Published:Updated:

``எங்களை `செம ஜோடி'னு என் மனைவியே பாராட்டினாங்க!" - பிரஜின்

பிரஜின்
பிரஜின்

``இதுவரைக்கும் யாரும் சீரியலுக்காக பாக்ஸர் கேரக்டர் எடுத்தது கிடையாது. இந்த சீரியலில்தான் முதன்முதலா பாக்ஸர் ரோல் கொண்டு வர்றாங்க" - பிரஜின்

`சின்னத்தம்பி' சீரியலுக்குப் பிறகு, சின்ன பிரேக் எடுத்திருந்த பிரஜின், அடுத்ததாக நடிக்கும் சீரியல் `அன்புடன் குஷி'. காதல் கதைகளில் அப்படியே பொருந்திப்போகும் பிரஜினுக்கு இன்னொரு ஹேப்பினஸ், அவருக்குப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகள். இரட்டை மகிழ்ச்சியில் இருக்கும் பிரஜினிடம் பேசினேன்.

அன்புடன் குஷி
அன்புடன் குஷி

``குழந்தை பிறந்த பிறகு லைஃப் எப்படி மாறியிருக்கு?"

`` 'சின்னதம்பி' சீரியலுக்கு அப்புறம் 7 மாத இடைவெளி விட்டுட்டு அன்புடன் குஷிங்கிற சீரியல்ல கமிட்டாகியிருக்கேன். வீட்டுல இருந்த 7 மாதங்களும் குழந்தைகளோட நேரம் செலவு செய்யக் கிடைச்சது கடவுள் கொடுத்த கிஃப்ட். அந்த ரெண்டு குட்டித் தேவதைகள் பண்ற சேட்டைகளை ரசிச்சிகிட்டே இருந்தேன். முதல் தேவதையுடைய பெயர் ருத்ர பாலா, ரெண்டாவது தேவதை பெயர் மித்ர பாலா. ரெண்டு பேரும் செம வாலு. கட்டிலைச் சுத்தி தடுப்புச் சுவர் போட்டு வெச்சிருக்கோம். கொஞ்ச நேரம்கூட, ஒரு இடத்துல உட்காரமாட்டாங்க. ஒரு குழந்தையைச் சமாளிக்கிறதே பெரிய விஷயம். இதுல, ரெண்டு குழந்தைகளைப் பார்த்துகிறாங்க. அதுக்காகவே என் மனைவிக்கு சூப்பர் மாம் பட்டம் கொடுக்கலாம். மூணு நிமிஷம் வித்யாசத்துல ரெண்டு பேரும் பிறந்தாங்க. என்னுடைய ரெண்டு குழந்தைகளால என் வாழ்கையே அழகாகிடுச்சு.”

``உங்க புது சீரியல் பற்றிச் சொல்லுங்க?"

பிரஜின்
பிரஜின்

`` `அன்புடன் குஷி' சீரியல்ல என் கதாபாத்திரம் கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும். `மெட்ராஸ்' படத்தில் வரும் கார்த்தி ரோலை நினைவுப்படுத்தும். வடசென்னையில, ஒரு சின்ன வீட்டுல, குடும்பத்தோட வசிக்குற பாக்ஸர் கதாபாத்திரம் என்னுடையது. அன்பு மட்டுமே நிறைஞ்சிருக்கிற ஒரு அழகான கூட்டுக் குடும்பம். அந்த ஏரியாவுல நடக்கும் நல்லது, கெட்டது எல்லாத்துக்கும் நான்தான் பொறுப்பு. அப்படியொரு நல்ல கதாபாத்திரம். அதே ஏரியாவுல வசிக்கிற வட இந்தியப் பெண்ணோட காதல் ஏற்பட, எப்படி இருவரின் கலாசாரமும் செட் ஆகுதுன்னு அழகா சொல்லியிருக்கார் இயக்குநர். கண்டிப்பா இது வித்தியாசமான கதைக்களம்கொண்ட சீரியல். காமெடி, காதல், குடும்பம்-ன்னு கதை நகரும்."

``இந்த சீரியலுக்காக பாக்ஸிங் பயிற்சி எடுத்தீங்களா?"

பிரஜின்
பிரஜின்

``இதுவரைக்கும் யாரும் சீரியலுக்காக பாக்ஸர் கேரக்டர் எடுத்தது கிடையாது. இந்த சீரியல்லதான் முதன்முதலா பாக்ஸர் ரோல் கொண்டு வர்றாங்க. பாக்ஸிங் அவ்வளவு சீக்கிரம் கத்துக்க முடியாது. சின்னச் சின்ன அடிப்படையான விஷயம் கத்துக்கவே ரெண்டு மாதம் ஆகிடுச்சு."

``ப்ரோமோ பார்த்தா இந்தி சீரியல் மாதிரி ஃபீல் ஆச்சே?"

பிரஜின்
பிரஜின்

``சீரியல் ப்ரோமோ பார்த்துட்டு நிறைய பேர், `இந்தி டப்பிங் சீரியல்ல உனக்கு என்ன வேலை'னு கேட்டாங்க. `இந்தி சீரியல்ல நீங்க ஏன் நடிக்குறீங்க'னு கேட்டாங்க. சீரியல் வெவ்வேறு கலாசாரத்தைப் பிரதிபலிக்கணும். இதுதான் ஐடியா. பலர் ப்ரோமோ நல்லா இருக்குன்னு பாராட்டவும் செஞ்சாங்க."

``சீரியல் நாயகி பத்தி?"

பிரஜின்
பிரஜின்

``அவங்க கர்நாடகாவைச் சேர்ந்தவங்க. இந்த கேரக்டருக்காகக் கிட்டத்தட்ட 3000 புகைப்படங்கள் பார்த்து ஆடிஷன் பண்ணோம். இறுதியா இவங்க புகைப்படத்தைப் பார்த்ததும் இந்த ரோலுக்கு நல்லா செட் ஆகும்னு எங்களுக்குத் தோணுச்சு. நல்லா பர்ஃபாமர் அவங்க. கனடா சீரியல்ல நடிச்சிருக்காங்க. தமிழுக்குப் புதுசு, ஆனா முதல் நாளே ரெண்டு பக்கத் தமிழ் டைலாக்குகளை மனப்பாடம் பண்ணிப் பேசினாங்க. என் மனைவிக்கும் அவங்களைப் பிடிச்சிருந்தது. உங்க ஜோடி சூப்பரா இருக்கு, அவங்க அழகா இருக்காங்கனு பாராட்டினாங்க. பொதுவா என் மனைவி அவ்வளவு சீக்கிரம் யாரையும் பாராட்ட மாட்டாங்க. அதுவும் ஒரு பொண்ணு இன்னொரு பெண்ணைப் பாராட்டுறது பெரிய விஷயம்."

அடுத்த கட்டுரைக்கு