Published:Updated:

`` ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடை பண்ணவே மாட்டேன்னு சொன்னார் ராமர்..!” - அத்தியாயம் – 6

`` ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடை பண்ணவே மாட்டேன்னு சொன்னார் ராமர்..!” - அத்தியாயம் – 6
`` ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடை பண்ணவே மாட்டேன்னு சொன்னார் ராமர்..!” - அத்தியாயம் – 6

மதுரை அமெரிக்கன் காலேஜ்ல நடந்த கலக்கப்போவது யாரு சீசன் 3 யோட ஆடிஷனில்தான் சிவகார்த்திகேயனும், ராமரும் செலக்ட் ஆனாங்க. ராமருக்கு மதுரை அரிட்டாப்பட்டிதான் சொந்த ஊர். சீசன் 3க்கு தேர்வான சமயத்தில்தான் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஐயா வச்சிருந்த ஹூமர் க்ளப்பில் ராமர் இருந்தார். கவுண்டமணி சார், மதன் பாபு வாய்ஸ் எல்லாம் ராமர் ரொம்ப சூப்பரா பேசுவார். அப்படித்தான் சீசன் 3ல செலக்ட் ஆகி உள்ளே வந்தார்.

சீசன் 3 முடிஞ்சதுக்கு அப்பறம் சாம்பியன்ஸ்ல ராமரும், அமுதவாணனும் ஜோடியா பெர்ஃபார்ம் பண்ணுனாங்க. இந்த ஜோடிதான் சாம்பியன்ஸ் டைட்டில் வின் பண்ணுனாங்க. அதுக்கு அப்பறம் ராமர் பெரிய கேப் எடுத்துக்கிட்டார். காரணம், கல்யாணம். கல்யாணம் ஆனதும் ஏகப்பட்ட பொறுப்பு வந்ததுனால ராமரால தொடர்ந்து வர முடியலை. அந்த கேப்ல நிறைய வேலைகள் பார்த்து ஓரளவு செட்டில் ஆனதுக்கு அப்பறம் மறுபடியும் நிகழ்ச்சிகளில் கலந்துக்க ஆரம்பிச்சிட்டார்.

‘அது இது எது' ஷோதான் ராமருக்கு ரீ-என்ட்ரி. லீவ் போட்டு சென்னையில் இருக்குற அமுதவாணன் வீட்டுக்கு வந்து ரெண்டு பேருமே ரிகர்ஷல் பார்ப்பாங்க. இன்னைக்கு வரைக்கும் இப்படி லீவ் போட்டு வந்துதான் ஷோ பண்ணிட்டு இருக்கார். ரொம்ப நாள் கழிச்சு ரீ-என்ட்ரி கொடுத்த ராமருக்கும், சிரிச்சா போச்சுக்கும் மிகப்பெரிய ப்ரேக்னா அது ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ எபிசோடுதான். பட்டித்தொட்டி எல்லாம் செம ஹிட். ஆனால், அதை ராமர் பண்ண மாட்டேன்னு முதலில் அடம்பிடிச்சார்.

ராமர் லேடி கெட்டப் போடுறது அவங்க மனைவிக்குப் பிடிக்காதுபோல, அதனால் அவர் முதலில் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டார்.  நான் விடுறதா இல்லை. ‘நீதான் பண்ணணும்... இங்க நான்தான் டைரக்டர்...’னு சொல்லிட்டே இருந்தேன். ஏன்னா அது ரொம்ப நல்ல ஸ்கிரிப்ட். அதை ராமர்தான் பண்ணணும், அவருக்குதான் அது பொருத்தமா இருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதுனால நானும் விடாப்பிடியா இருந்து ராமரை பண்ண வெச்சேன்.

லேடி கெட்டப் போடுறது எல்லாம் பெரிய விஷயம் இல்ல, அந்த லேடி கேரக்டரோட வாய்ஸ் பிடிக்கிறதுதான் முக்கியம். அந்த வாய்ஸை கேட்டதும் சிரிப்பு வரணும். அப்படி ஒரு வாய்ஸை ராமர்கிட்ட இருந்து வாங்குனேன். கிட்டத்தட்ட 10 வாய்ஸுக்கு மேல பேசி, கடைசியாகத்தான் அந்த வாய்ஸை ஓகே பண்ணுனேன். அந்த எபிசோடு ஹிட்டாகும்னு தெரியும், ஆனா இந்தளவுக்கு ரீச்சாகும்னு தெரியாது.

எந்த விஷயத்தை எடுத்தாலும் ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ஸ்கூல், காலேஜ், சோஷியல் மீடியானு பல இடங்களில் யூஸ் பண்ணுனாங்க. அது எல்லாத்தையும் பார்த்தபிறகு ராமர் வந்து, ‘சாரி சார். நான் மட்டும் அதை பண்ணாம இருந்தா இந்தளவுக்கு ரீச் ஆகியிருக்க மாட்டேன். ரொம்ப நன்றி சார்’னு சொன்னார். ‘யார் யாருக்கு என்ன வரும்... யாருக்கு எது செட்டாகும்னு டைரக்டருக்கு தெரியும் ராமர். அதான் நானும் விடாப்பிடியா இருந்தேன்’னு சொன்னேன். எப்போதுமே ஒரு டைரக்டர் சொல்றதைக் கேட்டு ஒரு நடிகர் பண்ணுனா அது ஹிட்டுதான்.

ராமரோட ப்ளஸ்ஸே அவரோட முகம்தான். காமெடி பண்றதுக்காகவே அளவெடுத்து செஞ்ச மாதிரி இருக்கும். அதேமாதிரி நடிப்பும் பின்னியெடுப்பார். குடிகாரன் மாதிரி நடிச்சார்னா அப்படியே இருக்கும். பல நாள் குடிகாரன்கூட தோத்துருவான். அந்தளவுக்கு பக்காவா பண்ணுவார். அப்பறம் சாணியை மிதிச்சு தரையில தேய்ச்ச மாதிரி மூன்வாக் ஒண்ணு போடுவார். அது நல்லாயிருக்குனு ஆஹா ஓஹோனு பேசுறாங்க. இப்போ நாங்க பண்ணிட்டு இருக்கிற கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியை ராமருக்காகத்தான் நாங்க பார்க்கிறோம்னு பல பேர் என்கிட்ட சொல்லியிருக்காங்க.

ராமரும் தங்கதுரையும் மாத்தி மாத்தி அவங்களையே கலாய்ச்சுப்பாங்க. அது செம ஹிட்டா போகும். முதலில் தங்கதுரைதான் ராமரை கலாய்ச்சிட்டு இருந்தார். இப்போ ராமரும் உஷார் ஆகிட்டார். அவரும் திரும்ப கலாய்க்க ஆரம்பிச்சிட்டார். உதாரணத்துக்கு தங்கதுரை ராமரைப் பார்த்து,‘மாந்தோப்புல மாங்காய் திருடுறவன் மாதிரி இருக்கான், இவனா மாப்பிள்ளை’னு கேட்டால், அதுக்கு ராமர்,’ ‘மாப்ள- மாந்தோப்புல’ அவ்வளவுதான். இதுல என்ன நகைச்சுவை இருக்கு’னு பதிலுக்கு கலாய்ச்சிடுவார். இப்படி ரியல் ஃபைன்னா போறதால சாம்பியன்ஸ் ஷோ நிறைய பேருக்கு பிடிச்சிருக்கு.

ராமர்கிட்ட ஒரு மிகப்பெரிய நல்ல குணம் இருக்கு. தான் ஒரு சீனியரா இருந்தாலும் ஜூனியர்ஸ்கிட்ட அதைக் காட்டிக்க மாட்டார். யாராவது கலாய்ச்சா டென்ஷன் ஆக மாட்டார். ‘ஐயா... யாராவது என்னை கலாய்க்க ரெடியா இருக்கீங்களா’னு அவரே கேட்பார். ஸ்டேஜ்ல யாராவது டயலாக்கை மறந்துட்டா எனக்கு உடனே கோபம் வரும். ஆனா, ராமர் டயலாக் மறந்துட்டா எனக்கு சிரிப்புத்தான் வரும். ராமர் எது பண்ணினாலும் அதுல காமெடி இருக்கும்.