Election bannerElection banner
Published:Updated:

“25 வருஷமா விஜய்க்கு ஃப்ரெண்டா இருக்குறது அவ்ளோ ஈஸி இல்ல!” - ப்ரீத்தி சஞ்சீவ்

“25 வருஷமா விஜய்க்கு ஃப்ரெண்டா இருக்குறது அவ்ளோ ஈஸி இல்ல!” - ப்ரீத்தி சஞ்சீவ்
“25 வருஷமா விஜய்க்கு ஃப்ரெண்டா இருக்குறது அவ்ளோ ஈஸி இல்ல!” - ப்ரீத்தி சஞ்சீவ்

“25 வருஷமா விஜய்க்கு ஃப்ரெண்டா இருக்குறது அவ்ளோ ஈஸி இல்ல!” - ப்ரீத்தி சஞ்சீவ்

"நான் லீடாக நடிச்ச சன் டிவி 'பொம்மலாட்டம்' சீரியல் முடிஞ்சதும், நடிப்புக்கு பிரேக் கொடுத்திருக்கேன். இப்போ, ஃபேமிலியோடு நிறைவாக நேரத்தைச் செலவிட முடியுது" - புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் ப்ரீத்தி சஞ்சீவ். 

"எதுக்கு நடிப்புக்கு பிரேக் எடுத்திருக்கீங்க?'' 

"2002-ம் வருஷம் பாலசந்தர் சாரின் சீரியலில் அறிமுகமானேன். தொடர்ந்து பல சீரியல்களில் நடிச்சேன். விஜய் டிவியின் 'ஜோடி நம்பர் 1' டைட்டில் வின்னராகவும் வந்தேன். எனக்கு லயா மற்றும் ஆதவ்னு ரெண்டு பிள்ளைகள். கணவர் சஞ்சீவும் பிஸியா நடிச்சுட்டு இருக்கிறதால், குழந்தைங்களைப் பார்த்துக்க வேண்டிய சூழல். தொடந்து நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் நடிப்புக்கான வாய்ப்புகள் வருது. அதையெல்லாம் தற்காலிகமா நிறுத்தி வெச்சிருக்கேன்.'' 

"இப்போ ஃபேமலியோடு மட்டும்தான் நேரத்தைச் செலவிடுறீங்களா?"

"இல்லைங்க. மூணு வயசுல கிளாஸிக்கல் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். நடிச்சுட்டிருந்த சமயத்திலயே சின்ன அளவில் டான்ஸ் கிளாஸ் எடுத்துட்டிருந்தேன். இப்போ, என் ஸ்டூடண்ட்ஸ் பலரும் அரங்கேற்றம் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டாங்க. இப்போ குடும்பத்தைக் கவனிச்சுக்கிறதைத் தவிர்த்து, ஈ.சி.ஆர்ல இருக்கும் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் 'சமர்பணா' என்கிற பெயரில் டான்ஸ் கிளாஸ் எடுத்துட்டிருக்கேன். நிறைய பேர் கத்துக்கிறாங்க." 

"கணவருக்கு எந்த அளவுக்கு சப்போர்டிவா இருக்கீங்க?" 

"நடிப்பு பாண்டிங் முழுசா என்னை விட்டுப்போகலை. சஞ்சீவ் தொடர்ந்து பிஸியா நடிச்சுட்டுதான் இருக்கார். கல்யாணமான புதுசுல அவர் நடிப்பைப் பற்றி விளையாட்டா கமென்ட்ஸ் சொல்வேன். 'நீயும் சவாலான ரோல்ல நடிச்சுப் பார். அப்போ தெரியும்'னு சொல்வார். நானும் வெரைட்டியான கேரக்டர்களில் நடிச்சேன். தினமும் பொழுது விடிவதிலிருந்து தூங்குற வரை பரபரப்பா எங்க பயணம் ஓடிட்டிருக்கும். ஆனாலும், குடும்பத்துக்கான நேரத்தைச் சரியா ஒதுக்கிடுவோம். குழந்தைகளோடு அவுட்டிங், வருங்காலம் பற்றின டிஸ்கஸ் என நிறைய விஷயங்களைச் செய்வோம். அவருக்கு ரெடிமேட் டிரஸ்ஸையே வாங்க மாட்டேன். பல வருஷங்களாக அவருக்கான டிரஸ்ஸை நான்தான் டிசைன் பண்றேன். நானும் அவரும் சேர்ந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு. ஏன் அப்படி யாருமே கூப்பிடலை?னு எனக்குள்ளயே கேட்டுப்பேன்." 

"சஞ்சீவ் ரொம்ப வேகமா டயலாக் பேசுவாரே, அதுக்காகப் பயிற்சி எடுப்பாரா?" 

"ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் சீரியல்களில் ரொம்ப நீளமான டயலாக்கை முகபாவனைகளோடு சிங்கிள் டேக்ல பேசி கைதட்டல் வாங்கறது அவர் வழக்கம். ஸ்பெஷல் பயிற்சி எதுவும் எடுக்க மாட்டார். தான் பேசப்போகும் டயலாக் என்கிட்ட பற்றி டிஸ்கஸ் பண்ணுவார். வீட்டுல ரொம்பவே கம்மியாதான் பேசுவார். இப்போ, என் பொண்ணு என்கிட்ட டான்ஸ் கத்துக்கிறாள். என்னோட கணவருக்கும், நானே டான்ஸ் சொல்லித்தரணும்னு எனக்கு ஆசை உண்டு. ஆனா, பலருக்கும் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அவர் சூப்பர் டான்ஸர். அதை ஜீ தமிழின் 'ஜீ டான்ஸ் லீக்' நிகழ்ச்சியிலேயே பார்க்கலாம். காலேஜ் படிக்கிறப்போ நடிகர் விஜய் அண்ணாவும், அவரும் நிறைய கல்சுரல் ஈவன்ட்ஸ்ல டான்ஸ் ஆடியிருக்காங்க." 

“கணவருக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் வரலைனு மனைவியா உங்களுக்கு வருத்தம் உண்டா?” 

“நடிப்பு மற்றும் டான்ஸ்ல அவர் திறமைசாலி என்பது ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும். சில படங்களில் நடிச்சிருக்கார். ஆனால், அவர் திறமைக்கான வெள்ளித்திரை வாய்ப்புகள் இன்னும் வரலைனு ஒரு ஆர்டிஸ்டா எனக்கு ஆதங்கம் உண்டு. சீக்கிரமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும்னு நம்புறேன். அவர் சின்னத்திரையில் தொடர்ந்து டாப்ல இருக்கிறதை நினைச்சு ஒரு மனைவியா சந்தோஷப்படுறேன்." 

"நடிகர் விஜய் ஃபேமிலி உடன் உங்க ஃபேமிலி பாண்டிங் பற்றி சொல்லுங்கள்..." 

“என் கணவர் சஞ்சீவும் விஜய் அண்ணாவும் 25 வருட நண்பர்கள். எங்க பசங்க, 'விஜய் மாமா, சங்கீதா அத்தை'னு அவங்க மேலே உயிரையே வெச்சிருக்காங்க. விஜய் அண்ணாவின் குழந்தைகளும் 'அத்தை, மாமா'னு எங்க மேலே உயிரை வெச்சிருக்காங்க. எங்க ரெண்டு பேரின் வீடுகளும் பக்கத்துலதான் இருக்குது. அடிக்கடி சந்திச்சுப்போம். ஒரே காலக்கட்டத்தில்தான் என் கணவரும் விஜய் அண்ணாவும் சினிமா ஃபீல்டுக்குள் வந்தாங்க. விஜய் அண்ணா வெள்ளித்திரையிலயும், என் கணவர் சின்னத்திரையிலயும் டாப் ஆர்டிஸ்ட்டா இருக்காங்க. ரெண்டு பேருமே பல சவால்களைச் சந்திச்சுதான் இந்த நிலைக்கு உயர்ந்திருக்காங்க. அவங்களுக்கு ஃப்ரெண்ட்ஷிப் பொக்கிஷம் மாதிரி. அதனால தொடர்ந்து அவங்க ஃப்ரெண்ட்ஷிப்ல அன்பு அதிகரிச்சுகிட்டே இருக்குது. அதைப் பார்த்து நான் பூரிச்சுப்போறேன்." 

" 'மெர்சல்' படம் பார்த்தாச்சா?" 

"நான் முதல்ல விஜய் அண்ணா ரசிகை. அதுக்கப்புறம்தான் அவரின் உடன்பிறவா தங்கச்சி. அவர் படம் ரிலீஸாகும்போதெல்லாம் பெரும்பாலும் ரெண்டு ஃபேமிலியும் சேர்ந்தே பார்போம். ஆனா, இந்த முறை படம் ரிலீஸான முதல் நாளே எங்க ஃபேமிலியோடு மட்டும்தான் பார்த்தோம். படம் செமையா இருந்துச்சு. சீக்கிரமே அண்ணா ஃபேமிலியுடன் சேர்ந்தும் ஒருமுறை பார்ப்போம்" எனப் புன்னகைக்கிறார் ப்ரீத்தி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு