Published:Updated:

பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்..! கமல்ஹாசன் விருதை வழங்கினார் #BiggBossGrandFinale

உ. சுதர்சன் காந்தி.
ர.பரத் ராஜ்
பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்..! கமல்ஹாசன் விருதை வழங்கினார் #BiggBossGrandFinale
பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்..! கமல்ஹாசன் விருதை வழங்கினார் #BiggBossGrandFinale

இன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' நிகழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம்.

இந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது' நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள். அந்த ஒருவர் யார்..? அந்த கேள்விக்கான விடை இன்றைய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அனைவரும் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். பாட்டு, ஆட்டம் என்று ஒரே கொண்டாட்டமாக பிக் பாஸ் வீடு மாறியுள்ளது. 

சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் ட்ரோல் செய்தவர்களுக்கு கமல்ஹாசன் நன்றி கூறினார். பின்னர், இணையத்தில் பிக்பாஸ் தொடர்பாக அதிக வைரலான மீம்ஸ்கள் திரையில் காட்டப்பட்டன. அதைப்பார்த்து பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர். 

பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தரும் மேடையில் தோன்றி சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டனர். அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்து பேசிய ஓவியா, 'என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனா, பிக் பாஸ்  நிகழ்ச்சி தான் ஒரு ஐடியா கொடுத்துச்சு. நன்றி பிக் பாஸ் அன்ட் லவ் யூ ஆல்' என்று முடித்தவர், 'கொக்கு நெட்ட' பாடலை பாடிக்கொண்டே போய் அமர்ந்தார்.

 இது வரை நடந்த சம்பவங்களை ஒரு குறும் படமாக போட்டு காண்பித்தார் பிக் பாஸ் குறும்படத்தை பார்த்தபிறகு, கருத்து சொன்ன ஓவியா. 'இது விளையாட்டு இல்லை. என் வாழ்க்கை. எனக்கான அடையாளம்' என்றார். 'நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் சிறந்த படம் பிக் பாஸ் தான் ' என்றார் பரணி. இந்த தருணத்தில் நான் ஓவியாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார் சக்தி.

இந்த நிகழ்விற்கு பிறகு 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட குட்டீஸ் வர, அவர்களிடம் கமல் ஒரு போட்டியை வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'ஷட் அப் பண்ணுங்க', 'ட்ரிக்கர்', 'அகம் டிவி வழியே அகத்திற்குள்', பனானா க்ரீன் டீ போன்ற பிக்பாஸின் பாப்புலர் டயலாக்ஸை சொல்ல அதை யார் சொன்னார்கள் என கண்டுபிடிக்க வேண்டும் என்பதே போட்டி. கமலை போல சுசீலும், உத்ராவும் பேச இடைமறித்த ஆதீஷ் (ஜட்டி ஜகனாதன்) உங்களை போல பாடுவேன் என்று களத்தூர் கண்ணம்மா பாடலை பாடி அசத்தினான். 

ஓவியாவின் கொக்கு நெட்ட பாடலையும் அவரது ஃபேமஸ் வசனங்களையும் மிருதுளா ஶ்ரீ அவரைப் போலவே பெர்ஃபார்ம் செய்து க்ளாப்ஸ் அள்ளினார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக போடப்பட்ட ஓட்டுகள் 76,76,53, 065. இதை எங்கே பதிவு செய்ய வேண்டுமோ அங்கே பதிவு செய்யுங்கள். இதைப் பேச இது மேடையல்ல. வேறு மேடையில் பேசலாம்' என்று சிறிய ப்ரேக் விட்டு சென்றார் கமல்.

போட்டியின் மூன்றாவது ரன்னர் ஆப்பின் குடும்பத்தார் வீட்டிற்குள் போய் அவரை அழைத்து வரவேண்டும் என்று கமல் சொல்ல, ஆட்டம் பாட்டத்துடன் வீட்டிற்குள் நுழைந்தார் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா. பின், இருவரும் மேடைக்கு வந்தனர். அப்போது பேசிய அவர், 'அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்கவிரும்புகிறேன்' என்றார். 

ஓவியாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து ஒரு லெட்டரை படிக்க சொன்னார் பிக் பாஸ். ஆனால், ஓவியாவை உதட்டை மட்டும் அசைக்கச் சொல்லி வாய்ஸ் ஓவர் கொடுத்தார் கமல். ஓவியாவை உள்ளே அழைத்து ஒரு போட்டியாளரை மேடைக்கு அழைத்து வர சொன்னார் பிக் பாஸ். ஆடலும் பாடலுமாக உள்ளே சென்ற ஓவியா அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இறுதியில் ஹரீஷ் கல்யானை அழைத்து சென்றார் ஓவியா.

 'உள்ளே உள்ள சினேகனையும் ஆரவ்வையும் நான் போய் அழைத்து வரப்போகிறேன்' என்று கமல் பேசம்பொழுது, கமலைப் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. பிக் பாஸ் என்ற பெயரில் பேசிய குரல் இனி கேட்க முடியாது. ஆல் தி பெஸ்ட் சொல்லி பிக் பாஸ் குரல் விடைபெற்றவுடன் சினேகன் கண் கலங்கினார். வீட்டிற்குள் கமல் சென்று இருவரையும் அழைத்து வரும் போது ஆங்காங்கே திரும்பி பார்த்தபடி கும்பிட்டு வெளியே சென்றார் சினேகன். பின், 'விரு விரு மாண்டி விருமாண்டி' பாடலுடன் மூவரும் மேடை ஏறினார்கள்.

அப்போது பேசிய கமல், 'இது முடிவல்ல ஆரம்பம். தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கே வருவேன். வந்தே தீருவேன். ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன். ஆர்வத்தில் வரவில்லை; கடமையில் வருகிறேன். இங்கு கிடைக்கும் அன்பு அங்கேயும் கிடைக்கும் என நம்பிகிறேன்.' என்றார். அதன் பிறகு, பலத்த ஆரவாரத்துடனும் ஆர்ப்பரிப்பரிப்புக்கும் மத்தியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவை கமல் அறிவித்தார். அந்த விருதை கமல்ஹாசன் ஆரவ்வுக்கு வழங்கினார்.