Published:Updated:

''சீக்கிரமே அந்த நல்ல சேதி!'' - 'வாணி ராணி' ஸ்ருதி பர்சனல்

''சீக்கிரமே அந்த நல்ல சேதி!'' - 'வாணி ராணி' ஸ்ருதி பர்சனல்
News
''சீக்கிரமே அந்த நல்ல சேதி!'' - 'வாணி ராணி' ஸ்ருதி பர்சனல்

''சீக்கிரமே அந்த நல்ல சேதி!'' - 'வாணி ராணி' ஸ்ருதி பர்சனல்

'நாதஸ்வரம்' சீரியல்மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், ஸ்ருதி சண்முகப்பிரியா. படிப்பு, நடிப்பு இரண்டிலும் ஆல்ரவுண்டராக கலக்கிவருகிறார். தற்போது, 'வாணி ராணி' சீரியலில் வில்லியாக வெளுத்துக்கட்டும் அவரோடு ஒரு ஜாலி சாட்... 

''ஸ்ருதி பற்றி...'' 

''என் சொந்த ஊர் கோயம்புத்தூர். பிறந்தது, படிச்சது எல்லாமே அங்கேதான். பி.எஸ்.சி., எம்.சி.ஏ., எம்.ஐ.பி முடிச்சுட்டு நான் படிச்ச கல்லூரியிலேயே பிளேஸ்மென்ட் டிரையினரா வேலை பார்க்குறேன். அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நான் ரொம்ப செல்லம். ஏன்னா, எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு.'' 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எப்போ சீரியலில் நுழைஞ்சீங்க?'' 

''பன்னிரண்டாம் வகுப்பு படிச்சுட்டிருந்தப்போ, 'நாதஸ்வரம்' ஆடிஷனுக்குப் போனேன். அந்த ஆடிஷன் முடிச்ச ரெண்டு மாசத்தில் பப்ளிக் எக்ஸாமை முடிச்சேன். அப்புறம், காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணிட்டு நாதஸ்வரம் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன்.'' 

''ஸ்ருதி ரொம்ப படிப்பாளியோ?'' 

''அப்படியெல்லாம் கிடையாதுங்க.. என் வீட்டில் நடிக்கிறதுக்கு அனுமதி கொடுக்கும்போதே, 'இது உன் படிப்பை பாதிக்குதுனு எங்களுக்குத் தோணாத அளவுக்கு நடந்துக்கோ'னு சொன்னாங்க. எனக்காக நடிச்சேன்... அவங்களுக்காகப் படிச்சேன்.'' 

''உங்களுக்கு ஹோம்லி லுக் பிடிக்குமா... மாடர்ன் லுக் பிடிக்குமா?'' 

''எனக்கு மாடர்ன்தான் பிடிக்கும். வீட்டில் இருக்கும்போதும் சரி, நண்பர்களோடு வெளியில் போகும்போதும் சரி, மாடர்ன் டிரெஸ்தான். ஆனால், கேமரா வழியே பார்க்கும்போது என் முகத்துக்கு ஹோம்லிதான் செட் ஆகுது.'' 

''உங்ககிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது?'' 

''ஸ்கூல் படிக்கிறப்போ எனக்குத் தலைமுடி கொஞ்சமாகத்தான் இருக்கும். நாதஸ்வரம் சீரியலில் ஆரம்பத்தில், விக் வெச்சுதான் நடிச்சுட்டிருந்தேன். சொன்னால் நம்ப மாட்டீங்க, இப்போ நான் வைச்சிருந்த விக்கைவிட நீளமா என் முடி வளர்ந்துடுச்சு. அதனால், என்னுடைய லாங் ஹேர்தான் எனக்குப் பிடிச்சது.'' 

''நீங்க ஒரு மல்டி டாஸ்கிங் பெண்ணாமே...'' 

''சின்ன வயசிலிருந்தே ஒரே வேலையைத் தொடர்ந்து பார்க்கிறது என்னால் முடியாத காரியம். புதுசு புதுசா நிறைய வேலைகளைப் பார்த்துட்டே இருக்கணும். வீட்டில இருக்கும் போதும் நிறைய வேலைகளை செய்துட்டு இருப்பேன். இப்போ நான் படிச்ச காலேஜில் வேலை பார்த்துட்டு, நடிகையாகவும் தொடர்ந்துட்டிருக்கேன்.'' 

''உங்கள் முகத்துக்கு நெகட்டிவ் ரோல் செட் ஆகுதா?'' 

''எனக்கு நெகட்டிவ் ரோல் செட் ஆகுதானு தெரியலை. ஆனால், ரொம்ப நாளாகவே மக்கள் மனசுல அமைதியான பொண்ணாகவோ, அடக்கமான மனைவியாகவோ பதிவாகியிருந்தேன். அது எனக்கே போரிங்கா இருந்துச்சு. அந்த எண்ணத்தை மாத்தறதுக்காக, நெகட்டிவ் ரோல் செலக்ட் பண்ணினேன்.'' 

''மறக்கமுடியாத அனுபவம்...'' 

''சின்ன வயசிலிருந்து இப்போ வரை என்னுடைய கிரஷ், 12B படத்தின் ஹீரோ, ஷியாம். அவரை ஒரு தடவையாவது நேரில் பார்க்கணும், பேசணும்னு  நீண்ட நாள் கனவு இருந்துச்சு. சன் குடும்ப விருதுகளில் நேரில் பார்த்துப் பேசினேன். அந்தப் பொக்கிஷ நேரத்தை வாழ்நாள் முழுசும் மறக்கவே மாட்டேன்.'' 

''நெக்ஸ்ட் பிளான் என்ன?'' 

''இப்போ 'வாணி ராணி' சீரியல் போயிட்டிருக்கு. தொடர்ந்து சீரியல்ல வாய்ப்பு கிடைச்சா நடிப்பேன். ஆணவக்கொலையை மையமாவெச்சு உருவாகும் 'காயகம்' என்ற படத்தில் நடிச்சிருக்கேன். அதன் ரிலீஸுக்காக வெயிட்டிங்.'' 

''எப்போ கல்யாணம்?'' 

''சீக்கிரமே நல்ல செய்தி சொல்றேன்.''