Published:Updated:

''எனக்கு அந்தப் பேர் வரக் காரணமே ஆரவ்தான்'' - 'பிக் பாஸ்' காஜல்

''எனக்கு அந்தப் பேர்  வரக் காரணமே ஆரவ்தான்'' - 'பிக் பாஸ்' காஜல்
''எனக்கு அந்தப் பேர் வரக் காரணமே ஆரவ்தான்'' - 'பிக் பாஸ்' காஜல்

''எனக்கு அந்தப் பேர் வரக் காரணமே ஆரவ்தான்'' - 'பிக் பாஸ்' காஜல்

டந்த வாரம் சனிக்கிழமை முடிந்த 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வின்னர் ஆரவ். அவரை வின்னராக அறிவித்ததும், உற்சாகமாக கைக்குலுக்கி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியவர், காஜல். 'பிக் பாஸ்' வீட்டில் அவர் ரசித்த நபர்கள், சந்தித்த சவால்கள் எனப் பல விஷயங்களைப் பேசினார். 

'' 'பிக் பாஸ்' வீட்டுக்குச் சென்றுவந்த பிறகு நீங்கள் மாற்றிக்கொண்ட விஷயம் என்ன?'' 
''அந்த நிகழ்ச்சி வெளியிலிருந்து பார்க்கும்போது புதுசா இருந்துச்சு. உள்ளே போன பிறகுதான் சில விஷயங்களைப் புரிஞ்சுக்க முடிஞ்சது. அங்கே இருந்த ஒருசில பேர் ஷோவுக்கு ஏற்ற மாதிரி பேசினாங்க. எனக்கு அப்படியெல்லாம் பேச வரலை.'' 

'' 'பிக் பாஸ்' வீட்டில் நீங்க பார்த்த வித்தியாசமான விஷயங்கள் என்ன?'' 
'' 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே போன முதல் நாளே கேட்கவேண்டிய கேள்விகளைப் போட்டியாளர்களிடம் கேட்டுட்டேன். அவங்களும் திரும்ப என்கிட்டே ஏதாவது கேட்பாங்கனு நினைச்சேன். ஆனா, யாருமே கேட்கலை. 'நீ ஏன் ஓவரா பேசுறே'னு கேட்டிருக்கலாம். ஏன் கேட்கலனு தெரியல.'' 

''ஏன் எப்பவும் டான், ரவுடி மாதிரி உங்களைக் காட்டிக்கிறீங்க?'' 
''ஆரவ் பண்ண வேலைதான் அது. அவர்தான் முதல்ல என்னை 'டான்'னு கூப்பிட்டார். 'பிக் பாஸ்' வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலேயே வெளியில் நடந்த எல்லா விஷயத்தையும் எல்லார்கிட்டயும் உளறிக் கொட்டிட்டேன். உடனே, கன்ஃபெஷன் ரூமுக்கு வாங்கனு கூப்பிட்ட பிக் பாஸ், 'இனிமே வெளியில நடந்த எதையும் உள்ளே சொல்லக் கூடாது'னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். அதிலிருந்துதான் 'வந்த முதல் நாளே கன்ஃபெஷன் ரூமுக்கு போன நீங்கதான் டான்'னு ஆரவ் சொல்ல ஆரம்பிச்சார்."

'' 'பிக் பாஸ்' வீட்டில் உங்க டெரர் எதிரி யாரு?'' 
''எதிரினு யாருமே இல்லைங்க. ஒருசில பேர் மேல மட்டும் வருத்தம் இருந்தது. முகத்துக்கு நேராகச் செருப்பால அடிச்சாலும் அதை ஏத்துப்பேன். ஆனால், முகத்துக்கு முன்னாடி நல்லாப் பேசிட்டு, பின்னாடி தப்பா சில பேர் பேசியிருந்தாங்க. அதுதான் எனக்கு வருத்தம்." 

'' 'பிக் பாஸ்' வீடு பற்றி ஒரு கேப்ஷன் சொல்லுங்க'' 
''ஒரு மனிதன் ஒரு வீடு ஓர் உலகம்'' 

''ரவுடி பட்டம், ஸ்வீட்டி, டார்லிங், புத்திசாலி பட்டம் யார் யாருக்கெல்லாம் கொடுக்கலாம்?'' 
''ரவுடி பட்டம்.. வேற யாருக்கு? எனக்குத்தான். ஸ்வீட்டி பட்டம் ஓவியாவுக்கு, டார்லிங் பட்டம்னா அது ரைஸாவுக்குத்தான். பிக் பாஸ் வீட்ல புத்திசாலினா அது சினேகன்தான். அவருக்குத்தான் அந்தப் பட்டம்." 

'' 'பிக் பாஸ்' வீட்ல  ஒருசிலப் பேர் உண்மையா இல்லைனு சொன்னீங்களே...?'' 
''காயத்ரி, ரைஸா, ஓவியா, அனுயா, கணேஷ் இவங்க எல்லாம் உண்மையா இருந்தாங்க." 

''இதுக்கு முன்னாடி ஒரு பேட்டியில ஜூலியைத் திட்டுவேன்னு சொன்னீங்களே?''
"நான் பொய் சொன்னேன்கா ஒத்துக்கிறேன். அதுக்காக நீ சாகலையா உயிரோட இருக்கியேனு கேட்கிறாங்க'னு சொல்லி புலம்பினாங்க. அதுக்கப்புறமும் அவங்களைக் கஷ்டப்படுத்த எனக்கு மனசு வரல." 

'' 'பிக் பாஸ்' பைனலில் மீம் போட்டதும், உங்க ரியாக்‌ஷன் வித்தியாசமா இருந்துச்சே...'' 
''என் பேச்சு புரியலைங்கிறது தெரியுது. அதுக்காக, இந்த அளவுக்குப் புரியாமப் போயிடுச்சானு தோணிச்சு. அதையெல்லாம் ஜோவியலாவே எடுத்துக்கிட்டேன். என்னை ஓரளவுக்கு டீசன்டாவே கிண்டல் பண்ணியிருந்தாங்க. அதுவரைக்கும் தப்பிச்சேன். அதேமாதிரி மத்தவங்களுக்கு போட்ட மீம்ஸை பார்க்கும்போது வருத்தமாகவும் இருந்துச்சு!'' 

''சுஜாவிடம் மன்னிப்பு கேட்டு, ட்விட் போட்டிருக்கீங்களே...'' 
''சுஜா நிகழ்ச்சி முடிச்சு வெளியில் வந்ததும், எனக்கு போன் பண்ணாங்க. பலூன் டாஸ்கில் அடிபட்டது சும்மானு மத்தவங்க சொல்றாங்கனு சொல்லி ஃபீல் பண்ணாங்க. கூடவே, எனக்கு நிஜமாகவே அடிபட்டிருக்குனு சில போட்டோக்களை அனுப்பிவச்சாங்க. அதை போஸ்ட் பண்ண முடியுமானு கேட்டாங்க. அதனாலதான் அந்த போட்டோவைப் போட்டேன்.  'பலூன் டாஸ்கில் எல்லாரும் மைக்கை கழற்றி வெச்சுட்டுத்தான் விளையாடினோம். அப்போ, சிநேகன் தன்னை தவறாப் பேசினதா சுஜா ஃபீல் பண்ணாங்க. "

''ஆரவ் வெற்றிபெற்றதும் ரொம்ப உற்சாகமா கைக்குலுக்கினீங்களே...'' 
''டிசர்விங்கான போட்டியாளர் ஜெயிச்சது ரொம்ப சந்தோஷம். அது  ஆரவாக இருந்தாலும் சரி, கணேஷாக இருந்தாலும் சரி. அந்த வகையில் ஆரவ் வின் பண்ணது நிஜமாவே சந்தோஷம். ஏன்னா, ஆரவ் என் நண்பன். கணேஷ் வெற்றிபெற்றிருந்தாலும் சந்தோஷப்பட்டிருப்பேன். ஏன்னா, கணேஷ் ஜென்டில்மேன். 

''அந்த வீட்டில் மறக்கமுடியாத நிகழ்வாக எதைச் சொல்வீங்க?'' 
'' நான் எவிக்ட் ஆகிற அன்னிக்கு, கமல் சார் வெளியிலிருந்து உள்ளே பேசினார். அப்போ வையாபுரியும் மத்தவங்களும் என்னை 'டான் டான்'னு கிண்டல் பண்ணாங்க. கமல் சார் அதுக்கு, டான் டான்னு பதில் சொல்றதுக்காக அந்தப் பேர வச்சீங்களா'னு கேட்டார்.  அப்போ நான், 'எல்லாரும் என்னைக் கிண்டல் பண்றாங்க சார். இது வஞ்சப்புகழ்ச்சி அணி நம்பாதீங்க'னு சொன்னேன். அப்போ கமல் சார், 'தமிழ்செல்வினு பேர் கரெக்டாதான் வச்சிருக்காங்க'னு சொன்னார். என் நிஜப் பேரும் அவருக்கு தெரிஞ்சதுல ரொம்ப சந்தோஷம்."

'' காயத்ரிக்கும் சுஜாவுக்கும் என்ன ஒற்றுமை?'' 
''சுஜாகிட்ட ஹாட் வொர்க், வில் பவர் இருக்கு. காயத்ரிக்கிட்ட அவங்க தைரியமும், நேர்மையும் ரொம்பப் பிடிக்கும்."

'' 'பிக் பாஸ்' நிகழ்ச்சி முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் என்ன சொன்னாங்க?'' 
'' 'என்னடி மூஞ்சில கரியைப் பூசிட்டு வந்திருக்கே'னு சொன்னாங்க. கலாய்க்கிறாங்கனுதான் நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சுது நான் கருத்துப் போனதை சொல்லியிருக்காங்க. அதுவரைக்கும் சந்தோஷம். வெளியில், வெயிலில்தான் நிறைய டாஸ்க் வெச்சாங்க. மூஞ்சி, தீஞ்சிப் போய்ச்சு. ஏற்கெனவே கறுப்பு அதுலயும் இன்னும் கறுப்பான எப்படியிருக்கும். ஏன் எல்லாரும் சிரிச்சிட்டே இருக்கீங்க.. ஏன் யாருமே திட்டலைனு கேட்டேன். 'உன்னை காட்டினாதானே திட்டுறதுக்கு'னு என் அக்கா சொன்னாங்க." 
 

அடுத்த கட்டுரைக்கு