போகாதே'வும் ரொம்ப ஸ்பெஷல்

ஸியா வந்த பிறகு அவரது வாழ்க்கை, உலகம் எல்லாம் அவளைச் சுற்றியே மாறிடுச்சுனு சொல்லலாம். ஸ்டூடியோ... அதைவிட்டா வீடு... வீட்டுக்கு வந்ததும் குழந்தையோடு விளையாட ஆரம்பிச்சிடுவார். டைம் கிடைச்சா என்னை வெளியில் கூட்டிட்டுப் போவார். பொதுவா செலிபிரிட்டீஸ் இப்படிப் பொது இடங்களுக்குப் போகும்போது பிரைவசி பாதிக்கப்படும்னு யோசிப்பாங்க, ஆனா, என் கணவர் அதையெல்லாம் பார்க்க மாட்டார். யாராவது போட்டோ எடுக்க வந்தாலும் அன்பாதானே கேட்கறாங்கன்னு சொல்வார்.

எனக்கு ஒரே ஒரு குறைதான். கல்யாணமானது லேருந்து எனக்கு பாஸ்தா பண்ணித் தரேன்னு சொல்லிட்டிருக்கார். இன்னிக்கு வரைக்கும் அது நடக்கலை. ஆனாலும், அப்பப்போ எனக்கு டீ போட்டுத் தருவார். நடுராத்திரியில பசிக்குதுன்னு சொன்னாலும் ஓடிப்போய் சாண்ட்விச் வாங்கிட்டு வந்து தருவார். பிரெட்ல நட்டெல்லா போட்டுத் தருவார்" - திகட்டத் திகட்ட காதல் சொன்னவர், கணவரின் இன்னொரு முகத்தை இன்னும் சுவாரஸ்யமாகச் சொல்கிறார்.

''யுவன் ரொம்ப சாஃப்ட், அதிகம் பேச மாட்டார்னுதான் நிறைய பேர் நினைச்சிட்டிருக்காங்க. ஆனா, அவர் அப்படி யில்லை. அவருக்குத் தெரிஞ்ச, பழகின ஆட்கள்னா, டீஸ் பண்ணி அழவெச்சிடுவார். பயங்கரமா மிமிக்ரி பண்ணுவார். அதுல நான்தான் அவர்கிட்ட அடிக்கடி மாட்டுவேன். என் பேச்சில் கீழக்கரை ஸ்லாங் அதிகம் இருக்கும். உதாரணத்துக்கு நாங்க வந்தாங்க, போனாங்கனு சொல்றதுக்குப் பதில் 'வந்தாஹ... போனாஹ...'னு சொல்வோம். 'எல்லாத்துக்கும் மேல'னு சொல்றதுக்குப் பதிலா 'ஆக மேல'னு சொல்வோம். நான் அவரைப் பாடச் சொல்லிக் கேட்டா, என் ஸ்லாங்கை எல்லாம் வெச்சு பாட்டா பாடிக் கிண்டலடிப்பார். அதனால அவரை பாடச் சொல்லவே பயப்படுவேன்.

ஆனாலும், எனக்கு அவருடைய மியூசிக் மேல தனி லவ். கல்யாணத்துக்கு முன்னாடி அவர் மியூசிக்ல என் ஃபேவரைட்ஸ்னா 'ராம்' படத்துல 'ஆராரி ராரோ'வும், 'காதல்கொண்டேன்' பாடல்களும், 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யும், 'போகாதே'வும் ரொம்ப ஸ்பெஷல். இப்போ கொஞ்ச நாளா 'பேரன்பு' படத்துல 'செத்துப்போச்சு மனசு'தான் மனசுக்குள்ளே ரீவைண்டு ஆயிட்டே இருக்கு. நம்பிக்கையில்லாத மூடில் தொடங்கி, பயங்கர எனர்ஜியோடு, நம்பிக்கையோடு முடியும் அந்தப் பாட்டு.

``யுவன் அதிகம் பேசமாட்டார்னு பலர் நினைக்கிறாங்க. ஆனா..." - ரகசியம் பகிரும் ஸாஃப்ருன்

ஸியா என்னைவிட பயங்கரமான யுவன் ரசிகை. அப்பாவும் மகளும் சேர்ந்துட்டாங்கன்னா எப்போதும் பாட்டும் ஆட்டமும்தான். இப்போ லேட்டஸ்ட்டா 'ஹீரோ' படத்துல அவ தாத்தா பாடின 'ஆயிரம் முகங்கள்' பாட்டு ஸியாவுக்கு ரொம்பப் பிடிக்குது. டிராவல் பண்ணும்போது திரும்பத் திரும்ப நான்ஸ்டாப்பா கேட்கற அளவுக்கு ரசிக்கிறா" - அம்மாவாகவும் மனைவியாகவும் இரட்டை பூரிப்பு முகத்தில். இவர்களின் காதல் கதை பகிர இந்தப் பேட்டி போதாது என்பதால் மீண்டும் கொஞ்சம் டிசைனிங் பக்கம் வருவோம்...

- 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமான ஸாஃப்ருன், இப்போது தனது பெயரிலேயே பிராண்டை அறிமுகப்படுத்தி, பொட்டிக் ஆரம்பித்துள்ளார். இதுவரையிலான அனுபவங்களையும், எதிர்காலத் திட்டங்களையும் அடுக்கும் அவரது சிறப்புப் பேட்டியை அவள் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க >"கூட்டுக்குடும்பமா இருக்கிறது எனக்குப் பெரிய ப்ளஸ்!" - இது யுவன்ஷங்கர் ராஜா வீட்டு ரகசியம் https://cinema.vikatan.com/tamil-cinema/yuvan-shankar-raja-wife-zafroon-nisa-interview

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு