Published:Updated:

"அவரின் காதலர் தின கிஃப்ட் என் லைஃப் டைம் ஃபேவரைட்..!' - ’ராஜா ராணி’ வைஷாலி தனிகா

"அவரின் காதலர் தின கிஃப்ட் என் லைஃப் டைம் ஃபேவரைட்..!' - ’ராஜா ராணி’ வைஷாலி தனிகா
"அவரின் காதலர் தின கிஃப்ட் என் லைஃப் டைம் ஃபேவரைட்..!' - ’ராஜா ராணி’ வைஷாலி தனிகா

"அவரின் காதலர் தின கிஃப்ட் என் லைஃப் டைம் ஃபேவரைட்..!' - ’ராஜா ராணி’ வைஷாலி தனிகா

விஜய் டி.வி-யின் ஹிட் சீரியல்களில் ஒன்று, 'ராஜா ராணி'. இந்த சீரியலில் குறும்புத்தனமான கதாபாத்திரத்தில் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர், வைஷாலி தனிகா. சின்னத்திரை, வெள்ளித்திரை என வலம்வருபவருடன் ஒரு தேநீர் மீட்! 

''என் அப்பா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அம்மா சைக்காலஜி மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர். எனக்கு ஒரு குட்டி தங்கச்சி இருக்காங்க. சின்ன வயசிலேயே நடிக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும். ஆனால், முதன்முதலா நடிப்பு வாய்ப்பு வந்தபோது வீட்டுல எல்லாரும் மறுத்தாங்க. அப்போ, பி.டெக் இன்ஜீனியரிங் படிச்சுட்டிருந்தேன். 'நடிப்புன்னு போயிட்டா படிக்க மாட்டேன்'னு சொன்னங்க. நான் அவங்களுக்கு நல்லா படிப்பேன்னு பிராமிஸ் பண்ணினதும் அரை மனசா சம்மதிச்சாங்க. கொடுத்த பிராமிஸை சரியா காப்பாத்திட்டேன். ஆமாங்க.. அவங்க எதிர்பார்த்த மாதிரி ஃபர்ஸ்ட் கிளாஸ்ல டிகிரி முடிச்சுட்டேன். இப்போ, என் நடிப்புக்கு ஃபேமிலி ஃபுல் சப்போர்ட்'' என உற்சாகமா முன்னுரையுடன் தொடர்கிறார். 

'' 'ராஜா ராணி' சீரியலில் என் அண்ணி கேரக்டரை ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு எப்பவும் சப்போர்ட்டா இருக்கும் அமைதியான கேரக்டர் எனக்கு. ஆனால், ஹூட்டிங் ஸ்பாட்ல, சக நடிகர்களுடன் சேர்ந்துக்கிட்டு செட்டே ஆடுற அளவுக்கு சிரிச்சு கலாட்டா பண்ணுவோம். எல்லோருமே ஒரே ஃபேமிலி மாதிரி இருப்போம். டப்ஸ்மாஷ் பண்றது எனக்குப் பிடிச்ச விஷயம். சும்மா இருக்கும் நேரத்தில் நிறைய வீடியோஸ் அப்லோடு பண்ணுவேன். ஷூட்டிங் ஸ்பாட்லேயே ஃப்ரண்ட்ஸ்கூட சேர்ந்து வீடியோஸ் பண்ணியிருக்கேன். என் ஃபேன்ஸ் விரும்பி கேட்கும் பாடல்களையும் டப்ஸ்மாஷ் பண்ணுவேன்'' என்ற வைஷாலி முகத்தில் பிரகாசம் கூடுகிறது. 

''என் வருங்கால காதல் கணவர் பெயர், சத்யா. நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் ஃப்ரண்ட்ஸ். அப்பவே அவரை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். காலேஜ் படிக்கும்போது, தைரியமா லவ்வை சொன்னேன். என்னை ரொம்ப வெயிட் பண்ணவைக்காம கொஞ்ச நாளிலேயே ஓகே சொல்லிட்டார். அப்போ, ஆரம்பிச்ச லவ் ஜர்னி. என்னுடைய திறமைகளை நல்லா புரிஞ்சு, எப்பவும் என்கரேஜ் பண்ணிட்டே இருக்கும் அவருடைய அக்கறையை நான் ரசிப்பேன். 'உனக்குப் பிடிச்சதை செய். எனக்காக எதையும் மாத்திக்க வேணாம்'னு சொல்வார். நான் நானாக இருக்கிறதில் என்னைவிட அவருக்கு அதிக சந்தோஷம். இப்போ, நான் மீடியாவில் பிஸி. அவர் மெரைன் இன்ஜீனியர். அடிக்கடி பேசிக்கிறதுகூட இல்லை. ஆனால், எங்களுக்குள் காதல் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே இருக்கு. ஏழு வருட காதலை வெளியில் சொல்லியாச்சு.

முன்னாடி, எந்த விழாவையும் நாங்க சேர்ந்து கொண்டாடினதுகூட கிடையாது. ஆனால், இந்த வருடம் எங்களுக்கு ஸ்பெஷல். ஏன்னா, இந்த வருடம் எல்லா விஷேசங்களையும் சேர்ந்து கொண்டாடினோம். லவ்வர்ஸ் டே அன்னிக்கு நான் அவருக்கு சர்ப்ரைஸ் பண்ண, கோல்டு செயின் வாங்கிட்டுப் போனேன். அவரோ டைமண்டு ரிங் வாங்கிக்கொடுத்து என்னை சர்ப்ரைஸ் பண்ணிட்டார். இதுக்கு முன்னாடியும் நிறைய கிஃப்ட்ஸ் கொடுத்துருக்கோம். ஆனால், வீட்டுல எல்லோருக்கும் தெரிஞ்சு ஷேர் பண்ணிகிட்ட முதல் பரிசு இதுதான். அதனால், எங்களுடைய லைஃப் லாங் ஃபேவரைட். ரெண்டு வீடுகளிலும் காதலை ஏத்துக்கிட்டாங்க. சின்ன வயசிலிருந்து எங்க நட்பு பற்றி தெரியும் என்கிறதால், பேரன்ட்ஸை சம்மதிக்கவைக்கிறம் ஈஸியா இருந்துச்சு. சத்யா ஃபேமிலியில் எல்லோரும் எனக்கு பயங்கர சப்போர்ட். இப்படித்தான் இருக்கணும்னு அவங்க எந்த ரூல்ஸூம் போடறதில்லை. என்னுடைய விருப்பம்தான் அவங்களுக்கு முக்கியம்'' எனப் புன்னகைத்தார். 

'சரி, காதல் டூ கல்யாணம் எப்போவாம்? 

''என்னுடைய திறமையை இன்னும் ஃபுரூப் பண்ணனும். அது என்னுடைய பெரிய கனவு. சிவகார்த்திகேயனோட 'சீமராஜா' படத்தில் மெயின் ரோலில் நடிக்கிறேன். அந்தப் படம், என் நடிப்பு பயணத்தில் ஒரு திருப்புமுனையா நிச்சயம் இருக்கும். ஸோ, இன்னும் ரெண்டு, மூணு வருஷம் கழிச்சுதான் கல்யாணம். நிச்சயமா எல்லோருக்கும் அறிவிப்பேன். முக்கியமான ஒரு விஷயம், என் ஃபேன்ஸ்கிட்டேயிருந்து நிறைய கிஃப்ட்ஸ் வந்துட்டே இருக்கு. அவங்களின் அன்புக்கு நன்றி'' என்ற வைஷாலி தனிகா முகத்தில் அத்தனை ஆனந்தம்.

அடுத்த கட்டுரைக்கு