Published:Updated:

“இதுக்காகவே என் வெயிட்டைக் குறைச்சேன்!” - மகாலட்சுமியின் சீக்ரெட் ஸ்லிம் டிப்ஸ்

“இதுக்காகவே என் வெயிட்டைக் குறைச்சேன்!” - மகாலட்சுமியின் சீக்ரெட் ஸ்லிம் டிப்ஸ்
“இதுக்காகவே என் வெயிட்டைக் குறைச்சேன்!” - மகாலட்சுமியின் சீக்ரெட் ஸ்லிம் டிப்ஸ்

‘அரசி' சீரியல்மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், மகாலட்சுமி. எட்டு வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முத்திரையைப் பதித்துவருபவர். தற்போது, சன் டிவியில் 'தாமரை' மற்றும் 'வாணி ராணி' சீரியலிலும், ஜீ தமிழ் சேனலில் 'தேவதையைக் கண்டேன்' சீரியலிலும் பரப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார். மகாலட்சுமியுடன் ஒரு தேநீர் சந்திப்பு... 

“வீஜே டூ சீரியல் பயணம் குறித்து...”  

“நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். படிப்பு முடிஞ்சதும் சன் மியூசிக்கில் தொகுப்பாளினியா சேர்ந்தேன். அங்கே வேலை பார்த்துட்டிருக்கும்போதே சின்னத்திரை நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. இப்போ, மூணு சீரியல்களில் பிஸி. தவிர, கலைஞர் டிவியில் இந்த மாசக் கடைசியில் ஆரம்பமாகும் ‘கண்ணகி’ தொடரிலும் நடிக்கிறேன்.”

“நடிப்பை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?”

“எனக்கு நடிப்பு பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், ராதிகா மேம் அவங்க சீரியலில் நடிக்கவைக்க ஆசைப்பட்டாங்க. என் தயக்கத்தை விரட்டி உற்சாகப்படுத்தி, ஒவ்வொரு விஷயத்தையும் கற்றுக்கொடுத்தாங்க. நடிப்பில் அவங்கதான் என் குரு.” 

“உங்க நடிப்புக்கு ஃபேமிலி சப்போர்ட் எப்படி இருக்கு?”


 

“என்னுடையது லவ் மேரேஜ். நானும் கணவரும் ஒருத்தரையொருத்தர் நல்லாவே புரிஞ்சுவெச்சிருக்கோம். என் பையன் சச்சினுக்கு இரண்டரை வயசாகுது. என் அம்மா, அப்பா, தம்பிதான் என் பையனைப் பார்த்துக்குறாங்க. நடிப்பில் பிஸியாக இருந்தாலும், என் அம்மா அரவணைப்பில் இருக்கும் சச்சின், என்னை மிஸ் பண்றதா ஃபீல் பண்றதே இல்லை.” 

“சீரியலில் நெகட்டிவ் ரோல் பண்ற நீங்க நிஜத்தில் எப்படி?” 

“நடிப்பைப் பொறுத்தவரை, 'இந்த கேரக்டர்தான் பண்ணுவேன்'னு எந்த அளவுகோலும் இல்லை. என் கதாப்பாத்திரம் முக்கியமா தோணுச்சுன்னா கண்டிப்பா நடிப்பேன். நெகட்டிவ் ரோல் பண்ணும்போது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருந்துச்சு. அதிலிருக்கும் சவாலைப் புரிஞ்சுக்கிட்டதும் சந்தோஷமா பண்ண ஆரம்பிச்சுட்டேன். நிஜத்துல நான் ரொம்பவே அமைதியான பொண்ணு.”

“உங்க மகனின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடுவீங்களாமே...” 

“ஆமாங்க! பையன் பிறந்த முதல் நாளிலே அவனுடைய ஒவ்வொரு பிறந்தநாளையும் ஒரு வெளிநாட்டில் கொண்டாடணும்னு நானும் கணவரும் முடிவு எடுத்தோம். முதல் பிறந்தநாளுக்கு பாங்காக் போயிருந்தோம். இரண்டாவது பிறந்தநாளை சிங்கப்பூரில் கொண்டாடினோம். மூணாவது பிறந்தநாளுக்கு மலேசியாவுக்கு போக பிளான் பண்ணிருக்கோம். பையனின் இருபது வயசில் இருபது நாடுகளை அவன் பார்த்திருக்கணுங்கிறது எங்களுடைய ஆசை.” 

“ ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலில் உங்களுடைய காஸ்டியூம் சூப்பரா இருக்கே. எப்படி செலக்ட் பண்றீங்க?” 

“ஒரு சீரியலில் ஒரு தடவை கட்டும் சேலையை அதே சீரியலில் மறுபடுடியும் கட்ட மாட்டேன். ‘தேவதையைக் கண்டேன்’ சீரியலில் கொஞ்சம் வித்தியாசமா காட்டிக்க நினைச்சேன். அந்த சீரியலில் பெரிய இடத்து பெண் கேரக்டர். அதனால், ரொம்ப காஸ்ட்லியான புடவையையே கட்டுறேன். அதுக்கு மேட்சா போடுறதுக்காக ஒவ்வொரு கடையாகத் தேடித்தேடி அக்சசரீஸ் வாங்குவேன். அதான் வித்தியாசமான லுக்கில் பார்க்க முடியுது.” 

“வெயிட் லாஸ் பண்ணியிருக்கீங்களோ...” 

“ஆமாம்! கர்ப்பமா இருந்தபோது டபுள் மடங்கு வெயிட் போட்டுருச்சு. சீரியலில் நடிக்கும்போது இவ்வளவு வெயிட் இருந்தா நல்லா இருக்குமா? கடினமா உடற்பயிற்சி செஞ்சு, டயட் ஃபாலோ பண்ணினேன். ஓரளவுக்கு வெயிட் லாஸ் பண்ணியிருக்கேன்.” 

“வெள்ளித்திரையில் உங்களை எதிர்பார்க்கலாமா?” 

“ஒரு படத்தில் நடிச்சிருக்கேன். அந்தப் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. நல்ல கேரக்டர் ரோல் அமைஞ்சா தொடர்ந்து நடிப்பேன். என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தியது வீஜே. ஸோ, ஏதாவது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சா அதையும் செய்வேன்.” 

“மறக்கமுடியாத லவ் புரொபோஷல் உண்டா?” 

“இப்பவும் என்னை நிறையப் பேர் லவ் பண்றேனு சொல்வாங்க. எனக்குத் திருமணமாகி, குழந்தை இருக்குனு சொன்னாலும் கேட்காம லவ் யூ சொல்லுவாங்க” என கலகலப்புடன் சிரிக்கிறார்.