Published:Updated:

’அமித் பார்கவை ரொம்பவே மிஸ் பண்றேன்!'  - 'யாரடி நீ மோகினி' சயித்ரா

’அமித் பார்கவை ரொம்பவே மிஸ் பண்றேன்!'  - 'யாரடி நீ மோகினி' சயித்ரா
’அமித் பார்கவை ரொம்பவே மிஸ் பண்றேன்!'  - 'யாரடி நீ மோகினி' சயித்ரா

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லியாக நடித்துவருகிறார் சயித்ரா. இதற்கு முன்பு, 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் ஹீரோயினாக நடித்தவர். ''அந்த சீரியல்தான் 'யாரடி நீ மோகினி' வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துச்சு'' எனச் சிலாகிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் சயித்ரா. 

''ஹீரோயினாக நடிச்சுட்டு திடீரென வில்லி ரோல் பண்றதுக்கு எப்படி ஒப்புகிட்டீங்க?'' 

''எந்த சீரியல், என்ன கேரக்டராக இருந்தால் என்ன? என்னைப் பொருத்தவரை எல்லாமே நடிப்புத்தான். நம் நடிப்பின் திறமையை அந்த கேரக்டர் காட்டணும்னு நினைப்பேன். அந்த ஸ்கோப்பைத்தான் ஒவ்வொரு சீரியலிலும் எதிர்பார்க்கிறேன். 'யாரடி நீ மோகினி' சீரியலைப் பார்த்துட்டு நிறையப் பேர் வித்தியாசமான ரோல் எடுத்திருக்கீங்க எனப் பாராட்டறாங்க. அதைக் கேட்கவே சந்தோஷமாக இருக்கு.'' 

''சமீபத்தில் நீங்க வாங்கின பாராட்டு...'' 

''ரொம்ப நல்லா நடிக்கிறீங்கனு 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல் டைரக்டர் பாராட்டினதை கிஃப்ட்டா நினைக்கிறேன். இப்போ, 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடிக்கும் ஃபாத்திமா மேடம், 'உன் பாடி லாங்குவேஜ், கை ஆக்‌ஷன் எல்லாம் சில நேரம் ரஜினி சார் மாதிரியே இருக்கு'னு பாராட்டினாங்க. அது மிகப்பெரிய ஹானர் எனக்கு.'' 

''சமீபத்தில் ரஜினியுடன் நீங்க எடுத்துக்கொண்ட படம் செம்ம ரீச் போல...'' 

''நிறையப் பேர் சொன்னாங்க. நான் சோஷியல் மீடியாவைச் சரியா கவனிக்கலை. சீரியல், சினிமா என பிஸியாக இருக்கேன்.'' 

''என்ன திடீர்னு ரஜினியுடன் செல்ஃபி எடுத்திருக்கீங்க?'' 

''ஹய்யோ... நான் ரஜினி சாரின் மிகப்பெரிய ஃபேன். அவரை அவ்வளவு பிடிக்கும். சின்ன வயசிலிருந்து அவர் நடிப்பை ரசிக்கிறேன். ஒரு ரசிகையா அவரோடு ஒரு ஃபோட்டோ எடுத்துக்க ரொம்ப ஆசை. இத்தனை வருஷம் அந்தச் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். இந்த செல்ஃபி ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி எடுத்தது. பிரசாத் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டுக்குப் போயிருந்தேன். அங்கே 'காலா' ஷூட்டிங்கில் ரஜினி சார் ஷாட்டுக்கு ரெடியா இருந்தார். 'சார் என் பெயர் சயித்ரா. ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமா?'னு கேட்டேன். 'ஓ... ஷ்யூர்'னு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். செம்ம குஷியாகிட்டேன். அந்தச் சந்தோஷத்தில் அவருக்குக் கன்னத்தில் முத்தம் கொடுத்து ஃபோட்டோவும் எடுத்துக்கிட்டேன். போட்டோவை உடனே போடக்கூடாதுனு அந்த ஷூட்டிங் டீம்ல சொல்லிட்டாங்க. அதனால்தான், காலா போஸ்டர் வெளியானதும் என் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் பண்ணினேன். நான் நடிகை என்பதை அவர்கிட்ட சொல்லத் தோணலை. ஒரு ரசிகையா அவரைச் சந்திச்சதையே பெருமையா நினைக்கிறேன். அவரை மாதிரியே பல விஷயங்களை ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்.'' 

''அப்படி என்ன ஃபாலோ பண்றீங்க?'' 

''அவருடைய ஸ்டைல் பிடிக்கும். ரசிகர்களிடம் எந்த பந்தாவும் இல்லாமல் ஆர்வமாகப் பேசி, நலம் விசாரிப்பார். அந்த விஷயத்தை எப்பவும், எங்கே போனாலும் நான் ஃபாலோ பண்ணிட்டிருக்கேன்.'' 

''சீரியல்கள் தவிர சினிமாவிலும் நடிக்கிறீங்களா?'' 

''ஆமாம்! ஒரு தெலுங்குப் படத்திலும், இரண்டு கன்னட படங்களிலும் நடிச்சுட்டிருக்கேன். தமிழில் இன்னும் வாய்ப்பு வரலை. தமிழே தெரியாமல் இதுவரை இருந்துட்டேன். இனிமேதான் நிறையப் பேரிடம் பழக ஆரம்பிக்கணும்.'' 

''அது சரி, 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலை ஏன் சீக்கிரம் முடிச்சுட்டாங்க?'' 

''அது எனக்குத் தெரியலை. சீக்கிரமே முடிஞ்சதில் எனக்கும் வருத்தம்தான். ஹேப்பி என்டிங்கா முடிச்சிருக்காங்க. அந்த சீரியலின் ஹீரோ அமித் பார்கவையும் டைரக்டரையும் ரொம்பவே மிஸ் பண்றேன். லவ்லி டீம்!''

பின் செல்ல