2010 ம் ஆண்டு வெளியான வீர் படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்தவர் ஷரீன் கான். 12 வருடங்களாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருபவரை விடாது சர்ச்சை சுற்றுகிறது. சமீபத்தில் ஆங்கில பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் காட்டமாக பேசியுள்ளார்.
"என்னை திரையுலத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் சல்மான் கான். அதற்காக அவருக்கு நன்றி உடையவளாக இருக்கிறேன். ஆனால் என்னுடைய போராட்டம் அதன் பிறகே ஆரம்பித்தது. எதுவும் தெரியாது திரையுலகில் நுழைந்திருந்தேன். சல்மான் நல்ல மனிதர் அவர் பிஸியான மனிதரும் கூட. சின்ன சின்ன விஷயங்களுக்காக அவர் முதுகில் தொங்கி கொண்டிருக்கும் குரங்காக நான் இல்லை." என்கிறார் ஷரீன்.

Also Read
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சல்மான் கான் அவருடைய கேரியருக்கு உதவி செய்வதாகவும் ஷரீன், சல்மான் மூலமாக காரியங்களைச் சாதித்து கொள்வதாகவும் சர்ச்சை இருந்தது. "அது உண்மை இல்லை. சல்மான் ஒரு போன் கால் தொலைவில் இருக்கும் நண்பர். நான் அவரைத் தொந்தரவு செய்வதில்லை. இப்படியான சர்ச்சைகள் நான் கடந்து வந்த போராட்டத்தை, என்னுடைய உழைப்பைக் குறைத்து மதிப்பிட செய்கிறது" என வருந்தியிருக்கிறார் ஷரீன். ஹரிஷ் வியாஸ் இயக்கத்தில் வெளியான Hum Bhi Akele Tum Bhi Akele கடைசியாக அவர் நடித்து வெளியான திரைப்படம். "நடிகர்கள் பொதுவாக பாதுகாப்பு உணர்வற்றவர்கள். நான் எந்த ரேஸிலும் இல்லை. என்னுடைய பணியில் நான் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உள்ளேன். நான் இன்னொருவரால் நிரப்பமுடியாத இடத்தில் இருப்பதாக நினைக்கிறேன். " என மனம் திறந்துள்ளார் ஷரீன்.