Published:Updated:

கேபிள் கலாட்டா!: இன்றைய செய்தி... சிக்கினார்கள் நியூஸ் ரீடர்ஸ்!

கேபிள் கலாட்டா!: இன்றைய செய்தி... சிக்கினார்கள் நியூஸ் ரீடர்ஸ்!

கேபிள் கலாட்டா!: இன்றைய செய்தி... சிக்கினார்கள் நியூஸ் ரீடர்ஸ்!

கேபிள் கலாட்டா!: இன்றைய செய்தி... சிக்கினார்கள் நியூஸ் ரீடர்ஸ்!

Published:Updated:

ரிமோட் ரீட்டா

'ரீட்டா... ஏதாச்சும் நியூஸ் கொண்டு வா ஸ்வீட்டா..!’னு காத்திருக்கிற என் அருமை சேனல் வாசகர்களே... இதோ வந்துட்டேன். சமீபத்துல, 'இன்றைய செய்திகள்’ சொல்றவங்க எல்லோரும் இணைந்த நிகழ்வுங்க அது. புரியலையா..? இந்த கெட் டுகெதர் சீஸன்ல, செய்தி வாசிப்பாளர்கள் ஒரு கெட் டுகெதர் நடத்தினாங்க. ஃபாத்திமா பாபு, சந்தியா ராஜகோபால், ஷோபனா ரவி, ரத்னா, வரதராஜன், அருணகிரி, விஜயகிருஷ்ணா உட்பட இரண்டு தலைமுறை நியூஸ் ரீடர்ஸ் பலர் கலந்துகொண்ட சந்திப்பில், சுவாரஸ்யத்துக்கா பஞ்சம்?! அவங்களோட அனுபவங்கள்தான், இந்தப் பக்கத்துல 'இன்றைய செய்திகள்’!

கேபிள் கலாட்டா!: இன்றைய செய்தி... சிக்கினார்கள் நியூஸ் ரீடர்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'நமக்குனு ஒரு தனித்துவம்!’

''நான் அங்க போனப்போ, குரூப் போட்டோவுக்கு அரேஞ்மென்ட் நடந்துட்டு இருந்தது. எல்லோரையும் ஒண்ணா சேர்த்துப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமா, ஏதோ பிறந்த வீட்டுக்குப் போன மாதிரி இருந்துச்சு ரீட்டா!''

அதே இனிப்புக் குரலில் சொன்னாங்க சீனியர் சந்தியா ராஜகோபால்.

''30 வருஷமா நியூஸ் ரீடரா இருக்கீங்க. மத்தபடி உங்களோட பொழுதுபோக்கு பத்தி...?!''

'எனக்கு நடனம் ரொம்ப பிடிக்கும். நாங்க ஒரு டான்ஸ் கேங் இருக்கோம்; நடனத்தை உடற்பயிற்சியா செய்றதுதான் எங்க பொழுதுபோக்கு. ஏன்னா, ஒரு நியூஸ் ரீடர் ஒவ்வொரு நாளும் தன்னை தோற்றத்திலும் பேச்சிலும் மெருகேத்திக்கணும். அப்போதான் நமக்குனு ஒரு தனித்துவம் இருக்கும் ரீட்டு!''

என் பேரைச் சொல்றதுலயே தெரியுதே மேடம் உங்க தனித்துவம்!

28 வருஷ அனுபவம்!

''இந்தத் துறைக்கு வேலைக்கு வந்துட்டு, 28 வருஷம் ஓடினதே தெரியல ரீட்டா. இப்போ புதுசா வந்திருக்கிற ஜூனியர்ஸை எல்லாம் பார்க்கும்போது, ரொம்ப உணர்ச்சிகரமா இருக்கு!''

- இது ஃபாத்திமா பாபு!

''நீங்க இப்பவும் இளமையா, ஜூனியர் மாதிரிதானே இருக்கீங்க?! அப்புறம்... என்ன சொன்னாங்க ஜூனியர்ஸ்?''

'எப்டி மேடம் ஃபிரெஷ்ஷாவே இருக்கீங்க?’னு கேட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் ஒரு விஷயம் சொல்லிக் கொடுத்தேன். 'எவ்வளவு வேலைகள் இருந்தாலும், இந்த நிமிஷம் செய்யுற வேலையில் மட்டும் கவனம் செலுத்தினா, அதை சிறப்பா செய்து முடிக்க முடியும். கூடவே, அந்த வேலை இழுத்தடிக்காது. அதனால, மற்ற வேலைகளையும் சுலபமா முடிச்சுடலாம்; ஃப்ரெஷ்ஷா, எனர்ஜியோட இருக்கலாம். இது மாதிரிதான் நியூஸ் ரீடிங்கும். முந்தின வரிகளில் செய்த தவறுகளை நினைச்சாலும் சரி, அடுத்த வரியைப் பற்றி யோசிச்சாலும் சரி... பேசிக்கிட்டு இருக்கும் வரிகளில் தடுமாற்றம் வரும். அதனால, என்ன வேலை பண்றீங்களோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்க. இது வாழ்க்கைக்கும், நியூஸ் ரீடிங்குக்கும் பொருந்தும்’னு சொன்னேன்!''

'அதாவது, ’பி இன் தட் மொமென்ட்’னு சொல்றீங்க. சரி, உங்க ’FABS’ டிராமா ட்ரூப் பத்தி சொல்லுங்க...'

'அதைப் பத்தியும் உனக்குத் தெரியுமா ரீட்டா! ஆரம்பிச்ச ரெண்டு வருஷமா அந்த ட்ரூப் நல்லா போயிட்டு இருக்கு. இந்த மாசம்கூட 'சேது வந்து இருக்கேன்’ என்ற டிராமா நாரதகான சபாவில் நடக்கவிருக்கு. மறக்காம வந்துடு!''

நோட் பண்ணிட்டேன் மேடம்!

''நியூஸ் வாசிக்க நிறைய ஹோம்வொர்க் செய்யணும்!''

''எல்லா நியூஸ் ரீடர்ஸுக்கும் ஒரே ஜாலிதான், இல்லை?!''னு சாந்தி மேடம்கிட்ட கேட்டா, நிதானமா பதில் சொல்றாங்க.

'இந்த கெட் டு கெதர் ஜாலிதான் ரீட்டா. ஆனா, நியூஸ் வாசிக்கிறதுங்கிறது கஷ்டமான வேலை. கையில கொடுக்குற செய்தியை அப்படியே வாசிக்கறதுல என்ன சிரமம்னு நீ நினைக்கலாம்...''

''அய்யோ, நான் அப்படியெல்லாம் நினைக்கல மேடம்...''

''அட, பேச்சுக்கு சொன்னேன் ரீட்டா. உச்சரிப்பு இதுல ரொம்ப முக்கியம். அதுக்காக நிறைய ஹோம்வொர்க் செய்வேன். பெரும்பாலும், பல மாநிலப் பெயர்களின் சரியான உச்சரிப்பையும் தெரிஞ்சுக்க, எல்லா மொழி செய்தி சேனல்களையும் பார்ப்பேன். சில நேரங்களில், வெளிநாட்டுப் பெயர்களோட உச்சரிப்புக்கு, எம்பஸிக்கும் போன் செய்து கேட்பேன். இப்படி நிறைய ரிசோர்ஸ்களை பயன்படுத்திக்குவேன்.''

'சூப்பர் மேடம். இந்த வேலையில நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் இருக்குமே..?!''

''நிறைய நிறைய. பொதிகை நேரலை செய்திகளில், கடைசி நிமிஷத்தில் கொண்டு வந்து கொடுக்கும் செய்திகளை, முகத்தில் பதற்றம் காட்டாமல் வாசிக்கணும். ஒருமுறை செய்தி வாசித்தப்போ, சேர் ஆட ஆரம்பிச்சிடுச்சு. காலை அழுத்தமா ஊன்றி ஒருவழியா வாசிச்சு முடிச்சுட்டு வந்தப்புறம்தான் தெரிஞ்சது, அது சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கம்னு! அப்படி நிலமே அதிர்ந்தாலும், நாம அலட்டிக்காம வாசிக்கணும்!''

சவாலே சமாளிதான்!

''செய்தி வாசிப்பாளருக்கு ஆர்ட்டிஸ்டிக் லுக் தேவையில்லை!''

'ரீட்டா, என்னதான் தொலைக்காட்சி நிலையத்துல கூட வேலை செய்யுறவங்களைப் பார்த்துக்கிட்டாலும், பெரிய விசாரிப்புக்கு எல்லாம் நேரம் இருக்காது. ஆனா, இந்த கெட் டுகெதர், ஒரு நாள் முழுக்க விசாரிப்புக்கான நேரத்தை தந்ததை வரமாவே நினைக்கிறேன். பழைய நினைவுகளை எல்லாம் மீட்டெடுத்தோம்!''னு பரவசம் பகிர்ந்தாங்க சௌடாமணி.

''செய்தி வாசிக்கிறதில் உங்க ஸ்டைல் என்ன மேடம்?''

'நாம வாசிக்கிற செய்திகளைத்தான் மக்கள் கவனிக்கணும், நம்ம தோற்றத்தில் அவங்க கவனத்தை திருப்பிடக்கூடாது என்பதால நியூஸ் ரீடருக்கு ஆர்ட்டிஸ்டிக் லுக் தேவையில்லைனு நினைப்பேன். பெரும்பாலும் காட்டன் புடவைகள்தான் கட்டுவேன். குரலுக்காக, எங்க போனாலும் சுடுநீர் ஃபிளாஸ்கோடதான் போவேன். கத்திப் பேசுறது, சத்தமா சிரிக்கிறதுனு ஸ்ட்ரெய்ன் கொடுத்தா, குரல் சேதமடைய வாய்ப்பிருக்கிறதால, இதுக்காகவே எப்பவும் அமைதியாதான் பேசுவேன். எல்லா செய்திகளைப் பற்றியும் முழு விவரங்களைத் தெரிஞ்சுக்குவேன். அப்போதான் நேரலை நிகழ்ச்சிகளில் வெளியூர் ரிப்போர்ட்டர்களிடம் பேசும்போது, அந்தச் செய்தி சம்பந்தப்பட்ட தகவல்களை குறிப்பிட்டுக் கேட்டுப் பெற முடியும்...''

''நோட்ஸ் எடுத்துட்டுதான் இருக்கேன் மேடம்... சொல்லுங்க...''

''அய்யய்யோ... எல்லா சீக்ரெட்டையும் சொல்லிட்டேனே! போட்டிக்கு வந்துட மாட்டியே ரீட்டா?!'

மேடம் கலாய்க்கிறாங்களாமாம்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

கேன்சர் ஆபத்து!

”ஏதோ ஒரு பவுடரை கரைத்து அதை ஊசி மூலம் தர்பூசணி பழத்தினுள் செலுத்துவதால் பழம் முழுவதும் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது. இது நம் உடலில் சேர்ந்தால் கேன்சர் வர வாய்ப்பிருக்கிறது என்பதை கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் காட்டினர். உண்ணும் பொருட்களில் இப்படி அநியாயம் பண்ணுவதை அப்பட்டமாக காட்டியதற்கு நன்றி'' என்று நெகிழ்கிறார் சிதம்பரத்தில் இருந்து என்.மகாலட்சுமி.

அநாகரிகத்தின் உச்சம்!

'குர்குரே’ விளம்பரம் ஒன்றில் பஸ்ஸில் இருந்தபடி ஒருவர் அதைச் சாப்பிட, அருகில் இருப்பவர் பங்கு கேட்க... இவர் மறுத்துவிட்டு அவசரம் அவசரமாக காலி செய்கிறார். அதன் பிறகு அருகில் இருப்பவர் அவரது விரல்களை தனது வாயில் வைத்து சப்புவது அநாகரிகம், அபத்தம்! என்னதான் விளம்பரம் என்றாலும் இது ரொம்ப ஓவர்; விரலைச் சப்பி முடித்த பிறகு இப்போது இன்னும் டேஸ்ட் என்று கூறுவது அநாகரிகத்தின் உச்சகட்டம். சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா?'' என்று வினவுகிறார் திருச்சியில் இருந்து அமுதா அசோக்ராஜா.

தள்ளாட்டம் ஏன்?

பொதிகை என தூயதமிழில் பெயர் வைத்துக் கொண்டு, அதுவும் அரசு நிறுவனமாக இருந்து கொண்டு தமிழ் எழுத்துக்களை கொலை செய்கிறார்கள். சிவராத்திரி அன்று இரவு நாட்டிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியபோது தஞ்சை பெரிய கோவில் என்பதற்கு ’பெறிய' என்று பிழையாக காட்டுகிறார்கள். தமிழில் இப்படி தள்ளாடுவது நியாயமா?'' என்கிறார் திருநெல்வேலியில் இருந்து ஆர்.மீனாட்சி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism