Published:Updated:

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்! பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்!  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate
குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்! பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்! பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்!  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

இத்தனைநாள் நம் வீட்டில், அலுவலகத்தில், கல்லூரியில், டீக்கடையில், பொது இடத்தில் பேசுபொருளாக இருந்த நிகழ்ச்சி பிக்பாஸ். முதன்முதலாக இப்படி ஒரு நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது சிலருக்கு என்னவென்றே புரியவில்லை. சிலருக்கு இதெல்லாம் தமிழுக்கு செட் ஆகுமா? என்ற குழப்பம். சிலருக்கு நாட்டில் இத்தனை பிரச்னை இருக்கும்போது இதெல்லாம் தேவையா? என்கிற கோபம், ஒருத்தரோட அந்தரங்கத்தை படம் பிடித்துக் காட்டுவது சரியா? என்ற ரௌத்திரம், இதெல்லாம் நிஜமா, ஸ்க்ரிப்டா? என்ற சந்தேகம் என எல்லா திசைகளிலிருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. தொடக்கத்தில் ‘கமல் டிவி ஷோ பண்ணப்போறாராமே? இதெல்லாம் அவருக்கு தேவையா?’ என்று கேட்டவர்கள், பிறகு கமல் அல்லாமல் வேறு யாராலும் இதைச் சிறப்பாக செய்யமுடியாது என்று ஒப்புக்கொண்டார்கள். ‘பிரபலங்கள்னு சொன்னீங்க.. இவங்கதான் பிரபலங்களா?’ என்று நகைத்தவர்களுக்கு இன்று எல்லார் முகங்கள் மட்டுமல்லாமல் குணங்களும் பரிச்சயம். இவர் நல்லவர், இவர் கெட்டவர். இவர் பொய் சொல்கிறார், இவர் நேர்மையாக இருக்கிறார். இவரை எனக்குப் பிடிக்கும், இவரை எனக்குப் பிடிக்காது என்று ஒவ்வொருவர் பற்றியும் நம்மிடம் ஒரு அபிப்ராயம் கொண்டிருந்தோம். நமது அலுவலகத்தை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். தமிழக அரசியலை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டில் அடைத்துவைத்ததை பிக்பாஸூடன் ஒப்பிட்டோம். நமக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஒரு அரசியல்வாதி தனது ஓட்டுகளை ஓவியாவின் ஓட்டுகளுடன் ஒப்பிட்டார். இது தேவையா? இவ்வளவு பில்டப் தேவையா? என்பதையெல்லாம் தாண்டி நல்லதோ கெட்டதோ இன்று தவிர்க்க முடியாததாகி இருக்கிறது பிக்பாஸ்.  முதல் நாளில் 14 பிரபலங்கள் என்று சொல்லி 15 பேரை உள்ளே அனுப்பியது முதல் 100 நாட்கள் என்று சொல்லி 98 வது நாளிலேயே முடித்துக்கொண்டது வரை நமக்குமே பல சர்ப்ரைஸ்கள். இனி இறுதி நாளில் என்ன நடந்தது என்பது பற்றிப் பார்க்கலாம். 

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்!  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சாண்டி மற்றும் அவரது குழுவினரின் டான்ஸூடன் தொடங்கியது இன்றைய நிகழ்ச்சி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான வசனங்களை வைத்தே ஒரு பாடல் அமைத்து அதற்கு நடனமாடினார்கள். ஜூலியை வர்தா புயல் என்றது, ‘குழந்தை பேச்சுங்க.. தண்ணில விழுந்து போச்சுங்க’ என்று ஓவியா பற்றிய வரிகள் வரை செம.. செம. (தனி வீடியோவா போடுங்கப்பா) ரொம்ப  பின் ஸ்க்ரீனில் மணலில் கமல் முகம் வரையப்பட, முகம் முழுமை பெற்றதும் கதவு திறந்து மேடைக்கு வந்தார் கமல். இந்த நிகழ்ச்சியில் அதிகம் கவனிக்கப்பெற்ற இன்னொன்று அவர் அணிந்துவரும் ஆடைகள். இன்று வெள்ளை வேட்டி, கருப்பு சட்டையில் வந்திருந்தார். ‘100 நாள்…யப்பா இவ்ளோ பெரிய வேலைய ஒப்புக்கிட்டமேன்னு நினைச்சேன்.. அப்டி போயிடுச்சு’ என்று சொடக்கு போட்டு தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களில் ஆறரை கோடி பேர் அதாவது 85 சதவீதம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்த்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கொடுத்து ‘தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இது புதிய அத்தியாயம்’ என்றார். அதோடு ‘நான் நடிக்க வந்த பிறகு.. தமிழ் சினிமாவில் ஏற்பட்ட முக்கிய திருப்பங்களில் எல்லாம் பங்கு கொள்கிற வாய்ப்பு எனக்கு இருக்கும். அதை தொலைக்காட்சி திருப்புமுனையில் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி’ என்று சொல்லி நிகழ்ச்சியைத் துவக்கினார். 19 பேரில் இருந்து 4 பேர் எஞ்சியிருக்கிறார்கள். இவர்களில் யார் வெற்றியாளர் என்பதை உடனே சொல்லணும்னு எனக்கும் ஆசையா இருக்கு. அந்த ஒருவர் என்று ஆரம்பிக்க ஸ்டோர் ரூம் மணி அடித்தது. பேட்டரி மாத்தணுமாம் மாத்திட்டு வந்துடுறேன் என்று பிக்பாஸில் நாம் அடிக்கடி பார்த்து பழகிய காட்சிகளை நினைவூட்டினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமான இன்னொரு வார்த்தை ‘குறும்படம்’. ‘இப்போ உங்களைப் பத்தி ஒரு குறும்படம்’ என்று பிக்பாஸ் பற்றி மக்களிடம் கேட்டு தொகுத்திருந்த குறும்படத்தைப் போட்டுக்காட்டினார். ‘சிலர் இது பத்தி என்னன்னே தெரியாம இது வரக்கூடாதுனு நினைச்சாங்க.. எதுக்காக அப்படி சொன்னாங்கன்றதுக்குள்ளயெல்லாம் போக வேணாம். அது வேற ஏதோ காரணமா இருக்கும்’ என்று தனது வழக்கமான குறியீடு கலந்த பேச்சை எடுத்துவிட்டார். எத்தனையோ அறநூல்களின் மூலம் சொல்லி விளக்குவதைவிட இன்னொரு மனிதன் வாழ்ந்து காட்டினால் நமக்குத் தெளிவாகப் புரியும் என்று இந்நிகழ்ச்சி ஏன் தேவை என்பதற்கு விளக்கம் கொடுத்தார். 

அகம் டிவி வழி வீட்டிற்குள் நடக்கும் காட்சிகள் விரிந்தது. சிநேகன் கோலம் போட்டுவிட்டு சோகமாக வந்து அமர்ந்தார். ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் ஒலித்தது. வழக்கம்போல் ஒரு ‘வேக்கப் சாங்’ என்று கண்களைக் கசக்கிக் கொண்டு சோம்பல் முறித்தார்கள் ஆரவ், ஹரிஷ், கணேஷ் மூவரும். மெயின் டோர் திறக்கிறது. சிநேகன் திரும்பி ஆச்சர்யமாக பார்க்க, பழைய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக உள்ளே வருகின்றனர். பெருமகிழ்ச்சிக்கும் வாய்ச்சொற்களுக்குமான மியூசிக்கல் சேரில் வாய்ச்சொற்கள் தோற்றுவிட பேச்சற்று நின்றார் கவிஞர். சிநேகன் கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது, யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று பார்க்க வந்ததுபோல. ஓவியா சிநேகனை, ‘டோன்ட் க்ரை பீ ஹேப்பி’ என்று சமாதானப்படுத்தினார். காலையில் எழுந்தவுடன் எல்லாரையும் பார்த்ததில் ஆரவ்வுக்கு செம ஷாக். காயத்ரி - ஆரவ், கணேஷ் - ஆர்த்தி என மாற்றி மாற்றி உள்ளே குசலம் விசாரித்துக்கொண்டிருக்க, வெளியே ஓவியா ‘மெர்சல்’ டான்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். (அட அப்புறம் ஆடலாம்.. போய் ஆரவ்வை பாரு தாயி.. அதுக்குத்தானே வெயிட்டிங்கு). பின் உள்ளே நுழைந்து வீட்டை ஓவியாவும்..  வீடு ஓவியாவையும் அங்குலம் அங்குலமாக ரசித்துக் கொண்டிருந்தார்கள். பரணி தனது பழைய படுக்கைக்கு அருகில் நின்று கொண்டு நினைவுகளில் மூழ்கினார். கஞ்சா கருப்பு, வையாபுரி என மாற்றி மாற்றி ஒவ்வொருவராக சிநேகனுக்கு ஆரத்தழுவி வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். ‘இது கனவோ’ என்ற சிநேகனின் மன ஓட்டத்தைப் புரிந்து, ‘இது ரியல் நாட் ட்ரீம்.. நான் சொன்னேன்ல ஃபைனல்ஸ் அப்போ இருப்பேன்னு’ என்றார் ஓவியா. பிந்து, ரைஸா,சுஜா, அனுயா என்று வீடே களைகட்ட நேற்று ‘சேவல் பண்ணை’ போல ஆண்மயமாக இருந்த வீடு, இன்று சேட்டு வீட்டு கல்யாணம் போல கலர்கலராக ஜொலித்தது.பிக்பாஸ் வீட்டின் செட்டையும் அதற்கு ஏற்றார் போல், வட இந்திய திருமண வீடு போல் மாற்றி இருந்தார்கள்.

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்!  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

‘தொழில் முறை’ நண்பர்களான சக்தியும் ஹரிஷூம் டைமண்ட் திருடிய அனுபவத்தை பரஸ்பரம் பகிர்ந்துகொண்டார்கள். ரைஸா, ஹரிஷிடம் ‘உங்க கூட ஒரு செல்ஃபி எடுக்கணும்’ என்று கேட்க, சம்மன் இல்லாமல் ஆஜரான வையாபுரி, உள்ளே புகுந்து பூஜையை காலி செய்தார். வழக்கம்போல் கேமராவுடன் பேசத்தொடங்கினார் ஓவியா.. ‘உன்னை மிஸ் பண்ணல.. இதைதான் மிஸ் பண்ணேன்’ என்று இன்னொரு கேமராவைக் காட்டினார் (அந்த கேமராவின் சொந்தக்காரங்களுக்கு சொல்லியனுப்புங்கப்பா..!). ‘ஆரவ் அந்த ரூம்ல இருக்கு’ என்று அனுயா ஓவியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். 

‘ரொம்ப வருத்தமா இருக்கு’ என்று ஓவியாவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் பரணி. கஞ்சா கருப்பு தன் பழைய நினைவுகளை காமெடியாக சொல்லிக்கொண்டிருந்தார். ‘இவ்ளோ ஃபேன்ஸை என் லைஃப்ல பாத்ததில்ல’ என்று வையாபுரி, ஹரிஷிடம் சொல்லி பெருமைப்பட்டுக்கொண்டிருந்தார். ஷாப்பிங் போனவர், ஒன்றரை மணிநேரம் போட்டோவுக்கு போஸ் மட்டுமே கொடுத்துவிட்டு வெளியே வந்தாராம். கேசுவலாக ஆரவ்வை சந்தித்து, ஆல் தி பெஸ்ட் சொல்லி ஹக் பண்ணிவிட்டு வெளியேறினார் ஓவியா. தன் முடிந்து போன காதல் பற்றி தெளிவான ஒரு புரிதலுக்கு ஓவியா வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. இருவருமே அதை மிகவும் மெச்சூர்டாக கையாண்டார்கள். ஓவியா ஆர்மி பற்றி ஓவியாவிடமே விசாரித்துக்கொண்டிருந்தார் வையாபுரி. ‘உங்களுக்கு நல்ல ஃபேன்ஸ் இருக்காங்க. என்ன ஒல்லியாகிட்டீங்க? பொண்டாட்டி எப்டி இருக்கீங்க?’ என்று ஓவியத்தமிழில் பேசினார். என்ன ஓவியா ஓவியானு கட்டுரை ஓவியாவேயே சுத்திசுத்தி வருதேனு நினைக்கவேண்டாம். அதிலும் ஜூலி எல்லாம் தன் தாய் கழகத்தைவிட்டுவிட்டு, ஓவியா பாட்டு பாடலாமா ? என ஓவியாவிடம் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பிக்பாஸ் அறையில் இருக்கும் எல்லா கேமராவும் ஓவியா பக்கம் தான். வேறு வழியில்லாமல், ஓவியாவிடம் பேசியே ஆக வேண்டும் நிலை தான் மற்றவர்களுக்கு. இன்றைக்கு ஃபைனல்ஸே ஓவியாவுக்காகத்தான் என்பதுபோல கமல் உட்பட எல்லாரும் அவரையே மையம் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் என்ன விதிவிலக்கா!? . டைட்டில் 100 நாட்கள் காத்திருந்து வென்றவர் போன்றவற்றை எல்லாம் கடந்து, ஓவியா மக்களின் வெற்றியாளர் ஆயிற்றே?

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்!  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

‘எப்போ பாத்தாலும் அழுதுட்டே இருக்கீங்க இதுக்கு மோட்டார் எங்க இருக்கு?’ என்று ஓவியா, சிநேகனை கலாய்க்க, அவர் ‘உனக்காகத் தான் நிறைய அழுதுருக்கேன்’ என்றார். தெரியும் என்று ஸ்மைலி போட்டுக் கடந்தார் ஓவியா. ‘எங்கயாவது நாம ஃபேஷ் பண்ணிதான் ஆகணும். இன்னைக்கு திட்டிட்டு நாளைக்கு பேசிக்குவோம். இது வெளில இருக்குறவங்களுக்குத் தெரியாது’ என்று சிநேகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார் காயத்ரி. ‘நீ ரொம்ப மாறியிருக்க… மேக் ஓவர் நல்லாருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு’ என்று ஜூலியைப் புகழ்ந்தார் ஓவியா. 

ஆரவ்விடம் வையாபுரியைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார் ரைஸா. ‘ஃபுல் லவ் மூடுதான் இப்போலாம்’ என்று ரைஸா சொல்ல வையாபுரி ஆண் வெர்சனில் வெட்கப்பட்டுக்கொண்டே ‘ஃபர்ஸ்ட் டைம் ஃபேமிலிய படத்துக்கு கூட்டிட்டு போனேன் நேத்து’ என்றார்.  ஓவியாவும் ஜூலியும் பாடிக்கொண்டிருந்தார்கள். ‘என் செல்லப்பேரு ஆப்பிள்’னுலாம் பாடுறீங்க அப்படியே ‘திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்’ பாடியிருந்தா மரண மாஸா இருந்திருக்குமே ஜூலி மேடம். அதுதான் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டாச்சே. ‘வந்த உடனே ஆரம்பிச்சுட்டாளா?’ என்று சிநேகன் அதட்டினார்.

‘ஒரு பாட்டு போடுங்க பிக்பாஸ் ஐயா’ என்று கஞ்சா கருப்பு சொல்ல, அதை ஆமோதித்து சிநேகனும் பிக்பாஸிடம் ரெக்வஸ்ட் வைக்க, பிக்பாஸ் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ‘கட்டிக்கிடும் முன்னே நாம’ பாடலை ஒலிக்கவிட்டார். எல்லாரும் ஆடினார்கள். ஓவியா இப்போதும் போட்டுப் பொளந்து எடுத்தார். இன்றைக்கு செம குஷியாக இருந்தார்போல. பரணி ஓவியாவைப்போல் ஆடிக்காட்டினார். தான் கதறவிட்ட நாயை நினைவுகூர்ந்த ரைஸா, ‘அந்த நாயை ஐ.சி.யூக்கு அனுப்பிட்டேன்’ என்று சொல்லி பேய்ச்சிரிப்பு சிரித்தார். ‘ஏதிலார் போல பொதுநோக்கு நோக்குதல் காதலர் கண்ணே உள’ என்று வள்ளுவர் சொன்னதற்கினங்க ஆரவ்வை யாரோபோல பொதுவாக பார்த்துக்கொண்டிருந்தது ஓவியாவின் கண்கள். வெகுநாட்கள் கழித்து சந்தித்துக்கொள்கிறார்களே என்னென்ன பேசிக்கொள்வார்களோ என்று என்று ஏகத்துக்கும் எதிர்பார்த்தால் ‘யூ லுக் குட்.. ஹேர்ஸ்டைல் நல்லாருக்கு’ என்று கடமைக்கு சொல்லிக் கொண்டிருந்தார் ஓவியா. ரயில் சிநேகிதர்கள்கூட இன்னும் கொஞ்சம் டீட்டெய்லாக பேசுவார்கள். இவருக்காகத்தான் நீங்க நீச்சல்குளத்துல குதிச்சீங்க மறந்துட்டீங்களா ஓவியா? ஆனால் ஓவியாவது சில வார்த்தைகள் பேசினார். ஆரவ் அதுவும் இல்லை. புறக்கணிப்புதான் நட்பில் பெரும்தண்டனை என்பது ஆரவ்வுக்கு வெளியில் வந்த பிறகாவது புரியட்டும்.

‘நீங்க ஏன் போனீங்க.. நின்னு என்னனு கேட்ருக்கணும்’ என்று பரணிக்கு ஆர்த்தி அட்வைஸ் சொல்ல, ‘நீங்க அங்கதானே இருந்தீங்க நீங்க கேட்ருக்கலாம்ல’ என்று எதிர் கேள்வி கேட்டார் காஜல். ஆர்த்தியிடம் பதிலில்லை. ‘நாங்க ஒரே டீம்’ என்று ஏதேதோ சொல்லி மழுப்பினார். இந்த சம்பாஷனைகளின்போது பரணியின் வார்த்தைகள் சுவரேறிக்கொண்டிருக்க மௌனத்தில் இருந்தார் பரணி.

திருவிழாக்காட்சி போல 30 கேமராக்களில் எந்தக் கேமராவைப் பார்த்தாலும் மகிழ்ச்சியும், நலம் விசாரிப்புகள், அன்புமொழிகளுமாக நிறைந்திருந்தது பிக்பாஸ் வீடு.

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்!  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

**

ஶ்ரீ, நமீதா தவிர வந்திருந்த மற்ற 17 பேரும் லிவிங் ரூமில் அமர்ந்திருக்க கமல் தோன்றி, ‘கண்கொள்ளா காட்சி கேள்விபட்டிருக்கோம் இது கேமரா கொள்ளா காட்சி. நிறைந்த வீடு. எங்க வீட்டை பாக்குற சந்தோசம்’ என்று நெகிழ்ந்தார். ‘எப்படி ஃபீல் பண்றீங்க?’ கேள்வி முதலில் ஓவியாவுக்குப் போனது. கமல் ஓவியாவின் பெயரைச் சொன்னதும் அரங்கத்தில் அத்தனை கூச்சல், கைதட்டல் மாஸ் காட்டினார் ஓவியா. ‘திரும்ப வீட்ல.. கனவா நனவா புரியல.. ரொம்ப சந்தோசமா இருக்கு’ என்று இரண்டு வரியில் முடிக்க ‘என்ன ரொம்ப சுருக்கமா shut up பண்ணிட்டீங்க’ என்று கமல் கலாய்த்தார். ‘இவங்க இல்லாம எப்படி இருக்கப்போறோம் தெரியல’ என்று ஆர்த்தி சொல்ல, கமல் ‘நீங்களாவது வெளில போய் டச்சுல இருக்கலாம். பாக்குறவங்கள நினைச்சு பாருங்க.. எனக்கே 30 ஆம் தேதிக்கு மேல என்ன பண்ணப்போறேன்னு தெரியல’ என்றார்.அனுயாவை ‘தமிழரசி’ என்று அழைக்க ‘இப்ப தமிழ் ஜாஸ்தியா தெரியும். இட்ஸ் நைஸ் டூ கம் பேக்’ என்றார் ஆங்கிலத்தில். ஆரவ்விடம் வந்தபோது மீண்டும் அரங்கத்தில் கைதட்டல். பிந்துவுக்கு மட்டும் ஸ்பெஷலாக ‘You look Good’ என்றார் கமல். (ஏன் இந்த ஓரவஞ்சனை வாத்யாரே!?). சிநேகன், ‘தூங்கி 5 நாளாச்சு இன்னைக்கு இவங்களையெல்லாம் பாத்தா நல்லாருக்கும்னு யோசிச்சுட்டு இருக்கும்போதே வந்துட்டாங்க’ என்று தொடங்கி பொலபொலவென வார்த்தைகளைக் கொட்டித்தீர்த்தார். கஞ்சா கருப்பு ‘இந்த எலிமினேசன்னா என்னண்ணே?’ என்று கேட்க, ‘எலிக்கும் உண்டு நமக்கும் உண்டு’ என வாழ்க்கையை சொன்னார் கமல். 


ஃபைனலிஸ்ட் நான்கு பேரைத் தவிர மற்றவர்களை வெளியே வரச் சொன்னார். கைகுலுக்கல்கள் கட்டிப்பிடித்தல்கள் எல்லாம் முடிந்து வெளியேறினார்கள். வெளியேறும்போது காயத்ரியும் ஓவியாவும் பேசிக்கொண்டு வந்தார்கள். 

**

கமல் மேடையில் நின்றிருக்க ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். காலில் விழுவதைத் தடுத்துக்கொண்டிருந்தார் கமல். சுஜா கொஞ்சம் விந்தி விந்தி நடந்தார் (ஹீல்ஸ் பிரச்னையா?). ஓவியா வராமல் போகவே ஆடியன்ஸ் ஓவியா ஓவியா என்று கத்த கமல் அவர்களை பொறுமையாக இருக்கச் சொல்லிவிட்டு ‘இப்போது வந்த 15 பேர் இங்கிருந்து உங்க ஆணையோடு வெளியே அனுப்பப்பட்டவர்கள். இனி வரப்போகிறவர்கள் உங்கள் அனுமதியில்லாமல் வெளியேறியவர்கள். அவர்களை உங்கள் அனுமதியோடு வரவேற்கிறேன்’ என்று சொல்லி முதலில் பரணியை அழைத்தார். அடுத்து ‘நீங்க சொல்றீங்களா நான் சொல்லவா’ என்று கமல் கேட்க, மீண்டும் ஓவியா ஓவியா என்று அரங்கத்தில் சத்தம் (பாகுபாலி எஃபெக்ட்). இதுவல்லவோ வெற்றி..!

‘இனி நீங்களாச்சு அவங்களாச்சு’ என்று பரணியிடம் மைக்கைக் கொடுத்தார் கமல். (‘பார்த்தா பரமக்குடில இருந்து வந்த மாதிரி இல்ல பீகார்ல இருந்து வந்த மாதிரி இருக்கு’ என்று கலாய் வேறு). மலேசியாவில் மக்கள் நாயகன் விருது தர இருந்ததாகவும் கமலுக்காக இன்று இங்கு வந்திருப்பதாகவும் சொன்னார் பரணி. அமெரிக்காவில் இருந்தெல்லாம் கால் வந்ததாக நெகிழ்ந்தார். 

அடுத்ததாக ஓவியா என்ட்ரீ. மேடையை முழுவதுமாக அவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார் கமல்.  எல்லாருக்கும் லவ் யூ சொல்லி மேடை முழுவதும் நடந்து மக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். ‘உள்ளே இருந்தப்போ யாருக்கும் என்னை புடிக்காதுனு நினைச்சேன். ஆனா எல்லாருக்கும் புடிச்சுருக்கு. எனக்கும் சொசைட்டிக்கும் ஏதோ ஒண்ணு இடிச்சுட்டே இருந்தது. ஆனா பிக்பாஸ்தான் எனக்கு ஒரு ஐடியா கொடுத்திருக்கு. தாங்க்யூ பிக்பாஸ். ஐ லவ் கமல் சார் ஹி இஸ் ஆசம்’ என்று சொல்லி தனது ஆஸ்தான ‘கொக்கு நெட்டை கொக்கு’ பாடலை பாடினார். செம சீனாக இருந்தது. ஆனால் பிரகாஷ்ராஜ்க்கு ‘லவ் யூ செல்லம்’ போல விஜய் சேதுபதிக்கு ‘ப்ப்ப்ப்பா’ போல போகிற இடத்திலெல்லாம் இதையே சொல்லச் சொல்லி செல்லத்தை டார்ச்சர் பண்ணுவாய்ங்களேனு நினைச்சாதான் பயந்து வருது. 

மீண்டும் மேடைக்கு வந்த கமல். ‘தமிழ்த் திரையுலகில் மீண்டும் ஒரு திருப்புமுனையில் பங்கு கொள்கிற வாய்ப்பு. இது ஒரு செய்தி மட்டுமல்ல அறிவிப்பு’ என்று சொல்லி இயக்குநர் சங்கரை மேடைக்கு அழைத்தார். இந்தியன் இரண்டாம் பாகம் எடுக்கப்போவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்கள். ‘மூணு வருசம் முன்னாடி ஒரு லைன் கிடைச்சது. தள்ளிப்போயிட்டே இருந்தது. ஆனா இதை இப்போ பண்ணியே ஆகணும்னு ஒரு உந்துதல் வந்திருக்கு’ என்று  ஒரு பெரிய அறிவிப்பை சுருக்கமாக வெளியிட்டார் சங்கர். ‘இத்தனை நட்சத்திரங்கள் முன்னால ஆறரை கோடி பேர் பார்க்க இந்த மாதிரி ஒரு ஆரம்ப விழா என் வாழ்க்கைல நடந்ததில்லீங்க’ என்றார் கமல்.

**

ஜூலியின் டான்ஸ் பெர்பாமன்ஸூக்குப் பிறகு ‘ஒரு படத்தை எடுக்கும்போது எத்தனை நாள் ஓடும்னு தெரியாது. ஆனா இது 100 நாள் ஓடும்னு முன்னாடியே ப்ளான் பண்ணி எடுத்தோம்’ என்று கமல் சொல்ல மீண்டும்  ஒரு குறும்படம் போடப்பட்டது. இத்தனைநாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைரலான, நெகிழ வைத்த, சோக, சந்தோச, சண்டை பிடித்த எல்லா தருணங்களையும் தொகுத்திருந்தார்கள். ஆரவ் ஓவியா லவ் சீனைப் பார்த்து ஓவியா சிரித்தார். சுஜாவின் அப்பா வரலைனா நான் வரேன் என்று கமல் சொன்ன காட்சியை கமல் மீண்டும் பார்த்தபோது இப்போதும் உணர்ச்சிவசப்பட்டார். ‘இது வெறும் கேம் இல்ல.. லைஃப். அதுதான் நான். வெளியே ஃபேமிலி இருக்காங்க ஆனா இவங்களும் என் ஃபேமிலிதான்’ என்று சொல்லி மீண்டும் கைதட்டல் வாங்கினார் ஓவியா. தான் பார்த்த சிறந்தபடம் பிக்பாஸ் படம் என்றார் பரணி. சக்தி தான் பெண்களை மதிப்பவன் என்று மீண்டும் சொல்லி ஓவியாவிடம் மன்னிப்பு கேட்டார். ரைஸா கலவையாக ஒரு எக்ஸ்பிரசன் கொடுத்தார். 

‘வலைதளங்களில் வேற வேலையே இல்லாம காலைல இருந்து சாயந்திரம் வரைக்கும் இதை பத்தியே பேசி எங்களை கிண்டல் பண்ணி எங்களுக்கு புகழ் சேர்த்தாங்க. அவங்களை கௌரவிக்குற விதமா அந்த ட்ரோல்ஸ், மீம்ஸெல்லாம் ஒரு குறும்படமாக’ என்று சொல்லி கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி வந்த மீம்ஸ்களை போட்டுக்காட்டினார். அவர்களைப் பற்றிய எள்ளல்களுக்கு அவர்களே சிரித்தார்கள்.

சுட்டிக்குழந்தைகளை வரவழைத்து பிக்பாஸில் புகழ்பெற்ற வார்த்தைகளைச் சொல்லி அது யார் சொன்னதுனு கண்டுபிடிக்கும் போட்டிவைத்தார் கமல். அந்த வாண்டுகள் கமல் மாதிரியே மிமிக்ரி செய்தார்கள். கமல் மாதிரி பாடினார்கள். கமலுக்கே கரெக்சன் சொன்னார்கள். பார்க்க ஜாலியாக இருந்தது. ஆனால் குழந்தைகளும் இவ்வளவு தூரம் இந்நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் எனும்போது அடுத்த சீசனில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்கணும் பிக்பாஸ் டீம்.

குழப்பம், கோபம், சந்தேகம், ரெளத்திரம், உற்சாகம்... வெல்டன் பிக்பாஸ்!  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

**

இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக சேர்த்து 76 கோடியே 76 லட்சம் ஓட்டுகள் வந்திருப்பதாகச் சொன்னார். (இதுல ஓவியாவுக்கு மட்டும் எத்தனைனு சொன்னீங்கன்னா…) ஒருவரே ஒருநாளைக்கு 50 ஓட்டுகள் போடலாம் எனும்போது ஓட்டுப்போட்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு குறைவாகத்தான் இருக்கும் என்றாலும் அந்த எண்ணிக்கையே லட்சங்களில் இருக்கும். இதுவே அதிகம்தான். ‘இதுல 10%  ஓட்டாவது போட வேண்டிய இடத்துல போட்டீங்கன்னா நல்லாருக்கும்’ என்று கமல் பஞ்ச் வைத்தார். 

தொடர்ந்து ஆர்த்தியும், காயத்ரியும் தனித்தனியாக தங்கள் டான்ஸ் பெர்பாமன்ஸ் கொடுத்தார்கள். (காயத்ரிக்கு நானும் ரௌடிதான் சாங் செலக்சன் யாரோ?). ஃபைனலிஸ்ட் நால்வரின் குடும்பத்தினரிடமும் பேசினார் கமல். சிநேகனின் அண்ணனும் பேசும்போது கண் கலங்க, ‘குடும்பமே உணர்ச்சி பிழம்பா இருக்கீங்க’ என்றார் கமல்.

அகம் டிவி வழி இறுதிகட்ட போட்டியாளர்களிடம் பேசினார் கமல்.  வழக்கம்போல ‘எப்படி ஃபீல் பண்றீங்க?’ என்று நால்வரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார் கமல். தொகுப்பாளர்களின் முதல் அஸ்திரம் அதுதானே.  ‘வயித்தை கலக்குது சார்.. வார்த்தையே வரல’ என்றார் ஹரிஷ். ‘உங்களுக்கு வார்த்தை வரல.. வார்த்தையையே தொழிலா வச்சிருக்கிற கவிஞர் என்ன நினைக்குறார்?’ என்றார் கமல். ‘மயக்கம் வந்துடும்போல’ என்று சிரித்தார் சிநேகன். போட்டியாளர்களுக்கு குடும்பத்தினரின் மெசேஜ். சொல்லிவைத்தார் போல எல்லாருமே ‘யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியே’ என்றார்கள். 

மூன்றாவது ரன்னர் அப்பை குடும்பத்தினர் உள்ளே சென்று அவர்களைக் கூட்டி வரவேண்டும் என்று சொல்ல, நிஷா  மூன்றாவது ‘ரன்னர் அப்’பான தனது கணவர் கணேஷை அழைக்க உள்ளே சென்றார். கணேஷ் தன் மனைவியைப் பார்த்த உற்சாகத்தில் கூலாக டான்ஸ் ஆடினார். வழக்கம்போல் போர்டில் பிரிவுச் செய்தி எழுதச் சொல்ல ஒரு பெரிய கட்டுரை எழுதிவிட்டு தன் மனைவியுடன் வெளியேறினார். ‘நானே உள்ள போய் கூட்டிட்டு வர்றது சந்தோசம். எப்பவோ போதும் வாய்யானு சொல்லணும்னு நினைச்சேன். எப்படி இந்த மனுஷன் இவ்ளோ பொறுமையா இருக்கார்னு சொன்னப்போ பெருமையா இருந்துச்சு’ என்றார் நிஷா.  ‘இதுவே பெரிய வெற்றி. என் மனைவியோட தியாகத்திற்கு நன்றி’ என்றார் கணேஷ். ‘நான் ஒரு படம் நடிச்சிட்டு யாராவது என்னை அடையாளம் கண்டுபுடிக்கிறாங்களானு பாத்துட்டே இருப்பேன். உங்களுக்கு அந்த புகழ் ஈசியா கிடைச்சிருக்கு’ என்று கமல் கணேஷூக்கு வாழ்த்துகள் சொன்னார். சுஜா தன் நண்பன் ஜெயிக்காததற்காக வருத்தப்பட்டார்.

**

‘ஓவியா கன்ஃபஷன் ரூமுக்கு வாங்க’ ரொம்ப நாளுக்குப் பிறகு இந்த வார்த்தைகளைக் கேட்கிறோம். (அந்த சிவப்பு நிற ஆடையில் கன்ஃபஷன் ரூமில் பிக்பாஸிடம் ‘இனிமே அந்த மாதிரி பாட்டு போடாதீங்க’ என்று அழுத ஓவியாவை நினைவிருக்கிறதா?). மேடையில் போட்டிருந்த கன்ஃபஷன் ரூம் செட்டப்பிற்கு வந்த ஓவியாவிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து கமல் படிக்கச் சொல்ல, அவர் படிக்கத் திணற, கமலே அவருக்கு டப்பிங் கொடுத்தார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று இரண்டாவது ‘ரன்னர் அப்’பை அழைத்து வரவேண்டும். அவர் பெயரைப் படிக்கப்போக வெடுக்கென்று பிடுங்கிய கமலின் ரியாக்ஸன்.. ஆண்டவரே..!

ஓவியா உள்ளே சென்று மூவரையும் கொஞ்ச நேரம் சஸ்பென்சில் வைத்து தன் பங்குக்கு பிபியை ஏற்றி இறுதியில் ஹரிஷ் என்று சொல்லி அவரை அழைத்துவந்தார். திரும்பி வரும்போது ‘எல்லாரும் ஆரவ்வா இருக்கும்னு நினைக்குறாங்க’ என்றார் ஹரிஷ். ‘ஏன் அப்படி நினைக்குறாங்க’ இது ஓவியா. ‘ஒரு இதுவா இருக்கும்னு’ ‘எது’ ‘அது’ என்று பேசிக்கொண்டது செம செம. 

மேடைக்கு வந்ததும் சாஸ்டாங்கமாக காலில் விழுந்து கமல் கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்தார் ஹரிஷ். ‘இந்த ஆம்பளை பசங்கள்லாம் இப்படி கேக்குறாங்கனுதான் மீசை தாடியெல்லாம் வச்சிருந்தேன்’ என்று நக்கலடித்தார் கமல். ரஜினி ‘கமல் 50’ நிகழ்ச்சியின் போது கமலை கலைத்தாய் இடுப்புல தூக்கி வச்சிருந்தாங்க என்று சொன்னதை நினைவுப்படுத்தி எங்களுக்கெல்லாம் கமல்தான் கலைத்தாய் என்றார்.  ‘நான் இன்னைக்கு ஜெயிச்சிருந்தா கூட சந்தோசப்பட்டிருக்க மாட்டேன் 100 நாள் உள்ள இருந்த அந்த 2 பேர்ல யாராவதுதான் ஜெயிக்கணும்னு நினைச்சேன்’ என்று தன் பெரிய மனுஷத்தனத்தைக் காட்டினார் ஹரிஷ். 

தொடர்ந்து சுஜாவின் டான்ஸ் பெர்பாமன்ஸ் வந்தது.

**

‘அந்த 2 பேரையும் நானே உள்ளே போய் கூட்டிட்டு வர்றேன்’ என்று கமல் சொல்ல.. ‘உங்களுக்காக ஒரு குறும்படம்’ என்று கமலுக்கே குறும்படம் போட்டார்கள். ‘எங்க எடுத்தீங்க’ என்று கமல் நக்கலாக கேட்க.. ‘இங்க தான்’ என்று பிக்பாஸ் பதில் சொன்ன பிறகு ‘சரி அப்போ போடுங்க’ என்றார் கமல். பிக்பாஸ் மேடையில் கமல் பேசியதையும் கொடுத்த ரியாக்ஸன்களையும் மிக நேர்த்தியாக தொடுத்திருந்தார்கள். 

‘நாற்பது வருடத்துல நாங்க சிறுக சிறுக சேமித்த கண்களை பட்டுனு பதினாலு வாரத்துல கொண்டு வந்து சேர்த்தது பெரிய பாக்யம். நீங்கள்லாம் ஃபேமிலியா இருக்குறதை பாக்குறப்போ நம்ம அப்பா அம்மா இல்லையேனு ஒரு சின்ன வருத்தம் தோன்றி மறைந்தது. காசு கொடுத்தா அழுற மாதிரி ஈசியா நடிச்சிரலாம். அழாதமாதிரி நடிக்குறதுதான் கஷ்டம். இங்க அதைத்தான் பண்ணிட்டு இருக்கேன்’ என்று நெகிழ்ந்தார் உலக நாயகன்.

ஆரவ்விடம், சிநேகனிடம் பேசியது பிக்பாஸ் குரல். ‘100 நாட்கள், 100 வேக்கப் சாங், 100 எபிசோட்.. இந்த வீட்டின் சுவர்கள் உங்கள் வாழ்க்கையை எழுதிய சுவர்கள். இதுநாள் வரை உங்களுடன் உரையாடிய இந்த குரல் விடைபெறுகிறது’ என்று சொன்னபோது நமக்கே மனதைத் துளைத்தது அந்தக் குரல். இத்தனை நாள் அதைக் கேட்டு அதன் ஆணைப்படி வாழ்ந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். ‘நீங்க கூப்டுறப்போ அம்மா கூப்பிடுற மாதிரி இருக்கும்’ என்று அழுதார் சிநேகன். சிநேகன் அழுவது புதிதல்ல ஆனால் இந்த முறை ஆரவ்வும் கண்கலங்கினார்.  கடைசியாக இந்த வீட்டில் ஆரவ் எப்போது அழுதார் என்றே நினைவில்லை. ‘என் வாழ்க்கையை மாத்தி அமைச்சிருக்கீங்க’ என்றார் ஆரவ். கமல் உள்ளே நுழைந்து ‘வீட்டுக்கு டாட்டா சொல்லிட்டு வாங்க’ என்று சொல்லி இருவரையும் அழைத்தார். சிநேகன் வீட்டு வாசலில் விழுந்து கும்பிட்டு வெளியேறினார். இருவரின் எண்ண ஓட்டங்களையும் கேட்டபிறகு கமல் தன் பிக்பாஸ் மேடையில் தன் இறுதி உரையை நிகழ்த்தினார். 

“எனக்கு இதுவரை பேச அனுமதித்ததற்கு ஆறரை கோடி நன்றி.. இது எட்டு கோடியாக மாற்ற வேண்டும் என்று ஆசை. இது முடிவல்ல துவக்கம். இந்த மேடையில் துவங்கியிருக்கிறேன். அந்த மேடையிலும் உரையாடல் தொடரும். அங்கும் வருவேன். என்னவா வருவேன்னு கேக்காதீங்க.. தொண்டர் அடிப்பொடியாக வருவேன். ஆசையில் வருவதல்ல அன்பில் வருகிறேன். ஆர்வத்தில் வருவதல்ல கடமையுடன் வருகிறேன். இந்த அன்பு அங்கும் கிடைக்கும் என்பதற்கான அச்சாரம் எனக்கு கிடைத்திருக்கிறது. இனி என்ன வேலை என்று கேட்க மாட்டேன் உங்கள் வேலைதான் என் கடமை. சினிமால நடிக்கவேணாம் சேவகம் செய்னு சொன்னா செய்யுறேன். இல்ல அதுக்கெல்லாம் நீ லாயக்கில்லைனு சொல்லிட்டா அதையும் கேட்டுக்குறேன். கைதட்டலுக்காக இதை சொல்லலை. மனதின் ஆழத்தில் இருந்து வந்த வார்த்தை. சேவையில் சாவதுதான் இந்த நல்ல கலைஞனுக்கு நல்ல முடிவு” என்று கண்கள் கலங்கினார்.

பின் பெரிய சஸ்பென்ஸூக்குப் பிறகு ஆரவ்தான் வெற்றியாளர் என்பதை அறிவித்தார். ஸ்கூல் கரெஸ்பாண்டன்ட் முதல் மக்கள் வரை எல்லாருக்கும் நன்றி சொல்லி வின்னர் ஸ்பீச் கொடுத்தார் ஆரவ். பின் கமல் ஒவ்வொருவருக்கும் புத்தகங்கள் பரிசளித்தார். ’அன்னாத்த ஆடுறார்’ பாடல் ஒலிக்க வேட்டியை மடித்துக்கொண்டு ஆட்டம் போட்டார் கமல். பிக்பாஸ் வீட்டின் விளக்குகளை அணைப்பதற்கான ‘ட்ரிகரை’ கமல் அழுத்த, ‘புதிய நபர்களுடன் தொடரும்’ என்ற அறிவிப்புடன் விளக்குகள் அணைந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சி நல்லதோ.. கெட்டதோ..  தேவையோ.. இல்லையோ.. தமிழகத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி  இத்தனை பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இதுவே முதல்முறை. பிக்பாஸ் நமக்கு சிலரை அடையாளம் காட்டியிருக்கிறது. அந்த சிலர் ‘தொகுப்பாளர்’ கமலோ.. ‘வெற்றியாளர்’ ஆரவ்வோ.. ‘மக்களின் வெற்றியாளர்’ ஓவியாவோ இல்லை. பிக்பாஸ் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் இயல்புகளையும் நமக்கே அடையாளம் காட்டியிருக்கிறது.  
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு