Published:Updated:

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

கமல் உள்ளே வரும் போதே அரசியல் நையாண்டியைத் துவங்கி விட்டார். ‘நான் போன வாரம் சொன்னது உறைத்து விட்டது போலிருக்கிறது. வேலையெல்லாம் சரியா நடந்துக்கிட்ட மாதிரி இருக்கு” என்றவர், சற்று இடைவெளி விட்டு “அய்யோ.. நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள நடக்கறத சொன்னேன். எதைச் சொன்னாலும் இரண்டு அர்த்தமாவே எடுத்துக்கிட்டா, எப்படி?” என்று பாவனையாக அலுத்துக் கொண்டார். (அப்படி என்ன சரியாக நடக்கத் துவங்கியது ஆண்டவரே? அதாவது வெளியில்?).

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdateஇந்த வார நிகழ்வுகளின் சுருக்கத் தொகுப்பு ஒளிபரப்பானது. “ஓகே. நல்ல விஷயங்கள் நடக்குது. போட்டி மனப்பான்மை அதிகமாயிருக்கு. தோற்றதற்காக கவலைப்படுகிறார்கள்” என்று அதைப் பற்றிய எதிர்வினையை தெரிவித்த கமல், வெள்ளிக்கிழமை நிகழ்வை காணத் துவங்கினார். 

பிக்பாஸ் வீட்டில் விடியற்காலை நேரம் இப்போதெல்லாம் 08:30 ஆகி விட்டது போல. “ஆலுமா டோலுமா’ என்கிற அட்டகாசமான துள்ளலிசைப் பாடல் ஒலிபரப்பானது. இதற்கு எவராலும் நடனம் ஆடாமல் இருக்கவே முடியாது. என்றாலும் ஹரிஷ் மட்டும் வந்து சிறப்பாக ஆடினார். கூட சுஜாவும். மற்றவர்கள் ஆடவில்லை. காலையில் எழுந்தவுடனே நடனமாடுவது உண்மையில் சிரமமானது. உடல் உறுப்புகள் ஓய்விலிருந்து மெல்ல மெல்ல விழித்துக் கொள்ள சற்று அவகாசம் கேட்கும். அதை மீறி இயங்கினால் எங்காவது சுளுக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியும் தங்களை சுதாரித்துக் கொண்டு ஆடும் போட்டியாளர்களுக்கு பாராட்டு. 

இன்றைய செஃப் சிநேகன் – புளியோதரையை தயார் செய்தார். தேர்ந்த சமையல்காரர் போல அதற்கான செய்முறையை விளக்கமாக கூறினார் சிநேகன். வையாபுரி வந்து அதை விநோதமாக பார்த்துக் கொண்டிருந்தார். உணவு க்ளோசப்பில் காட்டப்பட்டதே தவிர, எவரும் ருசிப்பதை காட்டவில்லை. சோதனை எலியான ஆரவ்வையும் காணவில்லை. 

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate


பிக்பாஸின் பிரதான விளம்பரதாரர்களின் பிராண்டுகளை நம் மூளையில் திணிக்கும் விஷயங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஓர் உணவு பிராண்ட் தொடர்பான கேள்வி –பதில் நடந்தது. ஆரவ் நடுவராக இருந்து கேள்விகளைக் கேட்டார். உணவு டப்பாவின் மீது அச்சிடப்பட்டிருக்கும் விவரங்களைப் பார்த்து உடனே பதில் சொல்ல வேண்டும். 

ஆரவ் கேள்வியை முடிக்கும் முன்னரே, பள்ளி மாணவர்கள் போல் பதில் சொல்ல போட்டியாளர்கள் அடித்துக் கொண்டார்கள். பிந்து அதிக அளவில் சரியான பதில்களைக் கூறினார். 

**

நேற்று நிறுத்தப்பட்ட Ticket to finale task ஆன, ‘எடுத்துக்கோ ஜெயிச்சிக்கோ’ சவால் இன்றும் தொடர்ந்தது. நேற்று கோபித்துக் கொண்டு விலகிய பிந்து, இன்று பார்வையாளராக கூட வராமல் விளையாட்டைப் புறக்கணித்தார். 

நேற்று மாதிரியே இன்றும் சில குடுமிப்பிடி சண்டைகள் நடந்தன. ஆனால் நேற்று போல அதிக பாதுகாப்பு உணர்ச்சியோடு காவல் காக்காமல் போட்டியாளர்கள் இறங்கி விளையாடினார்கள். அப்படி விளையாடினால்தான் இது சுவாரசியமாக அமையும். வையாபுரியின் பக்கத்திலிருந்த ஹரீஷ் நகரவே இல்லாததால், வாய்ப்பு கிடைக்காத வையாபுரி, ‘ஹரீஷ், காலை எடுத்துட்டு நில்லுங்க’ என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் ஹரீஷால் நகரவே முடியாத நிலைமை. பக்கத்தில் கணேஷ் ஆந்தை போல காத்துக் கொண்டிருந்தார். மட்டுமல்லாமல் மற்றவர்களைப் போல் துணிச்சலுடன் foul game ஆட ஹரீஷ் தயாராக இல்லை. 

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdateவையாபுரி சற்று அசரும் போதெல்லாம் ஆரவ் பாய்ந்து வந்து வையாபுரியின் பந்துகளை சுட்டு விடுகிறார். இந்தப் பக்கம் இருக்கிற சுஜாவின் பந்துகளையும் லவட்டி விடுகிறார். ஹரீஷின் பந்துகளை ஒரே சமயத்தில் கணேஷூம் சிநேகனும் எடுத்ததால் சிறிய முட்டல் நிகழ்ந்தது. வையாபுரியின் பந்துகள் அனைத்தும் தீர்ந்ததால் அவர் போட்டியிலிருந்து விலகி ஓய்வெடுக்கச் சென்று விட்டார். ‘பார்த்துக்கிட்டு இருக்கும் போதே சூறையாடிட்டாங்களே” என்பது அவரின் புலம்பல். 

மேலும் சில குடுமிப்பிடி சண்டைகளோடு இந்தப் போட்டி இனிதே நிறைவுற்றது. இருப்பதிலேயே ஹரீஷ்தான் குறைவாக பந்துகளை அபகரித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஹமாம் சோப் போட்டு குளிக்கும் ஆசாமி போல. 

**

அடுத்த சவால், பொருட்களை திருடும் போட்டி. Kleptomania-வாக இருந்தால் இதில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகம். ‘ஜித்து ஜில்லாடி, நீ கில்லாடி’ என்பது இதன் தலைப்பாம். ஒவ்வொருவரும் இதர போட்டியாளர்களின் வெவ்வேறு வகையான ஆறு தனிப்பட்ட உபயோகப் பொருட்களை, அவருக்கே தெரியாமல் திருட வேண்டும். எல்லோரையும் பிக்பாஸ் freeze செய்து விட்டு ஒவ்வொருவராக அழைப்பார். அப்போது எவருடைய பொருட்களை திருடினோமோ, அதைச் சொல்லி விட்டு, தன் பெயர் கொண்ட கூடையில் போட வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு பொருளை மட்டுமே போட வேண்டும். முதலில் ஆறு பொருட்களை போடுபவருக்கு பத்து மதிப்பெண். அடுத்தடுத்த வரிசைகளில் வருபவருக்கு அடுத்த மதிப்பெண்கள். 

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdateபோட்டிக்கான பஸ்ஸர் ஒலிக்கும் போது கழிவறையின் பக்கம் இருந்த ஆரவ், அப்போதே அங்கிருந்த பொருட்களை லவட்டத் துவங்கி விட்டார். ஆரவ் படுக்கையறையில் இல்லாததால் அவருடைய பொருட்களை மற்றவர்கள் சூறையாடத் துவங்கி விட்டனர். ஆரவ்வின் போட்டோவை சுஜா எடுத்துக் கொண்டார் போல. ஆரவ்வின் ஷூவை எடுத்து தங்க நகை போல தன்னுடைய துணிகளுக்குள் ஒளித்துக் கொண்டார் கணேஷ் (உவ்வேக்). வையாபுரி எந்தப் பொருளை எடுத்தாலும், “அது என்னோடதுண்ணே’ என்று ஆட்சேபித்த ஹரீஷ், அது அப்படி இல்லை என்றதும் சமாதானமடைந்தார். “என்னய்யா.. எது எடுத்தாலும்’..” என்று வையாபுரி சலித்துக் கொண்டார். 

“நான் பாத்ரூம் போயிட்டு வர்றதுக்குள்ளே task-ஐ தொடங்கி விட்டால் என்ன நியாயம்?” என்று பிறகு வந்த ஆரவ் பாவனையாக அலுத்துக் கொண்டார். இதன் மூலம் தான் எதையும் களவாட ஆரம்பிக்கவில்லை என்கிற ஜாலியான பொய்யை இதர போட்டியாளர்களிடம் நிரூபிக்க விரும்பினார். “அதெல்லாம் பாத்ரூம்ல எடுத்துட்டுதானே இங்க வந்திருக்கீங்க” என்று சரியாக மோப்பம் பிடித்தார் சுஜா. வையாபுரியும் அதை வழிமொழிய, ஆரவ் தன் பொய் விளையாட்டில் உறுதியாக இருந்தார். ‘பாத்ரூம்ல எடுத்தீங்களா. இல்லையா?” என்றார் வையாபுரி. ‘எடுத்துட்டு பாத்ரூம் முடிச்சிட்டு வெளியே வந்தேன். அவ்வளவுதான்” என்றார் ஆரவ். அதிலிருந்த ‘விவகாரமான’ நகைச்சுவையைப் புரிந்து கொண்டு வையாபுரி சிரித்தார். (சின்னப்பசங்கள்லாம் ஓரமாப் போங்க).

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdateஎதைத் திருடலாம் என்கிற சிந்தனையுடன் சென்று கொண்டிருந்த வையாபுரி கண்ணாடிக் கதவை கவனிக்காமல் அதன் மீது நேராக முட்டிக் கொள்ள அவருடைய மூக்கில் அடிபட்டு ரத்தம் வரத் துவங்கியது. பதறிய இதர போட்டியாளர்கள், விளையாட்டை நிறுத்தி விட்டு, உடனடியாக வையாபுரிக்கு முதலுதவி செய்யத் துவங்கினார்கள். வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்னையிது. பார்வை பிரச்னையினால் கண்ணாடிக் கதவில் முட்டிக் கொள்வார்கள். ஆனால் எங்காவது புதிய இடத்தில் இது நேரலாம். இத்தனை நாட்கள் பழகிய வீட்டில் வையாபுரிக்கு இது நேர்ந்தது துரதிர்ஷ்டமானது. அத்தனை கவனக்குறைவாக, ஏதோவொரு நினைவில் சென்றிருக்கிறார் போல. 

ஸ்மோக்கிங் ரூமில் ஹரீஷூம் ஆரவ்வும் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘நான் வருவதற்குள் ஏன் போட்டியை ஆரம்பித்தீர்கள்?” என்கிற ஆரவ்வின் கேள்வி உண்மையானதோ என்று நினைத்த ஹரீஷ், மனச்சாட்சி உறுத்த, தான் எடுத்த பொருளை திரும்ப வைத்து விட்டதாக கூறினார். ஆனால் தான் செய்தது விளையாட்டு என்கிற உண்மையை அப்போதும் வெளிப்படுத்த இயலாமல் இருந்த ஆரவ், “பரவாயில்லை. வெச்சுக்கோங்க’ என்று சமாளிக்க நிலைமை சற்று சங்கடமாகியது. ஆரவ் சொன்னது பொய் என்பதை பிறகு உணர்ந்த ஹரீஷ் அதற்காக வருந்தினார். (பிறகு கமல் முன்னால் பஞ்சாயத்தும் நிகழ்ந்தது).

சிநேகன் செய்தது உத்தமமான காரியம். தன்னுடைய அனைத்துப் பொருட்களையும் மூட்டை கட்டி பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, புதையல் காக்கும் பூதம் போல அருகிலேயே நின்று கொண்டார். இதனால் அவருடைய பொருட்களை எவரும் எடுக்க முடியாமல் போனது. வையாபுரி இதற்காக அலுத்துக் கொண்டார். 

"ரொம்ப நாளா இருந்தா மக்களுக்குப் பிடிச்சிருக்குனு அர்த்தம் இல்லை!" யாரைச் சொல்கிறார் கமல்? 83-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdateவையாபுரியின் சந்தனம், குங்குமம் ஆகிய பொருட்களை பிந்து, சுஜா ஆகியோர் திருடிக் கொண்டார்கள். அவர்களின் முறை வரும் போது ‘ஒரு சமயத்தில் ஒரு பொருளைத்தான் போட வேண்டும்’ என்கிற விதியை மீறி மூன்று பொருட்களை சென்று போட்டார்கள். ‘அப்படி போடக்கூடாதுங்க.. என்னதிது கேவலமா இருக்கே’ என்று ஹரீஷ் அலுத்துக் கொண்டார். விளையாட்டுகளில் நேர்மை தவறுவதை ஹரீஷால் சற்றும் சகித்துக் கொள்ள முடியவில்லை. தான் மட்டும் நேர்மையாக இருப்பதை முட்டாள்தனமாகவும் ஏமாற்றப்பட்டதாகவும் உணர்வதால் வரும் எரிச்சல் அது. 

பிந்து தன்னைத் திருத்திக் கொள்ளும் நோக்கில், பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டு விட்டு இரண்டு பொருட்களை திரும்ப எடுத்து வந்து விட்டார். ஆனால் சுஜா அவ்வாறு செய்ததாக தெரியவில்லை அல்லது காட்சிகள் காட்டப்படவில்லை. பிக்பாஸ் கணேஷை அழைத்த போது அமர்ந்திருந்த சுஜாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போல குனிந்தார். ‘என்னடா இது வியப்பதற்குள், தன்னுடைய துணிமணிகளின் அடியில் ஒளித்து வைத்திருந்த ஆரவ்வின் ஷூக்களை எடுத்துச் சென்று கூடையில் போட்டார். 

ஹரீஷ் மற்றும் ஆரவ்வின் இடையில் இருந்த வருத்தம் மெல்ல புகையத் துவங்கியது. “நீங்க பாத்ரூம்ல இருந்த போதே பொருட்களை எடுக்க ஆரம்பிச்சிட்டீங்களா.. அப்ப இங்க உங்க பொருட்களை எடுத்தது தப்பேயில்லையே, நான் வேற முட்டாள் மாதிரி அதை திரும்ப வெச்சுட்டனே’ என்பது ஹரீஷின் புகார். ‘நீங்க வெச்சுக்கங்க –ன்னு அதுக்குத்தான் சொன்னேன்’ என்று திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சமாளித்தார் ஆரவ். அந்த ஜாலியான பொய் விளையாட்டை அவர் துவங்கியது துரதிர்ஷ்டமானது என்பதை இப்போது உணர்ந்திருப்பார். 

“அடிச்சுக்கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க”: என்கிற காமெடியாக, ஆரவ் சுஜாவின் காதில் எதையோ முணுமுணுப்பாக (வெற்று) ரகசியம் சொல்லி விட்டுப் போக, ஏற்கெனவே தாம் ஏமாற்றப்பட்ட கோபத்தில் இருக்கும் ஹரிஷீற்கு கோபம் இன்னமும் கூடியது. சுஜாவிடம் இதற்காக கோபித்துக் கொண்டார். “எனக்கு இது தேவையா?” என்று ஆரவ்விடம் சுஜா அலுத்துக் கொண்டார். ஆரவ் செய்யும் குறும்புகள் ஜாலியான நோக்கில் இருந்தாலும் சமயங்களில் வினையாகப் போய் விடுகிறது. 

இதற்கிடையில் தன்னுடைய லென்ஸ் கேப்பை காணோம் என்கிற பதட்டத்தில் இருந்தார் ஹரீஷ். “வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க. நைட்டு லென்ஸை போட்டு மூடி வைக்க அது வேணும். இல்லைன்னா லென்ஸ் பாழாயிடும். புரிஞ்சுக்கோங்க” என்று அவர் கூப்பாடு போட்டாலும், ‘நான் எடுக்கலைங்க” என்று கற்பூரம் ஏற்றி அணைக்காத குறையாக மற்றவர்கள் சத்தியம் செய்தார்கள். கார்டு விளையாட்டில், தன் பாக்கெட்டிலேயே கார்டை மறதியாக வைத்து விட்டது போல, ஹரீஷே தவறுதலாக லென்ஸ் மூடியை எங்கோ வைத்து விட்டு பதறுகிறாரோ என்று தோன்றியது. ஏனெனில் மற்றவர்கள் சமர்ப்பித்த பொருட்களில் லென்ஸ் கவர் வந்தது போல தெரியவில்லை. 

விளையாட்டில் மற்றவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளாதது பற்றிய மனஅழுத்தம் ஹரீஷிற்கு உயர்ந்து விட்டது போல. தனியாக சென்று பிக்பாஸிடம் முறையிட்டார். “இங்க இருக்கறதுக்கு எனக்கு விருப்பமேயில்லை. யார் மேலயும் கோபம் கொள்ளாமல் இங்க இருந்து போகணும்னு நெனக்கறேன். வெளியே நல்லவனா போகணும்னு ஆசைப்படறேன். எந்தக் காரணத்தையாவது சொல்லி என்னை அனுப்பிடுச்சுடுங்க ப்ளீஸ்” என்று வேதனையுடன் தன் கோரிக்கையை தெரிவித்தார். பொதுவில் சீன் போடாமல் தனிமையில் அவர் சொன்னதுதான் நல்ல விஷயம். மனிதர், மனிதரை விழுங்கும் போட்டியில் இத்தனை நேர்மை உடம்புக்கு ஆகாது ஹரீஷ். 

இரண்டாவது, மூன்றாவது சமயங்களில் ஆளாளுக்கு தாங்கள் களவாடிய பொருட்களை கூடையில் சமர்ப்பித்தனர். இதையெல்லாம் கூட சுடத் தோன்றுமா என ஆச்சரியமாக இருந்தது. கணேஷ் அமர்ந்து யோகா செய்யும் மேட்டை ஆரவ் சுட்டு விட்டார். தன் முறை வந்த போது “எங்கிட்ட ஒண்ணுமில்லை பிக்பாஸ்” என்றார் ஹரீஷ். சிநேகன் ஷூவிற்குள் எதையோ பதுக்க முயன்றார். ஆறாவது ரவுண்டில், கூடையில் போட வையாபுரிக்கு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. “ரெண்டு, மூணு பேரை வேண்டுமானால் கூடையில் தூக்கிப் போடுகிறேன். (இந்த உடம்பை வெச்சுக்கிட்டு இப்படி சொல்லலாமா, வையாபுரி!) இல்லைன்னா, என்னை வேணுமின்னா கூடைல தூக்கிப் போடுறேன்.. எங்க பிக்பாஸ்.. எல்லாப் பயலும் ஆந்தை மாதிரி இருக்காங்க” என்று சலித்துக் கொண்டார். 

ஆறு ரவுண்டுகள் முடிந்தும் போட்டி தொடர, ஆறு பொருட்களா, அல்லது ஆறு சுற்றுகளா என்கிற குழப்பம் ஏற்பட்டது. “அவருதானே ரூல்ஸ் படிச்சாரு. அவரைக் கேளுங்க” என்று சிநேகன் ஆரவ்வை கைகாட்டி விட “எனக்கும் புரியலை. ஆறு சுற்றுகள் –னு நான் சொல்லலை. படிக்கும் போது கவனிக்காம, இப்ப கேக்கறது என்ன நியாயம். எனக்கு கூட குழப்பமா இருக்கு. ஏன் என்னையே கேக்கறீங்க?” என்று கோபப்பட்டார் ஆரவ். அவர் குறிப்பிடுவது சரிதான். விதிகளில் குழப்பமிருந்தால் நேரடியாக பிக்பாஸிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆரவ் இதை ஒரு உத்தியாக பயன்படுத்துகிறாரோ என்று சந்தேகப்படுவது முறையல்ல. “ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவது ஒரு அநீதி எனக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது” என்பது சிநேகனின் புகார். ஆரவ்வும் தனியாக காமிராவில் வந்து பிக்பாஸிடம் தன் நிலைமையை விளக்கினார்.

ஒருவரையொருவர் கிண்டல் செய்து கொள்ளும் போட்டியில் மதிப்பெண் வந்தது. கணேஷ் அணி வெற்றி பெற்றது. ஐந்து மதிப்பெண்களை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் ஏற்கெனவே வெறுப்பில் இருக்கும் ஹரீஷ் ‘எனக்கு மதிப்பெண் வேண்டாம்’ என்று மறுக்க, அவரை வற்புறுத்தி ஒரு மதிப்பெண்ணை தந்தனர். 

**

கமல் வருகை நிகழ்ந்தது.. குறிப்பிட்ட சதவீத பார்வையாளர்கள், கமலின் நேர்த்தியான நெறியாள்கையின் காரணமாக சனி, ஞாயிறு மட்டுமே நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். அவர்கள் சற்று ஏமாறும்படி கமல் சார்ந்த பகுதி இன்று குறைவாகவே இருந்தது. 

“நான் கேட்டுக் கொண்டபடி போட்டி மனப்பான்மை சற்று உயர்ந்திருக்கிறது. சில வருத்தங்களும் இருந்திருக்கும். என்றாலும் நன்றாக இருந்ததாக பரவலாக பேச்சு. பாராட்டுக்கள்” என்றவர், சுஜாவிடம் “எந்த task கடினமாக இருந்தது?” என்று பஞ்சாயத்தை துவங்கினார். “கார் task-தான் சிரமம்” என்று சுஜா சொல்ல, அது சார்ந்த பழைய பஞ்சாயத்துக்கள் தூசு பறந்தன. ‘ இது தொடர்பாக நீங்கள் இருவரும் செய்த வாதப் பிரதிவாதங்கள் நன்றாக இருந்தன. சிநேகன் வெளியேற்றலின் விளிம்பில் நின்று கொண்டிருந்ததாகச் சொன்னார். உண்மையாகவே கார் விளிம்பில் நீங்கள் இருவரும் நின்று கொண்டிருந்தீர்கள்’ வார்த்தைகளில் விளையாடினார் கமல். 

‘எந்த சவால் பிடித்திருந்தது?” என்று ஒவ்வொருவரையாக கேட்கத் துவங்கினார் கமல். ‘ஐஸ் பக்கெட்டுக்குள் நின்று கொண்டு பந்து சேகரிக்கும் விளையாட்டு பிடித்திருந்தது. வேடிக்கையாகவும் இருந்தது. அதே சமயத்தில் சவாலாகவும் இருந்தது” என்றார் ஆரவ். 

“எனக்கு கார் task சவாலாக இருந்தது” என்று துவங்கினார் சிநேகன். “தண்ணி குடிக்க முடியாது. இருபது மணி நேரம் பாத்ரூம் போக முடியாது” என்கிற நடைமுறைச் சிக்கலை சிநேகன் சொன்னதும் “ஆமாம். நான் கூட நெனச்சேன். காருக்குள்ள ஏதாவது காலி பாட்டிலை வெச்சிருப்பாங்களோன்னு” என்று கிண்டலடித்தார் கமல். “காருக்குள் வெயில் சூட்டில் அமர்ந்திருந்த சிரமத்தை சொன்னார் சிநேகன், இதற்காக இருவரையும் பாராட்டினார் கமல். ‘நீச்சல் குளத்தில் குதித்து மதிப்பெண் பொறுக்கும் சவால் பிடித்திருந்தது. ஆனால் கணேஷ் எனக்கு வாய்ப்பு தரவில்லை” என்று ஜாலியாக ஆதங்கப்பட்டார் வையாபுரி. 

“கார்டு task-ல் நான் முட்டாள்தனம் செய்து விட்டேன். கார்டை பாக்கெட்ல வெச்சுக்கிட்டே எங்கெங்கோ தேடினேன்’ என்று ஹரீஷ் சொன்னதும், அதையும் அரசியல் நையாண்டிக்காக பயன்படுத்திக் கொண்டார் கமல். “ஆமாம். வாக்குச் சீட்டு மாதிரி நம்ம கிட்டயே வாய்ப்பு இருக்கும். ஆனா அதை விட்டுட்டு எங்கெங்கோ தேடுவோம்” என்று சமயல் கிடைக்கும் போதெல்லாம் சிக்சராக அடித்துக் கொண்டிருந்தார் கமல். 

“திருடற task பிடிச்சிருந்தது. சினிமாக்களில் கூட போலீஸ்காரனா நடிச்சிருக்கேன். திருடனா நடிச்சதில்லை. என்னோட பொருள் ஒன்றையும் விட்டுத்தராமல் பாதுகாத்து, மற்றவர்களின் பொருட்களை சாமர்த்தியமாக திருடினேன்’ என்று பெருமையடித்துக் கொண்டார் கணேஷ். “இதைப் போலவே மற்றவர்களை கிண்டலடிக்கும் சவாலில் என்னால் சரியாக செய்ய முடியாது என்றே முதலில் நினைத்தேன். ஆனால் ஆரவ் மற்றும் ஹரீஷின் உதவியால் அந்தச் சமயத்தில் சிறப்பாக செய்ய முடிந்தது” என்று மற்றவர்களுக்குமான கிரெடிட்டை சரியான சமயத்தில் பதிவு செய்தார் கணேஷ். 

ஆம். நாம் கூட இவர் எங்கே கிண்டலடிக்கப் போகிறார் என்று நினைத்திருந்த சமயத்தில் வையாபுரியை போட்டு வெளுத்து வாங்கினார், மனுஷன். கமலின் பாராட்டும் இதற்காக அவருக்கு கிடைத்தது. 

அடுத்ததாக ஹரிஷிடம் வந்தார் கமல். “திருடற task-ல் நீங்கள் வருத்தப்பட்டது மாதிரி தெரிந்தது. ஏன் போகணும்னு நெனக்கறீங்க?’ என்று நேரடியாக கேட்டார் கமல். ஆரவ் செய்த பொய் விளையாட்டு தன்னை வருத்தப்பட வைத்தது என்று தன் தரப்பு விளக்கத்தை தந்தார் ஹரீஷ். இதற்கு பதில் சொல்லும் வகையில் ஆரவ் சொன்ன பதிலும் சரியாகவே இருந்தாலும், ‘பொதுவில் சொன்னால் மாட்டிக் கொள்வோம். அதனால் அந்தப் பொய்யை தொடர்ந்தேன்” என்று அவர் குறிப்பிட்டது மட்டும் முரணாக இருந்தது., ஸ்மோக்கிங் ரூமில் ஹரிஷீடம் தனியாக பேசும் போது ஆரவ் இதை ஒப்புக் கொண்டிருக்கலாம். விளையாட்டு வினையான தருணம். 

இந்த விளையாட்டில் எல்லோருமே சூழ்நிலைக் கைதிகள் என்கிற அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விளையாட்டின் போக்கில், அது சார்ந்த பதட்டங்களில், ஆர்வங்களில் அவரவர் செய்யும் சில பிசிறுகளுக்காக, அவர்களை ஏதோ உலகமகா குற்றவாளிகள் போல் குற்றஞ்சாட்டி பார்வையாளர்கள் கடுமையாக வசைவது, அதை வைத்துக் கொண்டு மிகையாக பிஎச்டி ஆராய்ச்சி செய்வதெல்லாம் முறையற்றது. எல்லா மனிதர்களுமே நிறையும் குறையும் உள்ளவர்கள். குற்றம் சாட்டும் நாமே கூட இது போல் நம்முடைய நடைமுறை வாழக்கையில் எத்தனையோ முறை சறுக்கியிருப்போம். மனச்சாட்சியைத் தவிர அதை பதிவு செய்ய எந்த காமிராவும் இல்லை என்கிற விஷயத்தை நினைவில் வைத்திருப்பது நல்லது. 

“ஹரீஷ். நீங்க நேர்மையா விளையாடினதா நெனக்கறீங்களா?” என்று கேட்டார் கமல். “ஆமாம். சார். விளையாடினேன்” என்று பதில் வந்தது. ஆம். அது பெரும்பாலும் உண்மைதான். பல விளையாட்டுக்களில் ஹரீஷின் நோ்மையையும், மற்றவர்கள் தவறும் போது அவர் படுகிற எரிச்சலையும் பார்த்திருக்கிறோம். 

“சிநேகன், ஹரீஷ் நேர்மையாக விளையாடினார் என்று நினைக்கிறீர்களா? என்று பந்தை சிநேகனிடம் தள்ளி விட்டார் கமல். “இல்லை சார். விளையாடும் போது நான் சரியா விளையாடறேன்னு என்னையே பார்க்கறதில்லை” என்றார் சிநேகன். பிந்துவிடம் ஏற்பட்ட பஞ்சாயத்தையும் இடையில் குறிப்பிட்டார். “இருங்க.. அந்தப் பஞ்சாயத்தை தனியா வெச்சுக்கலாம்” என்று கமல் கூறியதும் சபையில் சிரிப்பலை எழுந்தது. 

சிநேகன் சொன்ன காரணத்தையே ஆரவ்வும் சொன்னார். “விளையாட்டு பதட்டத்துல நம்மையே கவனிக்க முடியலை. சரி, இத்தனை காமிராக்கள் இருக்கிறது. நாம் தவறு செய்தால் மாட்டிப்போம். குறும்படம் வந்துடும்” என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி காரணமாக நேர்மையாக விளையாடத் தோன்றும்”: ‘குறும்படம்’ என்கிற வார்த்தை ஆரவ்விடமிருந்து வந்ததாலோ என்னவோ, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் நையாண்டியாக உற்சாகக்குரல் எழுப்பினார்கள். 

அடுத்தது, கார் சவாலில் சிநேகனுக்கும் சுஜாவிற்கும் ஏற்பட்ட பஞ்சாயத்திற்கு வந்தார் கமல். “எல்லோரும் சேர்ந்து சுஜாவை வெளியே வரச்சொல்லி தீர்மானம் போட்டீங்க. அது சரியா?” என்றதற்கு மற்றவர்கள் ஆமோதித்தனர். எதிர்பார்த்தபடியே சுஜா, இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.  “எனக்கு சம்மதமில்லை. என்னுடைய இரவு சவாலிற்கு சிநேகன் உதவி செய்ததை நினைவுப்படுத்தியது மாதிரி இருந்தது. அந்த உதவியை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ஆனால் விட்டுக்கொடுங்கள்’ என்ற மாதிரி கேட்டது சங்கடமாக இருந்தது என்றார் சுஜா. 

அவரை இடைமறித்த சிநேகன் “நான் அப்படிக் கேட்கவில்லை. நீங்க வேணா வீடியோவைப் போட்டுப்பாருங்க. அப்படி வந்திருக்காது. கார்ல உட்கார்ந்திருந்த அத்தனை நேரமும் அவங்க கிட்டநான் பேசலை. என் பலவீனத்தை அவங்க பயன்படுத்திக்க அனுமதிக்க கூடாதுன்னு முடிவு செய்தேன். காரணம், கார்டு சேகரிக்கும் போட்டியில் எனக்கு முன்னால் காமிராவில் வந்து நின்னாங்க. அப்ப விட்டுக் கொடுத்தேன். “ஆனா அது என் புத்திசாலித்தனம்” என்று அவங்க சொன்னப்பதான் உடைஞ்சேன். ஒரு இடத்துல கூட அவங்க விட்டுத்தரலை”

“ கணேஷ் – ஆரத்தி மாதிரி ரெண்டு பேரும் சேர்ந்து  இறங்கிடலாமான்னு கூட அவங்க கேட்டாங்க. அதனால பயனில்லைன்னு சொல்லிட்டேன். அவங்க விட்டுக்கொடுத்து ஜெயிக்கிற அளவிற்கு நான் கோழையில்லை. இந்த தீர்ப்பில் எனக்கு திருப்தியில்லை. இதர போட்டியாளர்களின் கோரிக்கையை சுஜா மறுக்கும் போது பிக்பாஸ் அவருக்கு ஒரு வாய்ப்பு தருகிறார். ஆனால் என்னுடைய கால் பிழையாக காரின் விளிம்பில்  பட்டிருந்தால் அது சார்ந்த எச்சரிக்கையை பிக்பாஸ்  எனக்கு தந்திருக்கலாம். மற்ற சவால்களில் சிறிய பிழை ஏற்பட்டால் கூட வாக்குமூல அறைக்கு அழைத்து எச்சரிக்கை செய்யும் பிக்பாஸ், இருபது மணி நேர போராட்டத்திற்கும் மேல் நீளும் கடுமையான போட்டியில் எச்சரிக்கை தராதது அநீதி.”

என்று பராசக்தி சிவாஜி கணேசன் மாதிரி தன் தரப்பாக நீண்ட விளக்கத்தை அளித்தார் சிநேகன். அவர் சுட்டும் காரணங்கள் நியாயமானவை போல்தான் தோன்றுகிறது. “மக்களும் பார்த்துக்கிட்டிருக்காங்க. பிக்பாஸூம் பார்த்துட்டிருக்கார்” என்ற சூசகமான எச்சரிக்கையை தந்தார் கமல். ‘இல்ல சார். அது கூட பரவாயில்லை. சுஜா என் கிட்ட வந்து ‘என் பாயிண்ட்டை வேணா தந்திடறேன்’ னு சொன்னது எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அதனாலேயே அவங்க கூட பேசறதை நிறுத்திட்டேன்” என்றார்.

“அவர் அழும் போது என்னால் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியலை. நான் பட்ட நீண்ட வேதனையை அவரும் பட்டிருக்கார். அதனாலதான் அத்தனை கால்வலியிலும் போய் இதைச் சொன்னேன்” என்றார் சுஜா. இரு தரப்புமே ஒருவகையில் நியாயமாகத்தான் படுகிறது. மதிப்பெண்களை சமமாக பிரித்து கூட தந்திருக்கலாம். 

‘சரி. இந்தப் பஞ்சாயத்திற்கு அப்புறம் வர்றேன்” என்ற கமல் (இன்னுமா?) என்று சிறிய இடைவேளைக்கு பின் வந்தார். (அப்படி எங்கேதான் போகிறார்?)

கமலின் ஒவ்வொரு வருகையின் போதும் போட்டியாளர்கள் எழுந்து நிற்பதும் ‘உட்காருங்க’ என்று அவர் சொல்வதும் தேவையற்ற சம்பிரதாயமாகத் தெரிகிறது. ஒருமுறை வணக்கம் சொன்னால் போதாதா?

“சுஜா, இந்த சவாலின் மூலமாக சிநேகனைப் பற்றி என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டார் கமல். ‘அவர் ரொம்ப strong. விட்டுத்தர மாட்டார்” என்றார் சுஜா. “அவங்க வாழ்க்கை வேற, கேம் வேற –ன்னு பார்க்கறாங்க. (அப்படித்தானே இருக்கணும்?) விளையாட்டிற்காக என்ன வேணா செய்வாங்க. நான் அப்படி இல்லை’ என்று சென்ட்டியைத் தூவினார் சிநேகன். “ஆம் அதிலென்ன தப்பு?” என்று கறாராக சொன்னார் சுஜா. அவர் சொன்னதை கமலும் ஆமோதித்தார். 

“எனக்கு இத்தனை நாட்களாக வாக்களித்த மக்களுக்காக நான் நிச்சயம் நூறு நாட்கள் விளையாடுவேன். நான் இங்கு கற்றுக் கொண்டதை வாழ்க்கையில் பயன்படுத்த மாட்டேன்’ என்றார் சிநேகன். வாழ்க்கையின் அதே நடைமுறை விஷயங்கள்தான் பிக்பாஸ் விளையாட்டிலும் பிரதிபலிக்கிறது என்கிற நிதர்சன உண்மையை கவிஞர் மறந்து போனது ஏன்?

மறுபடியும் ஹரீஷிடம் வந்தார் கமல். “இவங்க பேசினதைப் பார்த்தீங்களா. இதுல இருந்து உத்வேகம் வரலையா?” என்றார். ஆனால் ஹரீஷ் இன்னமும் மனவருத்தத்தில் இருக்கிறார் போலிருக்கிறது. தயங்கி தயங்கிப் பேசினார். 

“கார்டை மறந்துட்டு உங்களை நீங்களே திட்டிக்கிட்டீங்க இல்லையா.. அந்த விஷயம் எனக்கு பிடிச்சிருந்தது. அந்த உத்வேகத்தோட விளையாடுங்க” என்று கமல் சொன்னாலும், ‘இல்லை சார். மனசு ஒத்துக்கலை’ என்று தயங்கினார் ஹரீஷ். “எவ்ள நேரத்துல ஒத்துக்கும். சொல்லுங்க. அதிக டைம் இல்லை” என்று வாட்சைப் பார்த்தார் கமல். வேடிக்கை. 

அடுத்த தூண்டிலை பிந்துவின் பக்கம் போட்டார். “ஹரீஷிற்கு என்ன அட்வைஸ் பண்ணுவீங்க?” “அவர் ரொம்ப அப்பாவி. ஆனால் சில விஷயங்களை எளிதாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடணும்” என்று சொல்லி வகையாக மாட்டிக் கொண்டது மயில். “அவரைச் சொல்லிட்டு நீங்க விளையாட மாட்டேங்கறீங்களே?” என்று கிடுக்கிப்பிடி கேள்வியை கேட்டார் கமல். சபை சிரித்தது. 

“அந்தச் சமயத்துல எனக்கு பிக்பாஸ் மீது கோபம் இருந்தது. ஒவ்வொரு பந்தை எடுக்கும் போதும் அவர் எனக்கு சாதகமாக சொல்லவில்லை. அது எனக்கு இடையூறாகவே இருந்தது” என்றவரை இடைமறித்த கமல் “பிக்பாஸ் மேல யாருக்கு கோபம் இல்லை. சொல்லுங்க பார்க்கலாம்” என்று சேம் சைட் கோல் போட எல்லோரும் சிரித்தனர். 

“ஓகே. சிறிய வருத்தங்கள் இருந்தாலும் எல்லோரும் sportmanshipவோட விளையாடினீங்க. பாராட்டுக்கள்” என்று வாழ்த்தினர் கமல். மறுபடியும் ஹரீஷிடம் வந்த கமல், ‘என்னாச்சு என்று விசாரித்தார்”. “இல்லை சார். நான் பொய்யா நடிக்க விரும்பலை” என்று உண்மையைச் சொன்னார் ஹரீஷ்.

பழைய போட்டியாளர்கள் vs புதிய போட்டியாளர்கள் என்கிற அரசியல் இருக்கிறதா என்று விசாரித்தார் கமல். பிந்துவும் ஹரீஷீம் அதை ஒரு மாதிரியாக ஆமோதித்தனர். “ரொம்ப நாளு இருக்காங்கறதுக்காக அவங்களை மக்களுக்கு பிடிச்சதுன்னு அர்த்தம் இல்லை” என்று அரசியல் நையாண்டி வெடிகுண்டை வீசினார். உள்ளே இருப்பவர்களுக்கு அது புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. பார்வையாளர்களுக்குப் புரிந்திருக்கும். 

“புதிய போட்டியாளர்கள் ஜெயிப்பதில் பழைய போட்டியாளர்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருக்குதோ” என்று விசாரித்தார் கமல். இல்லை என்று மழுப்பினார்கள் பழைய போட்டியாளர்கள். ஆனால் வீட்டின் உள்ளே வேறு மாதிரியாகத்தான் பேசுகிறார்கள். 

கடைசியாக, நாமினேஷன் விஷயத்திற்கு வந்தார். ‘வையாபுரி கிளம்ப தயார் ஆயிட்டிங்களா,? என்று விசாரித்தார். “ நீண்ட காலம் இல்லாமல், என் குடும்பத்திடம் இணக்கமும் அன்பும் ஏற்பட்டது எனக்கு பெரிய விஷயம். பிக்பாஸ் வெற்றியை விடவும் அதை முக்கியமாக நினைக்கிறேன். எனவே வெளியில் சொல்ல தயாராக இருக்கிறேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார் வையாபுரி. (ஜெயிச்சுட்டு வாங்க –ன்னு என்று வீட்டம்மணி சொன்னதை அவர் சற்று நினைவுகூர்நதிருக்கலாம்).

ஹரீஷ் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட செய்தியை மறைமுகமான சொன்ன கமல், மற்றவர்களின் தலைவிதியை நாளை சொல்வதாக விடைபெற்றார். வையாபுரிதான் வாக்கு எண்ணிக்கையின் கடைசி  வரிசையில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தகவல்கள் கூறுகின்றன. பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு