Published:Updated:

''ஹலோ மக்களே... இப்படி என்னை முகத்துல துணியைக் கட்ட வெச்சுட்டீங்களே!'' - 'அழகிய தமிழ்மகள்' உஷா

''ஹலோ மக்களே... இப்படி என்னை முகத்துல துணியைக் கட்ட வெச்சுட்டீங்களே!'' - 'அழகிய தமிழ்மகள்' உஷா
''ஹலோ மக்களே... இப்படி என்னை முகத்துல துணியைக் கட்ட வெச்சுட்டீங்களே!'' - 'அழகிய தமிழ்மகள்' உஷா

''ஹலோ மக்களே... இப்படி என்னை முகத்துல துணியைக் கட்ட வெச்சுட்டீங்களே!'' - 'அழகிய தமிழ்மகள்' உஷா

ஜீ  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  'அழகிய தமிழ்மகள்' சீரியலில் வெகுளியான காமெடி கேரக்டரில் கலகலக்கவைக்கும் உஷா சாய், 18 வருடங்களாக சின்னத்திரையில் நடித்துவருகிறார். 'படிப்பிலும் நான் டாப்' என்று பெருமிதமாக சொல்லும் அவரோடு ஒரு கலகல இண்டர்வியூ... 

''அடேங்கப்பா 18 வருடங்கள்... பிறந்ததுமே ஆஸ்பத்திரியிலிருந்து நேரா செட்டுக்கு வந்துட்டீங்களா?'' 

''ஹா... ஹா... என் அப்பாவுக்குச் சினிமாத்துறையில்தான் வேலை. என் மூணு வயசுல அப்பாவின் ஃப்ரெண்ட் ஒருத்தர் என்னைப் பார்த்துட்டு, ஒரு சீரியலுக்குக் கேட்டார். அப்படித்தான் கேமரா முன்னாடி நான் வந்தேன்.'' 

''உங்க சொந்த ஊர் எது?'' 

''என் சொந்த ஊர் விசாகப்பட்டினம். அப்பாவின் வேலைக்காகச் சென்னையில் செட்டில் ஆகிட்டோம். அம்மாதான் எனக்கு ஃபுல் சப்போர்ட். நான் பி.காம் செகண்டு இயர் படிக்கறேன். என் தம்பி பதினொன்றாம் வகுப்புப் படிக்கிறான். அளவான அழகான ஃபேமிலி.'' 

'' 'அழகிய தமிழ்மகள்' சீரியலில் பின்னியெடுத்துட்டு இருக்கீங்களே. எப்படி வந்துச்சு இந்த வாய்ப்பு?'' 

''முதல்ல பாராட்டுக்கு தேங்க்ஸ். சீரியலின் அந்த ரோலில் காமெடியும் பண்ணனும்; ரொம்ப எமோஷனலும் ஆகணும். ஹீரோயினோடு சேர்ந்து டிராவல் பண்ணும் கேரக்டர். ரொம்ப என்ஜாய் பண்ணி நடிக்கிறேன். ஆனால், ஒண்ணு தெரியுமா? எனக்கு இயற்கையிலேயே கொஞ்சம் ஹியூமர் சென்ஸ் இருக்குன்னாலும், 'அழகிய தமிழ்மகள்' வாய்ப்பு வந்தபோது, இந்த ரோலை சரியாப் பண்ண முடியுமானு தெரிலை. வேண்டாம்னு சொல்லிட்டேன். டைரக்டர் கவிதா பாரதி, 'உன்னால் நிச்சயம் சிறப்பாப் பண்ண முடியும்'னு உற்சாகப்படுத்தினார்.'' 

''இப்போ அந்த ரோல் பிடிச்சுப்போச்சா?'' 

''நல்லா கேட்டீங்க. என் 18 வருஷ அனுபவத்தில் இப்போதான் வித்தியாசமாப் பண்ணியிருக்கேன். இது ரொம்ப சேலஞ்சிங்கா இருக்கு. மக்களிடம் பேசப்படும் கேரக்டராவும் மாறியிருக்கு. 'பரவாயில்லையே... எனக்கு இந்த அளவுக்கு நடிக்கத் தெரியுதே'னு நினைச்சு சந்தோஷப்படறேன்.'' 

''ஆனால், திடீர்னு கொஞ்ச நாள் சீரியலுக்கு பிரேக் விட்டுட்டு காணாமல் போய்ட்டீங்களே ஏன்?'' 

''ஆமாம். சில காரணங்களால் கொஞ்ச வருஷம் தொடர்ந்து நடிக்கலை. பிரேக் விட்டு 'தெய்வமகள்' சீரியலில் ரீ- என்ட்ரி கொடுத்தேன். தேடிப்பிடிச்சு என்னைத் தேர்வுசெய்ததுக்காக விகடனுக்கு நன்றி சொல்லணும். அழகிய தமிழ் மகள் மாரியைப் பார்த்த என் ப்ரெண்ட்ஸ் சொன்ன கமென்ட் என்ன தெரியுமா? சிரிப்பு சிரிப்பா வருதாம். இந்த 'மாரி' கேரக்டர் நிறையப் பேருக்குப் பிடிச்சிருக்கு. ஒருதடவை ஷாப்பிங் போயிருந்தேன். என்னைப் பார்த்துட்டு அங்கே இருக்குறவங்க எல்லாரும் ரவுண்டு கட்டி அன்பான விசாரிப்பால் திணறடிச்சாங்க. அங்கே வேலை பார்க்கிரவங்களும் உட்காரவெச்சு, ஒவ்வொரு டிரெஸ்ஸா எடுத்துவந்து காட்டி திக்குமுக்காட வெச்சுட்டாங்க. அதிலிருந்து ஷாப்பிங்கே போகவே கூச்சமா இருக்கு. அப்படியே போனாலும், முகத்தில் துணியைக் கட்டிட்டுதான் போறேன்.'' 

''பாபுலாரிட்டி வந்துட்டாலே சில விஷயங்களை மிஸ் பண்ணவேண்டியிருக்குமே...'' 

''உண்மைதான். ஃபேமிலியோடு இருக்கும் நேரம் குறையறதை அடிக்கடி ஃபீல் பண்ணியிருக்கேன். குறிப்பா, ஷீட்டிங் சமயத்தில் என் அம்மாவை ரொம்பவே மிஸ் பண்றேன்.'' 

''குழந்தையிலிருந்து நடிக்கிறீங்களே படிப்புல எப்படி?'' 

''அதிலும் விட்டுக்கொடுக்கறதில்லை. ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துருவேன். நல்லாப் படிக்கிற பொண்ணுனு நான் கிளாஸுக்கே போகாமல் இருந்தாலும் திட்டாமல் ஸ்பெஷலா சொல்லித்தருவாங்க.'' 

''அடிக்கடி அடம்பிடிச்சு வாங்கும் பொருள் என்ன?'' 

''எனக்கு விதவிதமா டிரெஸ் போடுறது பிடிக்கும். டிரெஸ் வேணும்னு அம்மாகிட்ட அடம்பிடிப்பேன். அதுக்கு அடுத்து, செப்பல். இந்த ரெண்டும் என்னுடைய ஃபேவரைட்.'' 

''சின்னத்திரையிலேயே இருந்துடறதா முடிவுப்பண்ணிட்டீங்களா. சினிமா பக்கம் எப்படி?'' 

'' 'கோலி சோடா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துச்சு. அம்மா வேணாம்னு சொல்லிட்டாங்க. ஏன்னா, எனக்கு நெருக்கமாக நடிக்கிறது பிடிக்காது. என் ஃபேமிலிக்கும் சின்னத்திரைதான் பிடிக்கும். அதனால், வெள்ளித்திரை ஆர்வம் இல்லை. 'தெய்வமகள்', 'அழகிய தமிழ்மகள்' சீரியல்கள் போயிட்டிருக்கு. தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடிச்சு மக்கள் மனசில் ஸ்ட்ராங்கா நிற்கணும்.'

அடுத்த கட்டுரைக்கு