Published:Updated:

என்னைப் பார்த்ததும் பளார்னு அறைஞ்சிட்டாங்க - 'நெஞ்சம் மறப்பதில்லை' ப்ரீத்தி

என்னைப் பார்த்ததும் பளார்னு அறைஞ்சிட்டாங்க - 'நெஞ்சம் மறப்பதில்லை' ப்ரீத்தி
என்னைப் பார்த்ததும் பளார்னு அறைஞ்சிட்டாங்க - 'நெஞ்சம் மறப்பதில்லை' ப்ரீத்தி

என்னைப் பார்த்ததும் பளார்னு அறைஞ்சிட்டாங்க - 'நெஞ்சம் மறப்பதில்லை' ப்ரீத்தி

'பிரியமானவள்' சீரியலில் நந்தினி கேரக்டரில் வில்லியாக நடித்து மக்களிடம் கோபத்தைச் சம்பாதித்தவர், ப்ரீத்தி. வீஜேவாக தன் மீடியா பயணத்தைத் தொடங்கி, சின்னத்திரை நடிகையாக வலம்வருகிறார். தற்போது, 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் அவருடன் பர்சனல் சாட்... 

"மீடியா வாய்ப்பு எப்படி கிடைச்சது?" 

''நான் பி.எஸ்.சி விஸ்காம் படிச்சிருக்கேன். படிப்பு முடிஞ்ச மறுநாளே தந்தி டிவியில் அசிஸ்டன்ட் புரொடியூசரா வேலைக்குச் சேர்ந்தேன். '360 உலகைச் சுற்றி' என ஒரு ஷோ பண்ணினேன். அது என் லைஃபையே மாத்திச்சு. பலருக்கும் தெரிந்தவளாக மாறினேன்.'' 

"வீஜே டு சின்னத்திரை நடிகையானது எப்படி?" 

''வீஜேவாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஷோ பண்ணிட்டிருக்கும்போது விஜய் டிவியின் 'ஆபிஸ்' சீரியலின் ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. 'நமக்கு நடிக்கத் தெரியாதே. சரி, முயற்சிசெய்து பார்ப்போம்'னு போனேன். ஆனால், நல்லா பர்ஃபார்ம் பண்ணினதா சொல்லி, செலக்ட் பண்ணிட்டாங்க. 'அட, நமக்கு நடிக்க வருதே'னு அப்போதான் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம், 'தெய்வம் தந்த வீடு', 'கேளடி கண்மணி', 'பிரியமானவள்', 'லட்சுமி வந்தாச்சு' என நிறைய சீரியல்களில் நடிச்சுட்டேன். இப்போ, 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியலில் நடிச்சுட்டிருக்கேன்.'' 

"வில்லி ரோல் பண்றது பிடிச்சிருக்கா?" 

''என்னை ஹீரோயினா நடிக்கக் கூப்பிட்டாலும் ஒத்துக்க மாட்டேன். ஆனால், வில்லி ரோலுன்னா உடனே ஓகே சொல்லிடுவேன். ஏன்னா, மக்களிடம் அதிக நெருக்கத்தை ஏற்படுத்துவது வில்லி கேரக்டர்தான். அது சவாலான நடிப்பும்கூட. ஜாலியா என்ஜாய் பண்ணி நடிக்கிறேன்.'' 

" 'நெஞ்சம் மறப்பதில்லை' சீரியல் பற்றி..." 

'' 'பிரியமானவள்' சீரியலைப் பார்த்துதான், 'நெஞ்சம் மறப்பதில்லை' இயக்குநர் கூப்பிட்டார். 'இதுவரை நீங்க பண்ணாத வித்தியாசமான ரோல்'னு சொன்னார். யாராச்சும் ரெண்டு பேர் சண்டை போட்டுட்டே இருக்கணும் நான் அதைப் பார்த்து என்ஜாய் பண்ணனும். இதுதான் என் ரோல். இதில் நான் சீரியஸான வில்லி இல்லே. டீமே என் ஃபேமிலி மாதிரி ஆகிடுச்சு.'' 

"உங்க நடிப்பைப் பார்த்துட்டு வீட்டில் என்ன சொல்றாங்க?" 

''நான் நடிக்கிறது ஆரம்பத்தில் என் குடும்பத்துக்குப் பிடிக்கலை. ஆட்சேபணை செஞ்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா புரியவைத்து சம்மதம் வாங்கினேன். இப்போ, என்னுடைய நடிப்பை என்னைவிட அதிகமா விரும்பறது என் ஃபேமிலிதான்.'' 

"உங்க வாழ்க்கையின் நெகிழ்ச்சியான தருணம் எது?" 

''நான் 'லட்சுமி வந்தாச்சு' சீரியலில் கேன்சரினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிச்சேன். அதில், இறந்துபோகும் நிலைமையில், என் பையனை என் கணவரிடம் ஒப்படைக்கும் சீன் வரும். அந்த சீனைப் பார்த்துட்டு ட்விட்டரில் ஒருத்தர் மெசேஜ் பண்ணியிருந்தாங்க. 'நானும் கேன்சரினால் பாதிக்கப்பட்டு உங்க நிலைமையில்தான் இருக்கே'னு சொல்லியிருந்தாங்க. அந்த மெசேஜை படிச்சதும் கண்கள் கலங்கிடுச்சு. 'சீக்கிரமே உங்களுக்குச் சரியாகிடும். உங்களுக்காக நான் பிரேயர் பண்ணிக்கிறே'னு சொன்னேன். கொஞ்ச நாளில் என் ட்விட்டர் அக்கவுன்ட் ஹேக் ஆகிடுச்சு. அவங்ககிட்ட அப்புறம் பேசமுடியலை. ஆனால், இப்போ வரை அவங்களுக்காகத் தினசரி வேண்டிட்டுதான் இருக்கேன்.'' 

"உங்களை நேரில் பார்க்கும் மக்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கு?" 

''ஒரு நாள் பீனிக்ஸ் மாலில் படம் பார்க்கப் போயிருந்தேன். ஒரு அம்மா என்னைப் பார்த்ததும், வேகமா என்கிட்ட வந்து என்னை அறைஞ்சிட்டாங்க 'ஏன் இப்படி சந்தோசமா வாழும் குடும்பத்தை கெடுக்குறே?'னு திட்டினாங்க. அங்கே இருந்த என்னை ஒருமாதிரி பார்த்தங்க. 'ஸாரிம்மா'னு சொல்லிட்டு வந்துட்டேன்.'' 

"சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருக்கா?" 

''எனக்கு சின்னத்திரையே போதும். வெள்ளித்திரை ஆசை இல்லை. சின்னத்திரையிலே என் நடிப்புத் திறமையால் மக்கள் மனசுல இடம்பிடிச்சுட்டேன். மறுபடியும் தொகுப்பாளினியாக கூப்பிட்டால் பண்ணுவேன்.''

அடுத்த கட்டுரைக்கு