Published:Updated:

``அஞ்சனா, மணிமேகலை, நிவேதிதா.. இவங்ககிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டேன் தெரியுமா?'' - சன் மியூசிக் வீஜே அக்‌ஷயா

``அஞ்சனா, மணிமேகலை, நிவேதிதா.. இவங்ககிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டேன் தெரியுமா?'' - சன் மியூசிக் வீஜே அக்‌ஷயா
``அஞ்சனா, மணிமேகலை, நிவேதிதா.. இவங்ககிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டேன் தெரியுமா?'' - சன் மியூசிக் வீஜே அக்‌ஷயா

'ன் மியூசிக்' சேனலின் தொகுப்பாளர்களுக்கு என்றுமே தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். தற்போது, சன் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் 'ட்ரெண்டிங் மச்சி' ஷோவுக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வீஜே அக்‌ஷயா பயங்கர சந்தோஷமாக இருக்கிறார். அவரோடு ஒரு ஜாலி மீட் மச்சி! 

''என் சொந்த ஊர் கோயம்புத்தூர். அப்பா, அம்மா, தம்பி இவங்கதான் என் பொழுதுபோக்கு. அவங்க ஒண்ணு சேர்ந்தா தெருவுக்கே சிரிப்பு சத்தம் கேட்கும்னா பார்த்துக்கோங்க. அங்கே இருந்துதான் என் வீஜே வேலை ஆரம்பிச்சது. நான் ரொம்ப கூச்ச சுபாவி. அமைதியா இருப்பேன். யாராவது ஏதாவது கேட்டாங்கன்னா, அந்தக் கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வேன். ஈஸியா மிங்கிள் ஆகும் டைப் இல்லே. ஆனா, ஒருதடவை குளோஸ் ஆகிட்டேன்னா அவங்களோடு அதிகமா பேச ஆரம்பிச்சிருவேன். அமைதியா இருக்கும் பொண்ணு, ஷோவில் இவ்வளவு பேசுறாளானுதானே யோசிக்கிறீங்க. அதே சந்தேகம்தான் என் பெற்றோருக்கும் இந்த நிமிஷம் வரைக்கும் இருக்கு. 

என் அப்பாவின் விருப்பத்துக்காக, லிட்டரேச்சர் படிச்சேன். அங்கே படிக்கும்போதுதான் என் அண்ணன் எனக்கு கேமரா பற்றி சொல்லிக் கொடுத்தார். அன்னிலேருந்து எனக்கு கேமரா மேல தீராக் காதல் வந்துடுச்சு. அப்புறம், எம்.ஏ., மாஸ் - கம்யூனிகேஷன் படிச்சேன். அப்போ, இன்டர்ன்ஷிப்புக்காக சன் டி.விக்குப் போனேன். அங்கே நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். படிப்பு முடிஞ்சதும் அங்கேயே புரோகிராம் புரொடியூசர் ஆகி, நிறைய நிகழ்ச்சிகளுக்கு வொர்க் பண்ணினேன். அங்கே வேலை பார்க்கும்போதுதான் நாமும் வீஜேவுக்கு டிரை பண்ணலாமேனு தோணுச்சு. 

சன் மியூசிக்கில் ஆடிஷனில் கலந்துக்கிட்டு, செலக்ட் ஆனேன். புரோகிராம் வரும்போது கண்டிப்பா கூப்பிடறேனு சொன்னாங்க. இரண்டு முறை செலக்டாகியும் மிஸ்சாகி, மூன்றாவது முயற்சியில்தான் செலக்ட் ஆனேன். இப்போ, 'ட்ரெண்ட் மச்சி' ஷோவை ஹோஸ்ட் பண்ணிட்டிருக்கேன். நான் ஆசைப்பட்ட துறையில் கிடைச்சிருக்கும் இந்த வாய்ப்பு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. அதுல நிறைய கத்துக்கணும். ஆடியன்ஸ் மனசில் இடம் பிடிக்கணும். இப்போதைக்கு அதுதான் எய்ம். ஆரம்பத்தில், என் அமைதி குணத்துக்கு வீஜே வொர்க் சவாலா இருந்துச்சு. அதை இப்போ சரி பண்ணிக்கிட்டேன். இப்போ முழு ஷோவையும் என்னால் பார்த்துக்க முடியும்'' எனச் சிரிக்கும் அக்‌ஷயா தொடர்கிறார். 

''கொஞ்ச நாளா டிரெஸ் வாங்குறதுக்கும், அக்சசரீஸ் வாங்குறதுக்கும்தான் அதிகமா செலவு பண்றேன். மீடியாவில் எனக்கு சீனியரா இருக்கிற வீஜேக்கள் எல்லோரும் பேசும் ஸ்டைலைப் பார்த்து, எப்படியெல்லாம் பேசணும்னு கத்துக்கிட்டேன். வீஜே தவிர்த்து, நிறைய கேட்லாக் ஷூட் பண்ணுவேன். நான் புரொபோஷனல் மாடல் கிடையாது. ஆனா, விளம்பரப் படங்களில் மாடலிங் பண்ற விருப்பம் இருக்கு. இப்போதைக்கு, வீஜேல முழுக் கவனம் செலுத்துவேன். கொஞ்ச வருஷம் போகட்டும்... சின்னத்திரை, வெள்ளித்திரைனு களம் இறங்கலாம்னு இருக்கேன். இப்போதைக்கு எந்த கமிட்மெண்ட்டும் தேவையில்லைங்குறதுல ரொம்பவே உறுதியா இருக்கேன். என்னைப் பொறுத்தவரைக்கும், லைஃப்ல எப்பவுமே ஜாலியா இருக்கணும். அதுதானே லைஃப். அதுக்குத்தானே இந்த ஓட்டம் எல்லாம். ஸோ, இன்னிக்கு மாதிரியே எப்பவும் ஜாலியா பயணிப்பேன்'' என்கிறார் அக்‌ஷயா செம ஹேப்பியாக. 

வாழ்த்துகள் டியூட்!