Published:Updated:

“வீட்ல அந்த மூணும் பண்ணலைன்னா, சென்னைல கிறுக்கு பிடிச்சிடும்!” ‘நந்தினி’ நித்யா ராம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“வீட்ல அந்த மூணும் பண்ணலைன்னா, சென்னைல கிறுக்கு பிடிச்சிடும்!” ‘நந்தினி’ நித்யா ராம்
“வீட்ல அந்த மூணும் பண்ணலைன்னா, சென்னைல கிறுக்கு பிடிச்சிடும்!” ‘நந்தினி’ நித்யா ராம்

“வீட்ல அந்த மூணும் பண்ணலைன்னா, சென்னைல கிறுக்கு பிடிச்சிடும்!” ‘நந்தினி’ நித்யா ராம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“சரியா தமிழ்ப் பேசத் தெரியாமல் 'அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சியில் நடுவரா உட்கார்ந்தேன். இப்போ, அந்த நிகழ்ச்சியின் ஃபைனலும் முடிஞ்சிருச்சு. குழந்தைகளின் திறமைகளில் வியந்துப்போனேன். தமிழும் நல்லாப் பேசக் கத்துகிட்டேன்" - புன்னகையுடன் பேச ஆரம்பிக்கிறார், நடிகை நித்யா ராம். சன் டிவி 'நந்தினி' சீரியல் நாயகியான இவர், சன் டிவி 'அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சியின் நடுவராக இருந்து நிறைவு செய்திருக்கிறார். 

“ 'நந்தினி' சீரியல்ல நடிக்க ஆரம்பிச்ச சில மாசத்திலேயே 'அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சியின் நடுவரா கூப்பிட்டாங்க. ரொம்ப சின்னப் பொண்ணான நான் நடுவரா இருக்கிறது சரியா வருமா?னு யோசிச்சேன். 'ஒரு ரசிகையா நிகழ்ச்சியைப் பார்த்து கமென்ட்ஸ் பண்ணுங்க'னு சொன்னாங்க. அப்படித்தான் நானும் வாணி போஜனும் நடுவரானோம். சும்மா சொல்லக்கூடாதுங்க. முதல் எபிசோடிலிருந்து ஃபைனல் வரைக்கும் குழந்தைகளின் திறமைகளைப் பார்த்து மெய் மறந்தோம், சிரிச்சோம், ஆனந்தத்தில் அழுதிருக்கோம். 

யோகா, ரோப் சாகசம், நெருப்பு சாகசம், டான்ஸ், பாடல் என அசால்டா நிறைய சாகங்களை குழந்தைகள் செய்துகாட்டினாங்க. அதையெல்லாம் பார்த்தப்போ, 'நாம சின்ன வயசுல என்ன செஞ்சோம்'னு ஒரு கில்டி ஃபீலிங் வரும். அடுத்த பல நாள்களுக்கும் குழந்தைகளின் திறமைதான் நினைவில் இருக்கும். வாரத்தில் ஐந்து நாள்கள் சீரியல் ஷூட்டிங் இருக்கும். அதனால் ஏற்படும் வொர்க் பிரஷர், 'அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சி செட்டுக்குள்ள நுழைஞ்சதுமே காணாமல்போய் புது உலகத்தில் உற்சாகமாக இருப்பேன்'' என்கிறார் நித்யா ராம். 

‘அசத்தல் சுட்டீஸ்' கன்னட வெர்ஷன் நிகழ்ச்சியிலும் இவர்தான் நடுவர். “ஆல்ரெடி கன்னடத்திலும் நிறைய சீரியல்ல நடிச்சிருக்கேன். அதனால், 'உதயா' சேனலிலும் நடுவரா இருந்தேன். கன்னடம் என் தாய்மொழி என்பதால், இன்னும் கம்ஃபோர்டபிளா இருந்துச்சு. யாரையும் குறைச்சு மதிப்பிட முடியாத அளவுக்கு, தமிழ் மற்றும் கன்னடக் குழந்தைகள் எல்லோருமே செம திறமைசாளிகள்தான். நிகழ்ச்சியின் ஃபைனல் எபிசோடு முடிஞ்சப்போ, குழந்தைகளைப் பிரியப்போகிறோமேனு ஃபீல் பண்ணினேன். இந்த ரெண்டு சேனல் நிகழ்ச்சியினால், எக்கச்சக்க குட்டி ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க. 

‘அசத்தல் சுட்டீஸ்' நிகழ்ச்சி தொடக்கத்திலேயே நானும் வாணி போஜனும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். நிறைய பர்சனல் விஷயங்களை ஷேர் பண்ணிக்கிட்டோம். குழந்தைகளின் திறமைக்கு மார்க் போடும்போது எங்களுக்குள்ளே குழப்பங்கள், எதிர் கருத்துகள் வரும். அதெல்லாம் செம சுவாரஸ்யமாக இருக்கும்" என்கிற நித்யா ராம், 'நந்தினி' கங்கா கேரக்டர் பற்றி சொல்லும்போது மேலும் உற்சாகமாகிறார். 

“ ‘நந்தினி’ சீரியலில் கதைப்படி தொடக்கத்தில் ரொம்பவே அமைதியான பொண்ணா வர்ற, என் உடம்புல பாம்பு ஆவி புகுந்து பலரையும் பழி வாங்கும் டெரர் கேரக்டருக்கு மாறுவேன். ஜெயிலுக்குள் பயங்கரமா ஃபைட் பண்ணி, அதிரடியாவும் நடிச்சேன். இப்போ, என் உடம்பில் பாம்பு இல்லாததால் அமைதியான பொண்ணாகிட்டேன். இப்போதான் கதைப்படி ஹனிமூன் முடிஞ்சிருக்குது. கணவருடன் கேரளாவில் சந்தோஷமான மனநிலையில் இருக்கிற மாதிரி ஷூட் போயிட்டிருக்கு. மாசத்தில் 25 நாள்கள் ஷூட்டிங்லதான் இருக்கேன். அதனால், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பக்கா மேக்கப்லதான் என்னைப் பார்க்க முடியும். சண்டே மட்டும் பெங்களூரு வீட்டுக்குப் போயிடுவேன். அம்மா கையால் திருப்தியா சாப்பிடுவேன்; நல்லா தூங்குவேன். ஃபேமிலியோடு ஜாலியா பேசிட்டு, மறுபடியும் பிரியா விடைபெற்று சென்னைக்கு வந்துடுவேன். இந்த மூணு விஷயங்களை வீட்ல பண்ணலைன்னா சென்னையில எனக்கு கிறுக்கு பிடிச்சிரும்" எனச் சிரிக்கிறார் நித்யா ராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு