Published:Updated:

''ஹரி படம் மாதிரி ஃபுல் ரன்னிங், சேஸிங்தான்!" - 'காதல் கல்யாண' கதை சொல்லும் மணிமேகலை #VikatanExclusive

''ஹரி படம் மாதிரி ஃபுல்  ரன்னிங், சேஸிங்தான்!" - 'காதல் கல்யாண' கதை சொல்லும் மணிமேகலை #VikatanExclusive
''ஹரி படம் மாதிரி ஃபுல் ரன்னிங், சேஸிங்தான்!" - 'காதல் கல்யாண' கதை சொல்லும் மணிமேகலை #VikatanExclusive

``எல்லா பேட்டியிலும், ’எங்க மீட் பண்ணுனீங்க’, ’யார் முதலில் காதலைச் சொன்னது’, ’முதல் லாங் ட்ரைவ் எங்க போனீங்க’னு ஒரே கேள்விகளைத்தான் திரும்ப, திரும்பக் கேட்டுட்டு இருக்காங்க. நீங்க எதுனா வித்தியாசமா கேளுங்க ட்யூட்’’ என்றபடி பேட்டிக்குத் தயாராகினர், லேட்டஸ்ட் சென்சேஷனல் மணிமேகலை - ஹுசைன்.

``திருமணமாகி இரண்டு மாதங்கள்தான் ஆகுது, எப்படி இருக்கு இந்தத் திருமணம் எனும் நிக்காஹ்...’ என முதல் கேள்வியைக் கேட்டதும், ``எனக்கு இந்த ரெண்டு மாசமும் செம த்ரில்லா, வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கு. ரன்னிங், சேஸிங்னு ஹரி சார் படம் பார்த்த மாதிரியே இருந்துச்சு. எந்த முன்னேற்பாடு இல்லாம திடீர்னு எங்க மேரேஜ் நடந்தனால செம ஜாலியா இருக்கு’’ என்று ஹுசைனைப் பார்த்துச் சிரிக்கிறார் மணிமேகலை. 

``நாங்க லவ் பண்ண ஆரம்பிச்சு அஞ்சு மாசத்துல மலேசியாவுல இருந்து ஹுசைனுக்கு ஒரு பார்சல் வந்துச்சு. அதுல ஒரு டைரி இருந்துச்சு. அந்த டைரி முழுக்க இவரோட பழைய போட்டோவுல இருந்து லேட்டஸ்ட்டா எடுத்த போட்டோ வரைக்கும் பிரின்ட் எடுத்து ஒட்டி ஒரு பொண்ணு இவருக்கு அனுப்பியிருக்காங்க. பாவம் இவருக்கு ஆள் இருக்குனு தெரியாம அந்தப் பொண்ணு சின்சியரா ட்ரை பண்ணியிருக்கா. ஹுசைன்கிட்ட நான் முதல் டைம் பேசும்போது இவருக்கு ஆள் இருந்தா அந்த லவ்வைக் கண்டிப்பா பிரிச்சு விட்டுருப்பேன்’’ எனச் சொல்லி மணிமேகலை சிரிக்க, `` எனக்கு வந்த புரொபோஷல் எவ்வளவு அழகா இருக்கு. இவங்களுக்கு வந்த புரொபோஷலை நான் சொல்றேன், கேளுங்க. இங்க ஸ்கூல் ரிஜிஸ்டர்ல ஸ்டூடன்ட்ஸோட வீட்டு போன் நம்பரும் எழுதி வெப்பாங்களாம். அதை ஒரு பையன் தேடிக் கண்டுப்பிடிச்சு போன் பன்ணியிருக்கான். போனை இவங்க அப்பா எடுக்க, இந்த விஷயம் ஸ்கூலுக்குப் போக, அப்புறம் ரெண்டு பேரையும் வேற, வேற கிளாஸுக்கு மாத்திட்டாங்களாம். இதைக் கேட்கவே காமெடியா இல்ல’’ எனச் செல்லமாகச் சீண்டுகிறார் ஹுசைன்.

"ஹுசைனுக்கு நான் கொடுத்த முதல் கிஃப்ட்டை என்னால மறக்க முடியாது. நாம கொடுக்கப்போற முதல் கிஃப்ட், கண்டிப்பா ஹுசைனுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கணும்னு நினைச்சு, ரிசர்ச் எல்லாம் பண்ணுனேன். பல யோசனைக்குப் பிறகு இவர் ஐபோன் வெச்சிருக்கிறதனால, ஐவாட்ச்சும் யூஸ் பண்ணுவார்னு நினைச்சு அதை ஃபைனல் பண்ணுனேன். ஆனால், இந்த மனுஷன் வாட்ச்சே கட்ட மாட்டாராம். முதல் கிஃப்ட்லேயே பல்ப் வாங்கிட்டேன்’’ என மணிமேகலை உதட்டை பிதுக்க,  ``நான் ஒருநாள் யதார்த்தமா வாட்ச் கடைக்குப் போனேன். அங்க ஒரு வாட்ச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இவங்க வாட்ச் கட்டுவாங்களா, இது அவங்களுக்குப் பிடிக்குமானு எதைப் பற்றியும் யோசிக்காம, அதை வாங்கிக்கொடுத்துட்டேன். மேடம் ரொம்ப ஹாப்பி’’ என்கிறார் ஹுசைன்.

``நாங்க பெருசா வரணும், சாதிக்கணும்னு பெரிய கனவு எல்லாம் காணலை. இப்போ இருக்கிற ஜெனரேஷன்ல லவ் மேரேஜ், சாதி விட்டு சாதி - மதம் விட்டு மதம் கல்யாணம் பண்றது நடந்துட்டுதான் இருக்கு. இந்த நிமிடம்கூட ஏதோ ஒரு ஊரில், ஏதோ ஒரு காதல் ஜோடி அவங்களோட வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்ற முயற்சியிலோ அல்லது அதற்கான ப்ளானிலோ இருக்கலாம். ஆனால், அதையே ஒரு சினிமா பிரபலம், சின்னத்திரை பிரபலம் பண்ணுனா கருத்துச் சொல்ல லைன்ல வந்துருவாங்க. `எப்படா இவங்க ஃலைப்ல பிரச்னை வரும், அப்போ உள்ள வந்து, ’நான்தான் அன்னைக்கே சொன்னேன்’ல ன்னு சொல்வாங்க. இப்படிப்பட்ட இலுமினாலிட்டிகள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும் ட்யூட்’’ என நம்பிக்கையுடன் பேசி, விடை பெற்றனர் மணிமேலை - ஹுசைன்.

மணிமேகலை - ஹுசைனின் முழுமையான பேட்டி வியாழக்கிழமை வருகிற ஆனந்தவிகடனில் படிக்கலாம்...

அடுத்த கட்டுரைக்கு