Published:Updated:

“எனக்குக் கணவரா வரப்போறவர் செம்ம கேரிங்..! - ‘ராஜா ராணி’ ஷப்னமுக்கு நிக்காஹ் #VikatanExclusive

“எனக்குக் கணவரா வரப்போறவர் செம்ம கேரிங்..! - ‘ராஜா ராணி’ ஷப்னமுக்கு நிக்காஹ் #VikatanExclusive
“எனக்குக் கணவரா வரப்போறவர் செம்ம கேரிங்..! - ‘ராஜா ராணி’ ஷப்னமுக்கு நிக்காஹ் #VikatanExclusive

“எனக்குக் கணவரா வரப்போறவர் செம்ம கேரிங்..! - ‘ராஜா ராணி’ ஷப்னமுக்கு நிக்காஹ் #VikatanExclusive

ன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் ‘தெய்வமகள். இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை என எல்லோரிடமும் பிரபலமான இந்த சீரியலின் முக்கியக் கதாபாத்திரமாக இருப்பவர்கள் வாணி போஜன், கிருஷ்ணா மற்றும் ரேகா குமார். இந்த சீரியலில் சத்யாவாக வரும் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. வாணி போஜனுக்காகவும், காயத்ரி கதாபாத்திரத்துக்காகவும் இந்த சீரியலை தொடர்ந்து பல ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அப்படிப் பிரபலமான இந்த சீரியலில் சத்யாவின் தங்கையாக நடித்திருப்பவர் ஷப்னம். இவருக்குச் சமீபத்தில் சென்னையில் உள்ள கிளப் ஹவுஸ் ஒன்றில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த விழாவுக்கு ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்துவரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்கள். வரும் 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிக்காஹ் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஷப்னமிடம் இதுகுறித்துப் பேசினேன்.

'அவர் பெயர் ஆர்யன். ஒரு ஐடி கம்பெனியோட எம்.டியா இருக்கார். செம்ம கேரிங் டைப். கடந்த செப்டம்பர் மாதம்தான் நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சது. வரும் பிப்ரவரி மாதம் நிக்காஹ்வுக்குப் பிளான் பண்ணியிருக்கோம். நிக்காஹ்வுக்குப் பிறகு நடிப்பேனானு இனிமேல்தான் முடிவு பண்ணனும். இப்போ வரைக்கும் வீட்ல சினிமாவுக்கு நோ, சீரியலுக்கு யெஸ்னு சொன்னபடி நடந்துட்டு வர்றேன். 

ஆரம்பத்துல நடிப்புக் கத்துக்கிறதுக்குள்ள போதும்போதும்னு ஆகிடுச்சு. சன் டி.வியின் 'வசந்தம்' சீரியலில் என்ட்ரி கொடுத்து, 'தெய்வமகள்' சீரியலில் சமர்த்தான பொண்ணு கேரக்டர்ல நடிச்சுட்டிருந்தேன். இப்ப, விஜய் டி.வியின் 'ராஜா ராணி' சீரியலில் வில்லியா நடிச்சிட்டிருக்கேன். எனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும். சின்ன வயசிலிருந்து நல்லா டான்ஸ் ஆடுவேன். நான் பிறக்கும்போதே கால்களை ஆட்டிக்கிட்டே பிறந்ததாகச் சொல்வாங்க (ஹய்யோ... சும்மானாச்சுக்கும் சொன்னேன்). சின்ன வயசுல நிறைய எக்ஸ்பிரஷன்ஸ் காண்பிப்பேனாம். அதனாலதானோ என்னவோ இப்போ நடிப்புக்கு வந்துட்டேன். 'கலைஞர்' டி.வியில் ஒளிபரப்பான 'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சிக்குப் போனபோதுதான் எனக்கு வி.ஜே வாய்ப்புக் கிடைச்சது. முதல் வாய்ப்பை முதல் நாள் ஷூட்டிங்ல சொதப்பினதை இப்பவும் என்னால மறக்க முடியல. டைரக்டரைப் படாதபாடு படுத்திட்டேன். அந்த ஷோவுல என்னைப் பார்த்துட்டுதான் 'வசந்தம்' சீரியலில் நடிக்க கூப்பிட்டாங்க''

''அதுக்குப் பிறகு 'தெய்வமகள்' சீரியலில் வாய்ப்புக் கிடைச்சது. அந்த சீரியல்ல ரொம்ப ரசிச்சு நடிச்சேன். 'தெய்வ மகள்' சீரியல்ல என்னோட மாமியாரா வர்ற சபீதா ஆனந்துக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை நடக்கிற மாதிரி சீன் வரும். சீரியலையும் தாண்டி, நிஜத்திலும் நாங்க அப்படித்தான் இருப்போம்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. அந்த கெமிஸ்ட்ரி, நினைப்பே சீரியல்ல எங்களை சக்சஸ்ஃபுல் ஜோடியா காட்டுது.

'தெய்வ மகள்' சீரியல் ஆரம்பத்துல அத்தையான சபீதா ஆனந்த் கொடுமைகளைத் தாங்கிகிட்டு இருக்கிற மாதிரி நடிச்சப்போ, 'ஏம்மா மாமியார் கொடுமையைச் சகிச்சுகிட்டு இருக்க'னு திட்டினவங்க... ஒருகட்டத்துல நீயும் அவங்களைக் கஷ்டப்படுத்தும்மானு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நிஜம் என்னன்னா... நிஜத்துல நாங்க ரெண்டு பேரும் அவ்வளவு குளோஸா இருப்போம். எங்களோட பர்சனல் விஷயங்களை ஷேர் பண்ணிக்கிறது வரைக்கும் செம எக்ஸ்ட்ரீம் அன்புல இருப்போம். ஸ்க்ரீன்லதான் நாங்க வில்லிகள். நிஜத்துல அன்புத் தங்கங்கள் நம்புங்க பாஸ்" என்று கண்ணடித்தார்.

சரி கல்யாணக் களை முகத்துல அப்பட்டமா தெரியுதே... பர்சேஸ் ஆரம்பிச்சாச்சா மேடம் என்றால் ''அட இல்லப்பா. அதெல்லாம் அப்பா அம்மா பார்த்துப்பாங்க. அதுக்கு இன்னும் நாள் இருக்கே. அவர் ஃபாரீன்க்குப் போயிருக்கார். வந்தவுடனே சேர்ந்து பர்சேஸ் ஆரம்பிச்சிர வேண்டியதுதான்'' என்று கண்கள் சுருங்க அழகாகச் சிரிக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு