Published:Updated:

ஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா..? 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா..? 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா..? 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா..? 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா..? 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

Published:Updated:
ஒரு டவுட்டு... ஆர்த்தி பிக்பாஸின் இலுமினாட்டியா..? 72-ம் நாள் - பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.


ஆர்த்தி அழுகையுடன் இந்த நாள் துவங்கியது. அதுவரை சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த ஆர்த்தியின் இன்னொரு பரிதாப முகத்தை இன்று பார்க்க முடிந்தது. அவருடைய அம்மா இறந்த நாள் என்பதால் ‘அப்பா என்ன செய்கிறாரோ, நான் கூட இல்லையே..’ என்று வையாபுரியிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் பாவம். 

புரியாத மாதிரியாக ஒரு காலைப் பாடல் ஒலித்தது. தமிழ் மாதிரிதான் தெரிந்தது. பிக்பாஸே இசையமைத்தாரோ என்னமோ. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஏண்ணே டல்லா இருக்கீங்க?” என்று சிநேகனிடம் விசாரிக்க வந்தார் பாசமலர் தங்கை ஜூலி. ‘தந்திரக்காரர்’ என்ற விருது கிடைத்ததில் இருந்தே மந்திரித்து விட்ட கோழி மாதிரி இருக்கிறார் சிநேகன். “விருதினால் பிரச்னையில்லை. அதற்குத் தந்த விளக்கம்தான் சங்கடமாக இருக்கு. இங்கு வந்த புதிதில் ஒருவரைப் பற்றி சரியாகத் தெரியாமல் விருதுகள் தந்தோம். நான் தவறாகத் தெரிவதற்கு ஒரே காரணம் ஓவியா விஷயம். இங்க ஒருத்தரைப் பற்றி இன்னொருவர் எவ்வளவோ பேசறாங்க. நான் 100 பிரச்னைகள்ல இரண்டே பிரச்னைகளை வெளியில் சொன்னாலே அது தப்பாயிடுது. எத்தனையோ உள்ளே அழுத்தி வெச்சிருக்கேன்.” என்றெல்லாம் சிநேகனின் அனத்தல் நீண்டது. 

முன்பு நடந்த விருதுகள் விழா தொடர்பான சர்ச்சைகளைப் பேசியவர் “ உனக்கும் வையாபுரிக்கு தந்த விருது, நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு கொடுத்தது. ஓவியாவுக்குத் தந்த விருதை ரைசாவுக்குக் கொடுத்திருக்கலாமோன்னு பின்னாடி தோணுச்சு. (ஓவியா பெயரைத் தொட்டாலே ஹைவோல்டேஜ் ஷாக் அடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. எனவே, நேர்மறையாகவே பேசுகின்றனர்). பரணிக்கு தந்த விருது பற்றி நான் வருந்தலை. அவன் அந்த மாதிரி மாத்தி மாத்தி பேசிட்டிருந்தான்”

**

சோகமாக இருக்கும் ஆர்த்தியிடம் ‘என்ன விஷயம்’ என்று விசாரித்தார் பிந்து. விஷயத்தைச் சொன்னார் ஆரத்தி. ‘எங்கப்பாவுக்கு நான் அழறது பிடிக்காது. வழக்கமாக நான் அழ மாட்டேன். ஆனா இன்னிக்கு தாங்க முடியலை” என்றார் ஆர்த்தி. ‘அழணும்னு தோணினா அழுதுடுங்க’ என்று சரியான உபதேசத்தை தந்தார் பிந்து. “இல்லை. அரைமணி நேரத்துல சரியாடுவேன்’ என்ற ஆர்த்தி சொன்னபடியே சிறிது நேரத்தில் உற்சாகமாகி விடுவார். பழைய படியே தன் பாணிக்கு திரும்பிவிட்டார் என்பது பிறகு சுஜாவை உற்சாகமாக நீச்சல் குளத்தில் மறுபடி மறுபடி தள்ளி விட்டதில் இருந்தும், ஜூலியின் முகத்தில் மாவை கொட்டியதில் இருந்தும் தெரிந்தது. 

‘கம்போஸிங்’ என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வேண்டும் என்கிற பிடிவாதம் ஜூலிக்கு வந்து விட்டது. தனக்கு இசை தொடர்பான ஆர்வம் உண்டு என்று ஹரீஷ் அறிமுக வீடியோவில் சொன்ன நினைவு. எனவே ‘இசை எங்கிருந்து வருது தெரியுமா?” என்கிற ரேஞ்சில் ஜூலியிடம் பேசியிருப்பார் போலிருக்கிறது. எனவே இசை மாணவரான ஜூலிக்கு ‘கம்போஸிங்’கிற்கு அர்த்தம் வேணும் என்கிற ஆவல் பெருகி வழிந்தோடுகிறது. “இந்த வீட்லயே எல்லா இண்ஸ்ட்ரூமெண்ட்டையும் தொடக்கூடிய தகுதி இவனுக்கு மட்டும்தான் இருக்கு. ஏன்னா அவனுக்கு வாசிக்கத் தெரியாது. எல்லாத்தையும் எடுத்து துடைச்சு வைப்பான்’ என்று விநோதமான ஒப்பனையில் இருக்கும் ஆரம்ப கால வடிவேலுவை மனோ அறிமுகப்படுத்துவார். (சிங்காரவேலன் திரைப்படக்காட்சி) பொருத்தமான சமயத்தில் இதை நினைவுகூர்ந்த ஹரிஷீற்குப் பாராட்டு. 

அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பேச மாட்டேன் என்று ஜூலி மெளன விரதம் இருந்தார். ஹரிஷீன் உலக சாதனைகளுள் ஒன்றாக இதைச் சொல்லலாம். ஜூலியின் வாயை அடைத்தற்காக ஹரீஷிற்கு நன்றி சொன்னார் ஆர்த்தி. “ஜூலியின் ஆடியோவைக் கவனிக்கும் நுட்பக் கலைஞர் இதற்காக மகிழ்வார்” என்பது ஆர்த்தியின் கிண்டல்.

சோகமாக இருக்கும் சிநேகனை ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கத் துவங்கி விட்டார்கள். “ஏன் தேவதாஸ் மாதிரி இருக்கீங்க’ என்று கேட்ட பிந்து பின்னர் தந்த உபதேசம் அபாரமானது. ‘ஆடு மேய்க்கற பையனுக்குள்ள இம்பூட்டு அறிவா?” என அவரைப் பற்றி ஆச்சர்யமாக இருந்தது. “இங்கிருந்து வெளியே போனா என்ன நடக்கும்னு தெரியும். நம்ம எல்லோர்கிட்டயும் குறைகள் இருக்கு. ஆனா அடிப்படையில் நாம் நல்லவர்கள்தான். மனுஷங்கதானே.. கடவுள் இல்லையே. அதனால எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு போயிட்டே இருக்கணும்’ என்பது பிந்துவின் அபிப்ராயம். ‘போடா எல்லாம் விட்டுத்தள்ளு. பழசையெல்லாம் சுட்டுத் தள்ளு” என்று தளபதியின் பாடலைப் பாடினார் பிந்து. 

“நான் என்ன பண்ணாலும் பிரச்னையாச்சுன்னா நான் என்னதான் பண்றது. டல்லா இருந்தா ‘இது கேம்தானே, ஏன் வீக்கா இருக்கீங்க’ன்னு பிக்பாஸ் கேட்கறாரு. வேலை செஞ்சிட்டே இருந்தே மத்தவங்களுக்கு வாய்ப்பு தரலைன்றாங்க. யாருக்காவது ஆதரவா இருந்தா ஐஸ் வெக்கறான்கிறீங்க.. ஒருத்தன் என்னதான்யா பண்ணுவான். நான் என்ன லூசா..” என்பது சிநேகனின் புலம்பல். ‘வெளியில் இருந்து வந்த ஆர்த்தி, சக்தி, ஜூலி’ போன்றோர்  சில நாள்களிலேயே தங்களைப் பற்றி எப்படி தீர்மானித்து விருது தர முடியும்?’ என்கிற ஹரீஷின் கேள்வி நியாயமானது. 

மேலும், மக்களின் வாக்கெடுப்பினால் வெளியே சென்ற ஜூலி, ஆர்த்தி மற்றும் பிக் பாஸின் நாமினேஷனால் வெளியேறிய சக்தி ஆகியோர் மற்றவர்களின் நாமினேஷில் பங்கு கொள்வதும் மற்றவர்களைப் பற்றி தீர்மானித்து விருது நடும் நடுவர்களாக இருப்பதும் நிச்சயம் காலக்கொடுமை. 

‘மக்களைப் பற்றி கவலைப்படலே’ என்ற சிநேகன் சட்டென்று மாற்றிக்கொண்டு ‘விமர்சனங்களைப் பற்றி கவலைப்படலை. ஆனால், கூட இருந்து பார்க்கிற சக்திக்கே என்னைப் பற்றி புரியலையே” என்று ஆதங்கப்பட்டார். 

**

‘Freeze and Release” என்கிற ‘சின்னப்புள்ளத்தனமான’ விளையாட்டை பெரும் task ஆக வைத்தார் பிக்பாஸ். “கவிஞர் ஃபீல் பண்றாரா?” என்று அலப்பறையைத் துவங்கினார் ஆர்த்தி. “முன்ன அவரும்தானே விருது கொடுத்தாரு. இப்ப என்னவாம்? தந்திரம் இல்லாம இத்தனை வாரம் தாக்குப் பிடிச்சிருக்க முடியுமா?” என்றலெ்லாம் பொங்கினார் ஆரத்தி. மனிதர்களைப் புரிந்துகொள்வது ஆகக்கடினமானது என்பது பிக்பாஸ் வீட்டு ஆசாமிகளைப் பார்க்கும்போது மீண்டும் உறுதியாகிறது. 

Statue விளையாட்டின் விதிமுறைகள் விளக்கப்பட்டன. பிக் பாஸ் எவர் ஒருவரையோ அல்லது அனைவரையுமோ ‘Freeze’ என்றதும் உறைந்து நிற்க வேண்டும். ‘Release’ என்றதும்தான் நகர வேண்டும். இன்னொன்று, ‘Rewind’ என்று சொன்னால் தாம் செய்துகொண்டிருந்த பணியைத் திரும்பச் செய்ய வேண்டும். ‘இந்த task-ஐ கண்காணிக்க சக்தி பொறுப்பேற்பார்’ என்கிற பிக் பாஸின் முடிவு ஓவர். நீக்கப்பட்டு வெளியேறிவர்களுக்கு அதிக முன்னுரிமை தருவதின் மூலம் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு அதிக ஆதங்கத்தை உற்பத்தி செய்வதுதான் பிக் பாஸின் திட்டமாக இருக்க வேண்டும். 

இந்தச் சவால் பற்றி சக்தி சொல்லிக் கொண்டிருக்கும்போது, எனக்குத் தோன்றிய அதே கேள்வி கணேஷுக்கும் தோன்றியதுபோல. ‘டாய்லெட்ல இருந்தா என்ன பண்றது?' என்கிற முக்கியமான கேள்வியைக் கேட்டார். ஒருவேளை ‘சுச்சா’ போகும்போது freeze என்றால் அதை எப்படி சட்டென்று நிறுத்த முடியும்? அதை விடவும் கொடுமை ‘rewind’ என்றால் எப்படி உள்ளிழுப்பது? இயற்பியல் விதிகளுக்கு எதிரான சவால் ஆயிற்றே இது?

‘இனிமேல் சவால்களின் கடுமைத்தன்மை அதிகரிக்கும். அதற்கேற்ப போட்டியாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.’ என்றது அசரிரீக்குரல். புது தலைவரான வையாபுரி, ‘இனிமேல் எந்தவொரு சவாலையும் சுணங்காமல் உற்சாகமாக செய்வேன்’ என்று வாக்குத் தந்த வாரத்திலா கடுமையான சவால்கள் வர வேண்டும்” பாவம் மனிதர். 

உறையும் விளையாட்டில் முதலில் மாட்டியவர் ஜூலி. ஸ்டைலாக அசைந்து கொண்டிருந்தவரை உறையச் சொன்னார் பிக்பாஸ். விளம்பர மாடல் போல அப்படியே நின்றார் ஜூலி. “இதை எதிர்பார்த்துதான் ஜூலி டான்ஸ் ஆடிட்டு இருந்தா” என்பது ஆர்த்தியின் கிண்டல். 

உறைந்து நின்றிருந்த ஜூலியின் காதின் அருகே வந்து சுஜா கத்தினார். இப்படியே மற்றவர்களும் வந்து தொடர்ந்து கிண்டலடித்தார்கள். இந்த task-ல் ரியாக்ட் செய்தால் லக்ஸரி பட்ஜெட்டின் மதிப்பெண் குறையும் என்பது பிக் பாஸின் விதி. எனில் Freeze ஆனவரை மற்றவர்கள் கிண்டல் செய்து ரியாக்ட் செய்ய வைப்பது பார்ப்பதற்கு ஒருபக்கம் ஜாலியாக இருந்தாலும் மதிப்பெண்களை இழக்கும் விஷயத்தில் புத்திசாலித்தனமாக இல்லை. 

ஜூலியை கிண்டலடித்த சுஜாவுக்கு உறையும் கட்டளை வழங்கப்பட்டது. மற்றவர்களின் கிண்டல்களைத் தாங்க முடியாமல் கீழே படுத்து விட்டார் சுஜா. இதற்கான தண்டனை வழங்கப்பட்டது. மற்றவர்கள் இணைந்து அவரை நீச்சல் குளத்தில் தள்ளி விட வேண்டும். 

இதற்கான உற்சாகத்துடன் முதலில் வந்தவர் ஆர்த்தி. சுஜா குளத்தில் தள்ளிவிடப்பட்டு எழுந்ததும் ‘rewind’ என்கிற கொடூரமான தண்டனையைத் தந்தார் பிக் பாஸ். எனவே, பிசுபிசுப்பான எண்ணைய் பாத்திரத்தை மறுபடி மறுபடி கழுவுவதுபோல் சுஜாவை குளத்தில் முக்கி முக்கி எடுத்தார்கள். இது விளையாட்டுதான் என்றாலும் சுஜாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்தக் குரூர விளையாட்டில் உற்சாகமாக பங்கு கொண்டு மிக ஆர்வமாக சுஜாவை மீண்டும் மீண்டும் தள்ளி விடுவதில் முன்னணி இடம் வகித்தார் ஆர்த்தி. காலையில் இருந்த சோகமெல்லாம் எங்கோ பறந்துவிட்டது. 

**

இந்த விளையாட்டின் அடுத்த பகுதி அறிவிக்கப்பட்டது. அதன்படி எல்லோரும் உறைந்ததும் பிக்பாஸின் உத்தரவுப்படி ஒருவர் மட்டும் விலக்கப்படுவார். துண்டுச்சீட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தை எவர் ஒருவரையாவது தேர்ந்தெடுத்து அவர் செய்ய வேண்டும். 

இதில் ஆர்த்திக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. ‘மாவை எவர் தலையிலாவது கொட்ட வேண்டும்’ என்றது துண்டுச்சீட்டு. ஆர்த்திக்கு லட்டு மாதிரியான வாய்ப்பு. தவற விடுவாரா என்ன? ஒவ்வொருவரிடமாக சென்று பதற்றத்தை ஏற்படுத்தி விட்டு பின்பு கடைசியாக ஜூலியின் தலையில் சென்று கொட்டினார். “முதல்ல, என்னை நீச்சல் குளத்தில் தள்ளி விட்டல்ல” என்று பழைய கணக்கிற்கான பழிவாங்கல் வேறு. 

மாவை தலையில் கொட்ட வேண்டும் என்கிற குறிப்புக்கு மாறாக ஜூலியின் முகத்திலும் கொட்டியது ஆர்த்தியின் சர்ச்சைக்குரிய செயல். உறைந்திருந்த ஜூலி அதை எதிர்பார்க்காததால் அவர் கண்களிலும் மாவு பட்டு விட்டது போல. அதற்கான பதற்றத்தை ஜூலி வெளிப்படுத்தும் போது ‘இது task’ என்றார் ஆரத்தி. (கார்ப்பெட்டை இழுத்த ஓவியாவின் அதே குரல்) “மாவு கண்ல பட்டுடுச்சு’ என்று ஜூலி தழுதழுத்த குரலில் சொன்ன பிறகு வரவழைத்துக் கொண்ட பதற்றத்துடன் துடைப்பதற்கான தாளை எடுத்து வந்து தந்தார். 

தான் நினைப்பதையோ அல்லது வம்பு வளர்க்கும் செயல்களையோ ஆர்த்தியை வைத்து பிக்பாஸ் செய்கிறாரோ எனத் தோன்றுகிறது. இதனால் ஆர்த்திதான் பிக் பாஸின் இலுமினாட்டியோ என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை!

இவையெல்லாம் விளையாட்டுக்கள் என்றாலும், இனி வரும் taskகள் கடுமையாக இருக்கும் என்கிற எச்சரிக்கை குறிப்பு வழங்கப்பட்டாலும் அவற்றை மனிதர்களின் உடல் பாகங்கள் பாதிக்காதவாறு அமைப்பதும் கையாள்வதும் மிக அவசியம். ஒருவேளை சரிசெய்ய முடியாதவாறான பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்கொள்பவர்தான் வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப் பட வேண்டும். ஒப்பந்தத்தைக் காட்டி விட்டு பிக் பாஸ் எளிதில் தப்பித்துக் கொள்வார். 

**

அடுத்த வாய்ப்பு சக்திக்கு தரப்பட்டது. ‘யாராவது ஒருவரின் பத்து துணிகளைத் தேர்ந்தெடுத்து நீச்சல் குளத்தில் போட வேண்டும்” என்பது பிக்பாஸின் விளையாட்டு. ‘யாருடைய துணிகளைப் போடுவது’ என்கிற பதற்றத்துடன் தேடிய சக்தி. அங்கும் இங்கும் தேடி கடைசியாக ஆரவ்வின் உடைகளைக் கொண்டு வந்து நீச்சல் குளத்தில் போட்டார். ஆரவ் அதை இயல்பாக எடுத்துக் கொண்டார். அவர் சிரமப்பட்டு துணிகளை எடுத்த நேரத்தில் ‘ரீவைண்ட்’ என்கிற குரல் ஒலிக்க, மறுபடியும் துணிகளை குளத்தில் எறியும் பரிதாபமான நிலைமை ஆரவ்வுக்கு ஏற்பட்டது. இதுவும் விளையாட்டுதான் என்றாலும் சம்பிரதாயத்திற்காக சக்தி ஆரவ்விடம் ‘ஸாரி’ சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ம்..ஹூம்.

பிக் பாஸின் மூதாதையர்கள் ஹிட்லர் வதைமுகாமில் கொடுமைகள் செய்து பயிற்சி பெற்றவர்களோ என்னமோ? அடுத்த தண்டனை விபரீதமாக இருந்தது. ஜூலிக்கு அந்த வாய்ப்பு தரப்பட்டது.‘எவரையாவது தேர்ந்தெடுத்து தும்மல் வரவழைக்க வேண்டும்’. ஸ்டோர் ரூமில் இருந்த ஆயுதங்களில் வேப்பிலைக்குச்சியை தேர்ந்தெடுத்த ஜூலி, ஹரீஷை தேர்ந்தெடுத்து அவருடைய மூக்கில் மறுபடியும் மறுபடியும் நுழைக்க முயன்றார். தும்மல் வருமோ இல்லையோ, ரத்தம் வந்து விடும் போல் இருந்தது. ஒரு பாவனைக்காகவாவது ஹரீஷ் ஒரு தும்மலை போட்டிருக்கலாம் என்று தோன்றியது. கண்கள் கலங்க மூக்கின் எரிச்சலைப் பொறுத்துக் கொண்டவர் ‘தும்மல் வரலைங்க.. என்ன பண்றது?” என்று நேர்மையாக நடந்து கொண்டார். பின்பு பிக் பாஸ் பரிதாபப்பட்டு விளையாட்டை நிறுத்த விபரீதமாக ஏதும் நடக்கவில்லை. 

‘கடவுளே.. யாரையும் கஷ்டப்படுத்தறா மாதிரி வந்துடக்கூடாது” என்கிற நல்ல எண்ணத்துடன் சீட்டை எடுத்தார் சிநேகன். ‘ஒருவரின் அருகில் சென்று பன்றி போல் கத்த வேண்டும்’ என்றது சீட்டு. பன்றி கத்தி நான் பார்த்ததும் கேட்டதுமில்லை. எனவே விநோதமாக கத்திய சிநேகனின் கூக்குரல்களை பன்றி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். பிந்துவின் அருகில் சென்று கத்திய சிநேகன் ‘இது பன்றி கத்துவதா அல்லது கழுதையா?’ என்று சுயபகடி செய்தார்.

‘வேடிக்கையாக நடனம் ஆட வேண்டும்’ என்பது பிந்துவுக்கு வந்த வாய்ப்பு. நடனம் மட்டும் ஆடினால் போதுமானது. ஆனால் சிரிக்க வைக்க வேண்டும்’ என்று புரிந்து கொண்ட பிந்து, ஜூலியிடம் சென்று அவரைப் பாடாய்ப் படுத்தினார். ‘காலை மிதித்து விட்டு ‘ஏன் சிரிக்க மாட்றேன்னா கேக்கறே” என்று அழாத குறையுடன் சொன்னார் ஜூலி. 

ஆர்த்தி தந்த யோசனையின் படி உறையும் கட்டளை வந்தவுடன் தரையில் படுத்து விட்டனர் ஆரவ்வும் பிந்துவும். காமிரா அவர்களைச் சுற்றிக் காட்டிய போது விபரீதமாகத் தெரிந்தது. ‘சிலேட்டிலும் பாத்திரத்திலும் நகத்தால் சுரண்டி சத்தம் எழ வைக்க வேண்டும்’ என்பது ஹரீஷிற்கு தரப்பட்ட கட்டளை. மனிதர் அதை வைத்துக் கொண்டு இசைக்கச்சேரியே செய்து விட்டார். ‘கம்போஸிங்’ என்பதற்கான பொருள் ஜூலிக்கு அப்போது புரிந்திருக்கலாம். 

**

நள்ளரவில் கழிவறையில் மாட்டிக் கொண்ட சிநேகனை கேள்விக் கணைகளால் துளைத்தார் சுஜா. ‘நான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது காயத்ரி என்னைப் பற்றி ஏதோ சொன்னார் என்றீர்களே. அது என்னது?” எனக்கு தெரிந்தேயாக வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்தார் சுஜா. (‘அவ அஞ்சு ஜூலிக்கு சமம்’ என்று காயத்ரி சொன்னதாக நினைவு). சிநேகன் பழைய ஆளாக இருந்தால் இந்த விஷயத்தை தாராளமாக சொல்லியிருப்பார். ஆனால் இப்போது ‘தந்திரக்காரராக’ மாறி விட்டதால் சுற்றிச் சுற்றி என்னென்னவோ சொல்லி சுஜாவைக் குழப்பி விட்டார். 

இன்னொரு பக்கம் சக்தி தனியாக அனத்திக் கொண்டிருந்தார். ‘சில சந்தேகங்கள்.. இல்ல.. மனக்குழப்பங்கள்.. இதுக்கு சிநேகனால முடிவு வரும்’ என்று புலம்பல். 

இப்படியாக ‘இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி’ போன்று எத்தனை சிறுபிள்ளைத்தனமான சவால்களை பிக் பாஸ் மனதில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. முடியல.