Published:Updated:

"இப்போ நீங்க பார்த்த வீடியோ சும்மா டிரைலர்தான்..!"- ரியோ - ஸ்ருதி சர்ப்ரைஸ்

"இப்போ நீங்க பார்த்த வீடியோ சும்மா டிரைலர்தான்..!"- ரியோ - ஸ்ருதி சர்ப்ரைஸ்
"இப்போ நீங்க பார்த்த வீடியோ சும்மா டிரைலர்தான்..!"- ரியோ - ஸ்ருதி சர்ப்ரைஸ்

"இப்போ நீங்க பார்த்த வீடியோ சும்மா டிரைலர்தான்..!"- ரியோ - ஸ்ருதி சர்ப்ரைஸ்

சின்னத்திரை ஸ்டார் ஜோடிகளான ரியோ, ஸ்ருதிக்கு இன்று (09.02.18) முதலாவது திருமண நாள். அதற்காக, ஸ்பெஷலா ஒரு வீடியோ ஷூட் செய்து அப்லோடு பண்ணியிருக்காங்க. அந்த ஜோடி மாதிரியே வீடியோவும் க்யூட். இந்த வித்தியாசமான ஐடியா எப்படி வந்துச்சு? ஒரு வாழ்த்துப் பூங்கொத்துடன் அவங்களைப் பிடிச்சோம். 

''நான் வீஜேவாக அறிமுகமாகறதுக்கு முன்னாடியே ஸ்ருதியைத் தெரியும். ரெண்டு பேரும் நண்பர்கள். ஒருநாள் அண்ணா யுனிவர்சிட்டியின் நிகழ்ச்சிக்காக நானும் ஸ்ருதியும் போயிருந்தோம். அங்கேதான் திடீர்னு ஸ்ருதி தன் காதலைச் சொன்னாங்க. எனக்கும் அவங்களை ரொம்பப் பிடிக்கும். ஆனாலும், கெத்தை மெயின்டெய்ன் பண்ணனுமே. ரெண்டு நாள் கழிச்சுதான் ஓ.கே சொன்னேன்'' என்று எப்போதும்போல, தன்னுடைய குறும்புத்தனத்தால் ஸ்ருதியை வம்புக்கு இழுக்கிறார் ரியோ.

''இவன் எப்பவும் துறுதுறுனு க்யூட்டா, ஸ்வீட்டா ஏதாச்சும் செஞ்சுட்டே இருப்பான். அதுதான் எனக்குப் பிடிச்சிருந்தது. நான் 'லவ் யூ'னு சொன்னதும், ரெண்டு நாள் கழிச்சு 'மீ டூ'னு சார் சொன்னதுதான் கடுப்பு. வேணும்னே காத்திருக்க வெச்சது தெரிஞ்சும் பொறுமையா இருந்தேன். மூணு வருஷக் காதல் கல்யாணத்தில் முடிஞ்சது எங்கள் வரம். மணக்கோலத்தில் நானும் ரியோவும் நின்னப்போ, அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ளே ஒரு வருஷம் ஆகிடுச்சு. காலம்தான் எவ்வளவு வேகமா ஓடுது'' என ரியோவின் கரங்களைக் காதலுடன் பற்றியவாறு தொடர்கிறார் ஸ்ருதி.

''எனக்கு மியூஸிக்னா ரொம்பப் பிடிக்கும். ஒரு சிங்கரை கல்யாணம் பண்ணிக்கும் ஆசை இருந்தது. ஒரு மழை நாளில் அவர் எனக்கு ரொமான்டிக் சாங்ஸ் பாடிக்காட்ட, நான் கையில் சூடாக ஒரு கப் காஃபியோடு அதை ரசிக்க... இப்படியெல்லாம் கனவு கண்டவள். இதை ரியோகிட்ட ஒருமுறை சொன்னப்போ, 'டார்லிங்... உனக்காக நான் பாட்டுக் கத்துக்கிட்டு பாடிக் காட்டுறேன்'னு சொன்னான். அதேபோல, இப்போ என்னைச் சுற்றி சுற்றி வந்து பாடுறான். அதைக் கேட்கத்தான் சகிக்கலை'' என்று ஸ்ருதி கலாய்க்க, செல்லக் குட்டு தந்துவிட்டுத் தொடர்கிறார் ரியோ.

''எனக்கும் ஸ்ருதிக்கும் நிறைய விஷயங்களில் ஒரே வேவ் லெங்த். ஸ்ருதியின் அம்மா, அப்பா எனக்கு ஃப்ரெண்ட்ஸ் மாதிரி. என் ஃப்ரெண்ட்ஸும் ஸ்ருதி ஃப்ரெண்ட்ஸும் இப்போ குளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். எங்கே வெளிய போனாலும் ஒரு பெரிய கேங்கா போவோம். நானும் ஸ்ருதியும் தனியாகப் போனது எங்க ஹனிமூனுக்கு மட்டும்தான்'' எனச் சிரிக்கிறார் ரியோ.

தங்களின் முதலாமாண்டு திருமண நாள் பிளான் பற்றி பேச ஆரம்பித்ததும் வார்த்தைகளில் பிரகாசம் கூடுகிறது.

''ரெண்டு பேரும் திருமணம் முடிஞ்சதுமே ஒரு ஃபோட்டோ ஷூட் வெச்சுக்க பிளான் பண்ணியிருந்தோம். ஆனா, என் ஒர்க்ல பிஸியானதால தள்ளிப் போய்ட்டே இருந்துச்சு. 'சரி, பிரீ வெட்டிங் ஷூட்டை இப்போ பண்ண முடியாமல் போனால் என்ன, ஃபர்ஸ்ட் வெட்டிங்டேவுக்குப் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்து, கேரளாவில் அந்த ஷூட்டுக்கு ஏற்பாடு பண்ணினோம். அதேமாதிரி முடிச்சு, வீடியோவை இன்னைக்கு அப்லோடு பண்ணிட்டோம். இப்போ நீங்க பார்த்தது சும்மா டிரையல்தான். மெயின் வீடியோ லவ்வர்ஸ் டே அன்னைக்கு ரிலீஸ்'' என சர்ப்ரைஸ் தருகிறார்கள்.

''ஸ்ருதிக்கு அசைவம் சமைக்கத் தெரியாது. ஆனால், எனக்காக சிக்கன் சமைச்சா. நானும் அவளுக்குப் பிடிச்சதை சமைச்சுக் கொடுத்து, சர்ப்ரைஸ் பண்ணுவேன். எங்க ரெண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும். ஆனா, அதுக்கான அடையாளமே தெரியாத அளவுக்கு, உடனடியா சமாதானம் ஆகிடுவோம்'' என ஈகோ இல்லாத அன்பைச் சொன்னார் ரியோ.

''நாங்க லவ் பண்ணிட்டிருந்தப்போ, ஒருமுறை என்னை சாய்பாபா கோயிலுக்கு ரியோ கூட்டிட்டுப் போனான். ஒரு சாய்பாபா மோதிரம் வாங்கிப் போட்டுவிட்டான். அது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். அதுக்கு அப்புறம் அவன் எத்தனையோ காஸ்ட்லி கிஃப்ட்ஸ் வாங்கிக்கொடுத்திருந்தாலும், அந்த 10 ரூபாய் மோதிரம்தான் என் லைஃப்டைம் ஃபேவரைட்'' என ஸ்ருதி சொல்ல, ரியோ முகத்தில் அவ்வளவு பிரகாசம்.

''நானும் ஸ்ருதியும் முதன்முதலா பார்த்துப் பழகின சன் மியூசிக் செட்டுக்குப் போறதுதான் இன்னிக்கு முதல் பிளான். அங்கே பழைய நினைவுகளை அசை போட்டுட்டு திருமண நாளை ஜாலியா கொண்டாடப் போறோம். திருமணத்துக்கு அப்புறம் ரெண்டு பேரும் விரும்பி வாங்கின காரில்தான் போறதா பிளான் பண்ணியிருக்கோம். ஸ்ருதியின் வீட்டிலிருந்து, திருமண நாளுக்காக எனக்கு ரிங் வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஆனா, இப்போவரை ஸ்ருதி எதுவும் தரலை. நானும், எதுவும் தரலை. காலையிலேயே ஷீட் போயிட்டு இப்போதான் வந்தேன். ஸ்ருதியின் சர்ப்ரைஸுக்காக வெயிட் பண்ணிட்டிருக்கேன்'' என ரியோ சொல்ல, 'நானும்தான்' எனப் புன்னகைக்கிறார் ஸ்ருதி. 

வாழ்த்துகள் டியூட்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு