Published:Updated:

``சும்மா விடுவானா பெரியவர் மகன்?'' சசிகுமாரின் `கொம்புவெச்ச சிங்கம்டா' படத்தின் டீசர்

சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடித்த 'கொம்புவெச்ச சிங்கம்டா' படத்தின் டீசர் வெளியானது

`அசுரவதம்' படத்தைத் தொடர்ந்து, சமுத்திரக்கனி இயக்கத்தில் 'நாடோடிகள் 2', 'பேட்ட', கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய படங்களை நடித்து முடித்த நடிகர் சசிகுமார், 'கொம்புவெச்ச சிங்கம்டா' எனும் புதிய படத்தில் கமிட்டாகி இருந்தார்.

சசிகுமார் - மடோனா செபாஸ்டியன்
சசிகுமார் - மடோனா செபாஸ்டியன்

இதை 'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார். 'மரகத நாணயம்', 'கனா' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். 'குற்றம் 23', 'தடம்' ஆகிய படங்களைத் தயாரித்த இந்தர் குமார் தயாரித்து வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

இதில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். மேலும், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சசிகுமார் - சூரி
சசிகுமார் - சூரி

இந்தப் படத்தின் படப்பிடிப்பை சமுத்திரக்கனி தொடங்கி வைக்க, நடிகர் சூர்யா இதன் மோஷன் போஸ்டரை வெளியிட்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில், இதன் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு. இது தவிர, 'கென்னடி கிளப்', 'நாடோடிகள் 2', நிக்கி கல்ராணியுடன் ஒரு படம் என அடுத்தடுத்து சசிகுமாரின் படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.