Published:Updated:

'' ’கல்யாணம் இப்ப கிடையாது... ஓகே’வா'னு கேட்டான்...!” லவ் வித் ‘ராஜா ராணி’ ஆல்யா #LetsLove

அய்யனார் ராஜன்
'' ’கல்யாணம் இப்ப கிடையாது... ஓகே’வா'னு கேட்டான்...!” லவ் வித் ‘ராஜா ராணி’ ஆல்யா #LetsLove
'' ’கல்யாணம் இப்ப கிடையாது... ஓகே’வா'னு கேட்டான்...!” லவ் வித் ‘ராஜா ராணி’ ஆல்யா #LetsLove

'' ‘ஆல்யா மானஸா’ நியூமராலஜி பார்த்து நானா வச்சிக்கிட்ட பேரு. பேரு வச்சபோது எனக்கு எப்படித் தெரியும், என் மனசைக் கவர வர்றவனும் 'மானஸ்'ங்கிற பேர்லயே வருவான்'னு! ஆனா, வந்திருக்கான். அதுதான் ஆச்சர்யம்! செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கில்ல?'' நம்மை கேள்வியால் எதிர்கொள்கிறார் 'ராஜா ராணி' செம்பா. ஆல்யா மானஸா. காதலித்துக்கொண்டிருக்கிறவரை காதலர் தினத்தில் மிஸ் பண்ண முடியுமா? பேசினோம்.

''முதலில் ப்ரப்போஸ் செய்தது நீங்கதான்னு சொல்லியிருந்தீங்க. மானஸ்ட்ட பிடிச்சது என்ன?”

''பொண்ணுங்களைக் கண்டாலே தூரத்துக்கு ஓடறவனா இருந்தான் மானஸ். இந்த ஒரேயொரு விஷயம் ரொம்பவே பிடிச்சது. ப்ள்ஸ் ஸ்மோக் பண்ணத் தெரியாது, இன்னும் சில நல்லபழக்கங்கள்..''

''அப்படீன்னா, உங்களைக் கண்டும் ஓடியிருக்கணுமே..''

''ஓடினானே. அநியாயத்துக்கு ஓடினான். என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டேன். அவளுங்க ஒரு நாள் என் முன்னாடியே போய் கேட்டுட்டாங்க. 'அப்படியெல்லாம் இல்லையே, நான் யாரையும் லவ் பண்னலை'ன்னு சொல்லிட்டான். எனக்குக் கோபம் தலைக்கேறியிடுச்சு. ரெண்டு மூணு நாள் பேசாம இருந்துட்டு மறுபடியும் நானாத்தான் போய் பேசினேன். 'எனக்கு ஏற்கெனவே ஆள் இருக்கு'ன்னு பிகு பண்ணினான். நான் ப்ரப்போஸ் செய்த விதம் பிடிச்சுப்போய் கடைசியில வழிக்கு வந்தான்''

“அப்படி என்னமாதிரி அவர்ட்ட ப்ரபோஸ் பண்ணுனீங்க?”

''என்னோட சின்ன இதயத்துக்குள்ள இதுக்குமேல என்னால அதை அடைகாத்து வைக்க முடியலை. ஓப்பனா கேக்கறேன், நான் உன்னோட வாழ ஆசைப்படறேன்’னு கேட்டப்ப அப்பாவி செம்பாவை முகத்துல கொண்டு வந்தேன். பயபுள்ள அப்பக்கூட உடனே ஓ.கே சொல்லலை. 'மேரேஜ் இப்ப கிடையாது, ஓகேவா'னு கண்டிஷன் போட்டுட்டுதான் லவ்வுக்கு ஓ.கே சொன்னான்''

''ஸ்கூல் டைம்ல லவ் எதுவும் உண்டா?”

''ஏன் இல்ல? ப்ளஸ் டூ படிக்கிறப்ப ஒருத்தன். நானும் நல்லா படிப்பேன். அவனும் நல்லா படிப்பான். ஆனா என்னைவிட அவன் உயரம் குறைவு. அவனுக்கு என் மேல ப்ரியம். எனக்கும்தான். ஆனா, அது லவ்வா வேற மாதிரியான அக்கறையானு தெரியலை. ஸ்கூல் முடிஞ்சதும் பிரிஞ்சிட்டோம். அவன் பேர் வேணாம். ஏன்னா, ஒருவேளை இன்னும் கல்யாணம் ஆகாம, அதே ப்ரியத்துல இருந்தா இந்தப் பேட்டியை படிச்சிட்டு வந்திடுவானோனு பயமா இருக்கு.''

மானஸ்க்கு கொடுத்த முதல் கிஃப்ட்..

''ரெடிமேட் சட்டை, கூடவே ரெண்டு முட்டை. ரைமிங்கா இருக்கணும்னு இதைச் சொல்லலை. அவனோட ஷர்ட் சைஸ் தெரியாது. அவங்கிட்ட கேட்டு எடுத்தா சஸ்பென்ஸ் இருக்காது. தோழி ஒருத்தி, முட்டை சாப்பிட்டா பாடி உடனே ஃபிட் ஆகும்னா. 'சட்டை  லூஸா இருந்தா முட்டை சாப்பிட்டுட்டுப் போடு'ன்னேன். 'நீதான் லூஸு'ன்னான்''

''மானஸ் ட்ரைவ் பன்ண, ஆல்யா டப்ஸ்மாஷ் பண்ண, ஜாலி ட்ரிப் எங்கெல்லாம் போனீங்க..''?

''நிறைய இடம். ஆனா சென்னைக்குள்தான். பேசணும்னு நினைச்சா கிளம்பிடுவோம். வெளியில எங்க உட்கார்ந்தாலும் ஃப்ரியா பேச முடியலையா, கார் சிட்டியை ரவுண்ட் அடிக்க பேச வேண்டியதையெல்லாம் பேசித் தீர்த்திடுவோம்..''

''பரஸ்பரம் ஒருத்தர்கிட்ட ஒருத்தருக்குப் பிடிக்காதது என்ன''?

''நான் கொஞ்சம் மாடர்னா நடந்துக்கிட்டா அவனுக்குப் பிடிக்காது. 'மார்டன் பொண்ணுங்க ஏமாத்துவங்க'ன்னு சொல்லிட்டே இருக்கான். இன்னும் என்னை நம்பாதது அவன்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம்' '

''எப்போ கல்யாணம்''?

''ஆல்யா ரெடி. மானஸ்தான் முடிவு பண்ணணும்!”