Election bannerElection banner
Published:Updated:

‘இந்த ஹெவன் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!’ - ‘கிச்சன் கலாட்டா’ ஃபரீனா ஆசாத்

‘இந்த ஹெவன் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!’ - ‘கிச்சன் கலாட்டா’ ஃபரீனா ஆசாத்
‘இந்த ஹெவன் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!’ - ‘கிச்சன் கலாட்டா’ ஃபரீனா ஆசாத்

‘இந்த ஹெவன் ஏஞ்சலுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு!’ - ‘கிச்சன் கலாட்டா’ ஃபரீனா ஆசாத்

ன் டி.வி 'கிச்சன் கலாட்டா' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர், ஃபரீனா ஆசாத். அந்த நிகழ்ச்சி பிறகு, 'செல்பிரிட்டி இன்டர்வியூ', 'சினிமா ஸ்பெஷல்' போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக அசத்தினார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென 'எனக்குக் கல்யாணம்' என அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு, அவரது ரசிகர்களைப் பதறவைத்தார். தற்போது, சொன்னபடியே அவரது திருமணம் கோலாகலமாக நடந்துமுடிந்துள்ளது. தன் காதல் கணவரைக் கைப்பிடித்த சந்தோஷத்தில் நம்மிடம் பேசினார். 

''ஒரு வழியாகப் போராடி கல்யாணத்தை முடிச்சுக்கிட்டீங்க போல...'' 

''அட ஆமாங்க. எவ்வளவு கனவுகள் இருந்துச்சு தெரியுமா? அத்தனையும் இப்போ நிறைவேறியிருக்கு. ஃபரீனா ஹேப்பி அண்ணாச்சி. நான் மட்டுமில்லே, என் ஃபேமிலி மற்றும் ரஹ்மான் ஃபேமிலியும் ஹேப்பியா இருக்காங்க. சன் டி.வி புரோகிராம் எடிட்டரா ரஹ்மான் இருந்ததாலும், நான் தொகுப்பாளினியா இருந்ததாலும் இரண்டு பக்கத்திலிருந்து எக்கசக்கமான ஆள்கள் கல்யாணத்தில் கலந்துக்கிட்டு ஜமாய்ச்சுட்டாங்க. 'ஹெவன் ஏஞ்சல்'னுதான் ரஹ்மான் என்னை சொல்லிட்டிருப்பான். இப்போ, அந்த ஹெவன் ஏஞ்சல்கூட சேர்ந்தாச்சு. மாப்பிள்ளை வெட்கப்படுறதையும் நீங்க பார்த்திருக்கணும்.'' 

''உங்கள் மேரேஜில் என்ன ஸ்பெஷல்?'' 

''ஏகப்பட்டது பண்ணியிருந்தோம். எல்லாமே ஸ்பெஷல்னு சொல்லலாம். முதல் நாள் (அக்டோபர் 20) மெஹந்தி ஃபங்ஷன் நடந்துச்சு. என் தோழிகள் நிறைய பேர் வந்திருந்தாங்க. மெஹந்தி போடறது, டான்ஸ் ஆடறது, பாட்டுப் பாடறது என எல்லோரும் சேர்ந்து அந்த இடத்தையே அதகளம் பண்ணிட்டோம். மெஹந்தி செலிபிரேஷன் முடிஞ்சதும் ஃபோட்டோ எடுத்துட்டு எல்லோரும் கிளம்பிட்டாங்க. அடுத்த நாள் பள்ளிவாசலில் நிக்காஹ் நடந்துச்சு. அங்க ஒரு மணி நேரத்தில் முடிஞ்சிருச்சு. மூன்றாவது நாள் ரிசப்ஷன். ரிசப்ஷனுக்குத்தான் அத்தனை பிரபலங்களும் நெருங்கிய வட்டாரமும் வந்திருந்தாங்க.'' 

''மேரேஜுக்கு நிறைய கிஃப்ட் வந்திருக்குமே அதுபற்றி...'' 

''குட்டி குட்டியா நிறைய கிஃப்ட் வந்திருந்துச்சு. முதல்ல அதையெல்லாம் பார்த்துட்டு, அப்புறமா பெரிய கிஃப்டுகளைப் பிரிக்கலாம்னு முடிவுப் பண்ணினேன். பிரிக்க ஆரம்பிச்சால் அத்தனை ஆச்சரியம். குட்டிக் குட்டி கிஃப்ட்லேயே தங்க மோதிரங்கள். பத்து விரல்களில் போட்டும் எக்ஸ்ட்ராவா இருந்துச்சுன்னா பார்த்துக்கோங்க. இன்னும் சில பேர் எனக்கு ஃபோட்டோ பிரேம் பிடிக்கும்னு, விதவிதமான ஃபோட்டோ பிரேம்களாக பிரசன்ட் பண்ணியிருக்காங்க. என் தம்பி, சின்ன வயசிலிருந்து இப்போ வரைக்கும் இருக்கிற ஃபோட்டோ கலெக்‌ஷனை அழகா கிஃப்ட் பண்ணியிருந்தான். இத்தனைக்கும் அவன் எட்டாவதுதான் படிக்கிறான். நான் எதிர்பாக்காதவங்க எல்லாம் மேரேஜுக்கு வந்திருந்தாங்க. 'காதலில் சொதப்புவது எப்படி' அர்ஜூன், ராஜ்கமல், லதாராவ், சுபாஷ், சுமையா, சசி, ராஜ் டி.வி ஆங்கர்ஸ், கனா காணும் காலங்கள் டீம், ஜானகி அக்கா என பெரிஅய் கூட்டம் வந்து சந்தோஷத்தில் திக்குமுக்காட வெச்சிருச்சு.'' 

“மேரேஜ் விருந்து பற்றி...'' 

“அட... அதில் மட்டும் சும்மா விடுவோமா? எப்பவும் ஃபேவரைட்டான பிரியாணியில் ஆரம்பிச்சு, பல வெரைட்டி இருந்துச்சு. மேரேஜ் முடிச்ச கையோடு பல உறவினர் வீடுகளுக்கு விருந்துக்குப் போனோம். செம்மையா கவனிச்சாங்க. ஒரு வீட்டில் சாப்பிட்டதுக்கே நெஞ்சு வரைக்கும் நிரம்பிடுச்சு. இன்னும் நிறைய ரிலேஷன் வீட்ல கூப்பிட்டிருக்காங்க. பார்ப்போம். கொஞ்சம் அதிகமா சாப்பிட்டாலே ஊதிப்போயிருவேன். இப்போ என்ன ஆவேன்னு தெரியலை. எப்படி இருந்தாலும் நாளைக்கு ஷூட்டிங் கிளம்பிடணும். கடமை முக்கியமில்லையா?'' என்கிறார் ஃபரீனா ஆசாத்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு