Published:Updated:

“சுசிலோட கஷ்டத்தைப் பார்க்குறப்ப அழுகைதான் வந்துச்சு!” ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ சுசில் அம்மா

வி.எஸ்.சரவணன்
“சுசிலோட கஷ்டத்தைப் பார்க்குறப்ப அழுகைதான் வந்துச்சு!” ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ சுசில் அம்மா
“சுசிலோட கஷ்டத்தைப் பார்க்குறப்ப அழுகைதான் வந்துச்சு!” ‘கிங்ஸ் ஆஃப் காமெடி’ சுசில் அம்மா

விஜய் டிவியின் 'கிங்ஸ் ஆஃப் காமெடி' நிகழ்ச்சியில் கலக்கி வரும் சுசிலுக்குத் தனி ரசிகர்கள் உண்டு. வாரந்தோறும் வித விதமான கெட் அப்களில் வந்து அசத்தும் சுசில் பல கட்டங்களைத் தாண்டி ஃபைனலிலுக்குத் தேர்வாகி விட்டார். இன்னும் ஓரிரு நாளில் ஒளிப்பராக விருக்கும் அந்த நிகழ்ச்சியின் டைட்டிலை யார் வெல்லப் போகிறார் ஆவல் அதிகரிக்கும் நிலையில், சுசிலின் அம்மா ஆர்த்தியிடம் பேசினோம். 

"கிங்ஸ் ஆஃப் காமெடி டீம்மோடு பயணத்தை இப்போதுதான் தொடங்கியதுபோல இருந்தது. ஆனால் ஒரு வருஷம் ஆகிவிட்டது. ஏகப்பட்ட போட்டியாளர்களுடன் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சுசில் தாக்குப் பிடிப்பானா என்ற சின்னத் தயக்கம் எனக்குத்தான் இருந்தது. ஆனால், சுசில் அதைப் பற்றியெல்லாம் ஒரு நாள் கூடக் கவலைப் பட்டதில்லை. என்ன சொல்லிக்கொடுக்கிறமோ அதை விட இரண்டு மடங்கு சிறப்பாகச் செய்துவிடுவான். 

இந்த நிகழ்ச்சியில் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்த்தால், சுசில் பெரும்பாலான வாரங்களில் ஹீரோ வேஷத்தில்தான் வந்திருக்கிறான். காமெடி ஷோவில் ஹீரோ ரோலில் வந்து பெர்பாமன்ஸ் பண்ண முடியும்.. ஆனால், அடுத்தக் கட்டடங்களுக்குச் செல்ல முடியுமா... ஏன்னா... காமெடி ஆக்டர் ரோலில் வந்தால் பார்த்தவுடனே பார்வையாளர்கள் சிரித்துவிடுவார்கள். பிறகு பெர்பாமன்ஸ் செய்வது ஈஸியாகி விடும். ஆனால், அதையெல்லாம் மீறியும் சுசில் ஃபைனலுக்கு வந்திருப்பது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். 

எங்களின் சொந்த ஊர் திருச்சி. அங்கிருந்து ஒவ்வொரு வாரமும் சென்னைக்கு வருவோம். அப்போது தங்குவதற்காக ஒரு வீட்டை வாடகை எடுத்துக்கொண்டோம். 

சுசில்  சின்ன வயதாக இருக்கும்போதே டப்ஸ்மாஸ் செய்ய வைத்திருக்கிறோம். அப்பவே பெண் வேஷம் போட்டி நிறையப் பேசியிருக்கிறான். எனக்கு அது ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அதனால சிவகார்த்திகேயன் நடித்த 'ரொமோ' கெட்டப் போட்டு நடிக்க வைத்தேன். பெண் வேஷம் போடுவது சுலபம்தான் ஆனா, இந்த வயசுலேயே குரலை மாற்றிப் பேசிப் பழகுவது  கஷ்டம். கொஞ்ச நேரம் பேசினால் தொண்டையைக் கட்டிக்கும். வெந்நீரைக் குடிச்சிட்டு, குடிச்சிட்டு பிராக்ட்டிஸ் பண்ணுவான். அதைப் பார்க்கும்போது சுசிலை ரொம்பக் கஷ்டப்படுத்துகிறமோனு நினைப்பேன். சில நாள் அழுதும் இருக்கிறேன். 

ரெமோ மட்டுமல்ல, சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி என எந்த நடிகரோட கெட்டப்பில் வந்தாலும் அவர்களுடைய குரலில் பேசுவான். யாரும் டிரைப் பண்ணாத லிவிங்க்ஸ்டன் குரலிலேயும் பேசி அசத்துனான். அதேபோல அவதார் கெட்டப் பண்ணும்போது நிறையக் கஷ்டப் பட்டான். ஆனால், நிகழ்ச்சியின்போது கலக்கப்போவது யாரு டீம் வந்திருந்தார்கள். சுசில் நடித்து முடித்ததும் எல்லோரும் மேடைக்கு வந்து பாராட்டியதோடு, ஈரோடு மகேஷ் இரண்டாயிரம் ரூபாய் பணமும் கொடுத்தார். வழக்கம்போல ரோபோ சங்கர் ஐநூறு ரூபாய் கொடுத்தார். சினிமா ஸ்கிரிப்ட் எழுதுவதில் எனக்கு அனுபவம் இருப்பதால் பலவிதமான முயற்சிகளைச் செய்துபார்த்தோம். 

எல்லாவற்றையும் கடந்து வந்துட்டான் இன்னும் ஃபைனல் எனும் ஒரு படிதான் இருக்கிறது. சுசிலோடு வெற்றிக்கு முக்கியமாக இரண்டு பேரை மறக்காமல் சொல்ல வேண்டும். ஆல்பன் மற்றும் கியான். இவர்கள்தான் சுசிலின் வால்தனங்களை யெல்லாம் பொறுத்துக்கொண்டு பிராக்டிஸ் கொடுத்தது. சுசிலோடு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் மாதிரியே ஆகிவிட்டார்கள். ஷோவோட நடுவர்களின் பாராட்டைப் பெறுவதற்கு இவர்களும் முக்கியக் காரணம். 

ஃபைனலில் என்ன பெர்பாமன்ஸ் செய்யப் போகிறான் என்பது சஸ்பென்ஸ். ஆனால், இதுவரை யாரும் செய்யாத வித்தியாசமான ஒன்றை நடிக்கப் போகிறான். அதற்காக அவன் பிராக்டீஸ் செய்யும்போது எனக்கு என்னாச்சு எனத் தெரியவில்லை. அழுதுட்டு இருந்தேன். சுசில் ஓடி வந்து, 'ஏம்மா.. அழற'னு கேட்டான். 'ரொம்ப நல்லா பண்றடா' எனச் சொன்னதும், 'அப்படினா சிரிக்க வேண்டியதுதானே.. எதுக்கு அழற" எனச் சொல்லிவிட்டுத் தலையில் ஒரு குட்டி வைத்துவிட்டு ஓடினான். சுசிலின் திறமையை சின்ன வட்டத்துக்குள் முடங்கிவிடாமல் பார்த்துகிட்டோம். அவனும் தன்னை வளர்த்துகொண்டு இந்த அளவுக்கு வந்துட்டான். இது எங்களுக்கு மட்டுமல்ல, சொந்தகாரங்க, ஊர்க்காரங்க எல்லோருக்குமே சந்தோஷம்தான்" என்றார் ஆர்த்தி. 

"நான் கூடத் திருச்சியிலிருந்து சில வாரங்கள் போக மாட்டேன். ஆனால், ஒரு நிமிஷம்கூட சுசிலை விட்டு ஆர்த்திப் பிரியல. அந்தளவுக்கு கேர் எடுத்து பார்த்துகிட்டா" என்று நெகிழ்ச்சியுடன் மனைவியைப் பாராட்டினார்.