Published:Updated:

“சீரியல் டைரக்டரா புது அவதாரம் எடுத்திருக்கேன்” - கலா மாஸ்டர் #VikatanExclusive

“சீரியல் டைரக்டரா புது அவதாரம் எடுத்திருக்கேன்” - கலா மாஸ்டர் #VikatanExclusive
“சீரியல் டைரக்டரா புது அவதாரம் எடுத்திருக்கேன்” - கலா மாஸ்டர் #VikatanExclusive

“சீரியல் டைரக்டரா புது அவதாரம் எடுத்திருக்கேன்” - கலா மாஸ்டர் #VikatanExclusive

“டான்ஸர், மாஸ்டர், ரியாலிட்டி நிகழ்ச்சி இயக்குநர் பயணங்களைத் தொடர்ந்து, இப்போ இயக்குநராகப் புது அவதாரம் எடுத்திருக்கேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் டான்ஸ் மாஸ்டர் கலா. கலைஞர் டிவியில் புதிதாக ஒரு சீரியலை இயக்கிக்கொண்டிருக்கிறார்.

"உடல் எடையைக் கணிசமாகக் குறைச்சுட்டீங்கபோல..." 

“ஆமாம். 12 வயசிலிருந்து சினிமாவில் ஓய்வில்லாம இரவு பகலா உழைச்சேன். காலை டிபனை மதியமும், மதியச் சாப்பாட்டை சாயங்காலமும், டின்னரை நைட்டு 12 மணிக்கும்தான் சாப்பிடுவேன். 20 வயசுல ரொம்ப ஒல்லியா இருந்தேன். எல்லா ஸ்டார்ஸும் 'ஒல்லிக்குச்சி கலா'னுதான் என்னைக் கூப்பிடுவாங்க. சாப்பாட்டு விஷயத்தில் கவனக்குறைவா இருந்ததன் விளைவாக, தைராய்டு மற்றும் உடல் எடை பருமன் பிரச்னை ஏற்பட்டுச்சு. முதுகுவலி, மூட்டுவலி அதிகமாச்சு. வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தமுடியாமல் சிரமப்பட்டேன். அதனால், டயட் இருக்க ஆரம்பிச்சேன். மூணு முறை சரியா கடைப்பிடிக்க முடியலை. கடந்த ஏப்ரல் மாசம் 78 கிலோ எடை இருந்தேன். முதல் நாலு வாரத்துக்கு எந்தத் திட உணவும் சாப்பிடலை. லிக்விட் ஃபுட் மட்டும்தான். யோகா, நடைப்பயிற்சி, ஹெவி உடற்பயிற்சி செய்ய ஆரம்பிச்சேன். இப்போ 59 கிலோ இருக்கேன். உடல் ரொம்ப புத்துணர்ச்சியோடு இருக்கு. இன்னும் எடை குறைக்கணும்." 

“இப்போ என்னென்ன புராஜெக்ட்ஸ் போயிட்டிருக்கு?" 

"கலைஞர் டி.வி 'ஓடிவிளையாடு பாப்பா' நிகழ்ச்சி பிக்கப் ஆகிடுச்சு. கலைஞர் டி.வியிலேயே புதுசா ஒரு சீரியலை டைரக்‌ஷன் பண்றதோடு, எக்ஸிக்யூட்டிவ் புரொடியூஷர் பணியையும் பார்த்துக்கிறேன். சினிமா அல்லது சீரியல் டைரக்டர் ஆகணும்னு நினைத்தேன். அந்த எண்ணம் இப்போதுதான் நிறைவேறியிருக்கு. இதுவரை டான்ஸ் மாஸ்டராவும், டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் டைரக்டராவும் பார்த்திருப்பீங்க. இப்போ புது முயற்சி. 'சங்கமம்' படம் மாதிரி முழுக்கவே டான்ஸை மையப்படுத்தின, சீரியல்கள்ல வராத கிராமத்துக் கதைக்களம். முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறாங்க." 

“உங்க நிகழ்ச்சியில் அடிக்கடி புதுமைகள் செய்வீங்க. அப்படியான முயற்சிகளை இப்போ செய்திருக்கீங்களா?” 

“ஆமாம். 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியில், ஒரே ஷாட்ல 15 நிமிடக் காட்சிகளை ஷூட் பண்ணியிருக்கிறோம். சாலையிலிருந்து ஸ்டுடியோக்குள் நுழைஞ்சு, கேரவனுக்குள் புகுந்து மேக்கப் முடிஞ்சு செட்டுக்குள் டான்ஸ் ஆடுற மாதிரியான சீன்ஸ் இருக்கும். ரொம்பவே சவாலான அதை சக்ஸஸ்ஃபுல்லா செய்திருக்கிறோம். அது புத்தாண்டு தினத்தில் ஒளிபரப்பாகும். இன்னும் ஒரு ஸ்பெஷல் இருக்குது. டான்ஸே தெரியாத ஒரு ஆள்; சுத்தமா சினிமா ஆர்வம் இல்லாதவர்; பியானோவில் அதிக ஆர்வம்கொண்டவர்; அவரை ஒரு ஸ்பெஷல் பர்ஃபார்ம் செய்யக் கேட்டேன். மூணு நாள் தலா ரெண்டு மணி நேரம்தான் பிராக்டீஸ் பண்ணினார். பியானோ வாசிச்சு, சோலோவா ஆடி முடிச்சுட்டு, கடைசியில் ஃபேமிலி நபர்களோடு டான்ஸ் ஆடியிருக்கிறார். கடைசியில் மூத்த பியானோ கலைஞர் ராவ் அவரை ஆசீர்வாதம் செய்தார். அந்த நபர், என் பையன் வித்யூத் (பலமாகச் சிரிக்கிறார்)." 

“ஜூலி எப்படி வொர்க் பண்றாங்க?" 

" 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு முதல்முறையா ஜூலிக்கு என் நிகழ்ச்சியில் தொகுப்பாளினி வாய்ப்பு கொடுத்தேன். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஜூலியின் செயல்பாட்டை மையப்படுத்தி பலரும் திட்டித் தீர்த்தாங்க. ஜூலி இளவயசில் இருக்கிறதால், நல்லது கெட்டதைப் புரிஞ்சுக்க டைம் தேவை. அவங்களோட பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி மெச்சூரிட்டியானவங்க பக்குவமாகச் சொல்லணும். அதைவிட்டு, அவங்களைப் புண்படுத்துற மாதிரி சொல்றது தப்பு. ஏழைப் பொண்ணான ஜூலியை நம்பி, ஒரு குடும்பம் இருக்கு. பழகிப் பார்க்காமல் அவர் கேரக்டரை டேமேஜ் பண்றது சரியில்லை. ஒரு காலேஜ் நிகழ்ச்சியில் ஜூலியை எல்லோரும் புண்படுத்தின இடத்தில் நாம இருந்திருந்தால் அழுதிருப்போம். ஆனா, ஜூலி அதை ஸ்போட்டிவா எடுத்துக்கிட்டாங்க. இப்போ ரெண்டு படத்தில் கமிட் ஆகியிருக்காங்க. தன் செயல்பாடுகளை இன்னும் நல்லவிதமா மாத்திகிட்டிருக்காங்க. அதை நிச்சயம் வரவேற்கணும். சமீபத்தில், ஷூட்டிங்ல ஒருத்தர்க்கு வலிப்பு வந்திடுச்சு. அவர் வலிப்பில் தன் நாக்கை கடிச்சுக்காமல் இருக்க, ஜூலி தன் கையை அவர் வாயில் வெச்சு முதலுதவி செய்தாங்க. அத்தருணத்துல ஜூலியைப் பார்த்துப் பெருமைப்பட்டேன்." 

“ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மிக சீரியஸான கண்ணோட்டத்தில் ரசிகர்கள் பார்க்கிறாங்களே..."

"ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியை என்டர்டெயின்மென்ட் விசயமா பார்க்கணும். அதைச் சீரியஸா எடுத்துகிட்டு நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்றதில் அர்த்தமில்லை. நம் ஒவ்வொருத்தர் வீட்டிலும் பல பிரச்னைகள் இருக்கு. நம் எல்லோரிடமும் பாசிட்டிவ், நெகட்டிவ் இருக்கும். அதுமாதிரி ரியாலிட்டி நிகழ்ச்சியின் மனிதர்களிடம் நல்ல விஷயங்கள் இருந்தால் ஃபாலோ பண்ணலாம். நெகட்டிவ் விஷயத்தைப் பார்த்தால், அப்படி நாம இருக்கக் கூடாதுனு நினைக்கணும். அதைவிட்டுட்டு அவங்களைப் புண்படுத்துற மாதிரி பேசறது தப்பு."

அடுத்த கட்டுரைக்கு