Published:Updated:

`எவ்வளவு நாள்தான் நல்லவளாவே நடிக்கிறது?’ - 'மஹாலட்சுமி' சீரியல் சுதா

`எவ்வளவு நாள்தான் நல்லவளாவே நடிக்கிறது?’ - 'மஹாலட்சுமி' சீரியல் சுதா
`எவ்வளவு நாள்தான் நல்லவளாவே நடிக்கிறது?’ - 'மஹாலட்சுமி' சீரியல் சுதா

`எவ்வளவு நாள்தான் நல்லவளாவே நடிக்கிறது?’ - 'மஹாலட்சுமி' சீரியல் சுதா

சன் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் 'மஹாலட்சுமி' சீரியலில், நடித்துவருபவர் சுதா. இவர் 'குலதெய்வம்' ஸ்ரித்திகாவின் சகோதரி. ''ஒவ்வொரு சீரியலில் நடிக்கும்போதும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்குது'' எனச் சிலாகிப்புடன் பேசுகிறார். 

''உங்களின் முதல் சீரியல் என்ட்ரி...'' 

''2007-ம் வருஷம் 'உறவுகள்' சீரியலில் சிஸ்டர் ரோலில் நடிச்சேன். அது ரொம்ப முக்கியமான ரோலாக பேசப்பட்டது. 'உறவுகள்' சீரியலின் முதல் காட்சியில் நான்தான் விளக்கேற்றி தொடங்கிவைப்பேன். கிட்டத்தட்ட நான்கு வருஷத்துக்கும் மேலே ஒளிபரப்பாகி ஹிட் அடிச்சது. 'இதயம்', 'செந்தூரப்பூவே', 'மருதாணி' போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடிச்சு, என் நடிப்பை மெருகேத்திக்கிட்டேன். அப்போ, நான் நடிச்சு தினமும் மதியம் இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாச்சு.'' 

''நீங்கள் தொகுப்பாளராக இருந்திருக்கிறீர்கள். அதற்கும் நடிப்புக்குமான வித்தியாசம் என்ன?'' 

''எதுவாக இருந்தாலும் அதைக் கத்துக்கிட்டு பண்ண ஆரம்பிச்சுடுவேன். பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கேன். நானும் என் தங்கை ஸ்ரித்திகாவும் ஒரே நேரத்தில் நடிப்புக்குள் நுழைஞ்சோம். இன்னிக்கு எங்களை அடையாளம் காட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கோம்.'' 

''வித்தியாசமான அனுபவத்தைத் தந்த சீரியல் பற்றி...'' 

''சன் டி.வியில் ஒளிபரப்பான 'பொன்னூஞ்சல்' சீரியலில் நெகட்டிவ் ரோல் பண்ணினேன். அதைப் பார்த்துட்டு பலரும் போன் பண்ணி பாராட்டினாங்க. எனக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் செட் ஆகாதுனு நினைச்சுட்டிருந்தேன். அந்த நினைப்பைத் தகர்த்தது 'பொன்னூஞ்சல்' சீரியல்தான். பிறகு, ஜீ தமிழில் ஒளிபரப்பான 'திருமாங்கல்யம்' சீரியலிலும் நெகட்டிவ் ரோல் வாய்ப்பு கிடைச்சது. அப்போதுதான் என் மகன் பிறந்திருந்தான். அதாவது, குழந்தை பிறக்கிறதுக்கு இருபது நாட்கள் முன்னாடி வரை ஷூட்டிங் போனேன்.'' 

''குழந்தை வளர்ப்பு, நடிப்பு இரண்டையும் எப்படி மேனேஜ் பண்ணினீங்க?'' 

''சொன்னால் நம்பமாட்டீங்க! என் மகன் ஹர்ஷன் பிறக்கிறதுக்கு முன்னாடி, சன் டி.வி 'சூப்பர் குடும்பம்' நிகழ்ச்சியில் ஃபைனல் வரைக்கும் வந்துட்டேன். ஃபைனல் நேரத்தில் டெலிவரி. குழந்தைப் பிறந்ததும் விசாரித்தால், நான் கலந்துகொண்ட டீம்தான் முதல் பரிசு வாங்கியிருந்தது. எனக்கு செம்ம ஹேப்பி. இரண்டாவதாக, எனக்கு அக்‌ஷரா என்கிற பெண் குழந்தை பிறந்தாள். அந்த சமயம் சில உடல்நலக் கோளாறுகள் காரணமாக இரண்டு வருஷம் பிரேக் எடுத்தேன். இதோ இப்போ, சன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'மஹாலட்சுமி' சீரியலில் நடிச்சுட்டிருக்கேன்.'' 

''உங்கள் கணவர், குழந்தைகள் பற்றி...'' 

''எங்களுடையது லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ். என் கணவர் சந்தீப், லாஜிஸ்டிக் வேலை பார்க்கிறார். அவர் எனக்கு முழு சப்போர்ட். நடிப்பில் நிறைய கரெக்‌ஷன்கள் சொல்லுவார். 'அப்படிப் பண்ணியிருக்கலாம், இப்படிப் பண்ணியிருந்தா நல்லா இருந்திருக்கும்'னு டிப்ஸ் கொடுப்பார். அடுத்து, என் உலகமே என் இரண்டு குழந்தைகள்தான். ஹர்ஷனுக்கு நான்கு வயசு. அக்‌ஷராவுக்கு ஒன்றரை வயசு. அப்பா, அம்மா, தங்கை என எல்லாரும் ஒரே வீட்டில் இருக்கோம்.'' 

''உங்கள் தங்கையும் உங்கள் வீட்டில்தான் இருக்காங்களா?'' 

''ஆமாம். என் மாமியார், மாமனார் இரண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. என் அம்மாதான் என் குழந்தைகளைப் பார்த்துக்கறாங்க. தங்கையைத் தனியாக விடமுடியுமா? அவளும் எங்களோடு இருக்கிறாள்.'' 

''உங்களுக்கும் உங்கள் தங்கைக்குமான புரிதல் எப்படி இருக்கு?'' 

''அவளுக்கும் எனக்கும் இதுவரை பெருசா சண்டை வந்ததாக ஞாபகமே இல்லை. பிறப்பு முதல் பல விஷயங்களில் எங்களுக்குள் ஒற்றுமை இருக்கு. இரண்டு பேருமே ஜனவரி மாசத்தில் பிறந்தோம். நான் காலை ஆறு மணிக்குப் பிறந்தேன். என் தங்கை மாலை ஆறு மணிக்குப் பிறந்தாள். இரண்டு பேருக்கும் ராசியான எண் நான்கு. எங்களுக்குள் பொறாமையோ, போட்டியோ இல்லை. யார் எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அதைப் பார்த்துச் சந்தோஷப்பட்டுக்குவோம். முதல் பாராட்டு எங்களுக்குள்தான் இருக்கும்'' என்கிற சுதா, சினிமாவில் நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்கத் தயாராக இருக்கிறார். 

அடுத்த கட்டுரைக்கு